என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவ பிரிவில்"
- வாழை இலை குளியல் மற்றும் மண் குளியல் சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது.
- இந்த சிகிச்சைகள் மூலம் பயன்பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பவானி:
பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு பவானி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து பல்வேறு வகையான உடல்நல குறைவுகளுக்கு மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.
அதேபோல் இந்த மருத்து வமனையில் நுழைவாயில் பகுதியில் அரசு சித்த மருத்துவ பிரிவு உள்ளது.
டாக்டர்.கண்ணுசாமி மூலம் தினசரி இங்கு வரும் நோயா ளிகளுக்கு வெளிப்புற சிகிச்சையில் நீராவி குளியல், சிரசு எண்ணெய், புற வளையம், வர்மக்கலை, தொக்கணம் (மசாஜ்) போன்ற சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் பலர் இதுவரை பயன்படுத்தி குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு சித்த மருத்துவ பிரிவில் தற்போது வாழை இலை குளியல் மற்றும் மண் குளியல் சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த சிகிச்சைகளை பவானி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் வெளியூரில் உள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தந்து இந்த சிகிச்சைகள் மூலம் பயன்பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.






