லாட்டரி விற்ற 4 பேர் மீது வழக்கு

லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்ற 4 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கிரு ஷ்ணம்பாளையம் சுற்றுவ ட்டார பகுதியில் லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலி ன் பேரில் அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த வண்டியூரான் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் முரளி (வயது 38), கிருஷ்ணாபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த பன்னீ ர்செல்வம் மகன் சிவகுமார் (540 மற்றும் சிவா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகள், 2 மொபைல் போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 90 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைப்போல் சத்தியமங்கலம் கரட்டூர் சாலை யில் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த கரட்டூர் சுப்பிரமணியர் தெருவை சேர்ந்த கிருஷ்ணப்பகவுண்டர் மகன் பழனிச்சாமி (60) என்பவர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகி ன்றனர்.

மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com