என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வாலிபர் லாரியில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதினாலும், திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாலும் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டிகள் அதிக அளவில் தற்போது பயன்படுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் மைசூரில் இருந்து அந்தியூர் வழியாக ஈரோட்டிற்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தாமரைக்கரை அருகே செட்டிநொடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ேமாட்டார் சைக்கிளில் வந்த வெள்ளிமலை பகுதியை சேர்ந்த வாலிபர் லாரியில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    மேலும் இதுகுறித்து பர்கூர் மலைவாழ் மக்கள் கூறுகையில்,

    அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. மேலும் சாலைகள் சரிவர அந்த பகுதியில் போடப்ப டாததே இதற்கு காரணம் என்றும், குண்டும், குழியுமாக இருக்கும் சூழலை ஏற்பட்டிருப்பதனால் லாரி டிரைவர்கள் அந்த குழிகளில் விடாமல் வேறு பகுதிக்கு வாகனத்தை இயக்க வே ண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டு எதிரே வரும் வாகனத்தின் மீது மோதும் நிலை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

    இதனை நெடுஞ்சாலைத் துறை உடனடியாக பார்வையிட்டு அதனை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
    • நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சென்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூரில் நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை நெடுஞ்சாலைத் துறை கோபி கோட்ட பொறியாளர் ஜெய லட்சுமி தொடங்கி வைத்தார்.

    பேரணியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு வேண்டும் உள்ளிட்ட வசங்களுடன் பதாகைகளை ஏந்தி நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சென்றனர்.

    பேரணியில் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் விஜய லட்சுமி, கதிர்வேல், உதவி பொறி யாளர்கள் சந்தோஷ், வேந்தன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியா ளர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
    • அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறச்சலூர்:

    அறச்சலூர் அருகே உள்ள பச்சாகுட்டையை சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயி.

    இவர் தனது ஊரான பச்சாக்குட்டையில் இருந்து பள்ளியூத்து செல்லும் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு மண்கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில் ராமசாமிக்கு பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

    அறச்சலூர்:

    அறச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) விவசாயி. இவர் தனது சொந்த வேலை காரணமாக சென்னிமலைக்கு தனது மொபட்டில் சென்றார்.

    பின்னர் இரவு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஊசிபாளையம் என்ற இடத்தின் அருகே சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மொபட் மோதாமல் இருக்க மொபட்டை திருப்பி உள்ளார்.

    இதில் மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திரசேகரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்திரசேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • வாகனங்கள் ஊர்ந்து சென்றது.

    பவானி:

    பவானி கூடுதுறைக்கு மகாளய அமாவாைசயை யொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்தனர். மேலும் பொதுமக்கள் பலர் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர்.

    இதனால் பவானி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த ரோடு மேட்டூர், அந்தியூர் மற்றும் பெங்களூர் செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

    ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் லட்சுமி நகர் முதல் பவானி பஸ் நிலையம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றது.

    பவானி கூடுதுறையில் இருந்து லட்சுமி நகர் செல்ல சுமார் 1 மணி நேரமானது. மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இரு சக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் சிறிய ரோடுகள் மற்றும் தெருக்களிலும் புகுந்து சென்றனர்.

    இதனால் பவானி நகரில் எங்கு பார்த்தாலும் வாகனங்களாகவே தென்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகிறார்கள்.

    • கிரிவாயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கோபி அருகே மொடச்சூர் பகுதி அண்ணா நகரை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் கிரிவாயன் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.26 அடியாக சரிந்து உள்ளது.
    • அணையில் இருந்து 2,650 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.26 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,761 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.56 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 9.51 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.95 அடியாகவும் உள்ளது.

    • கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதி சாலைத் தெருவை சேர்ந்தவர் பெரு மாள் மனைவி கிருஷ்ண வேணி (வயது 48). இவர் தற்போது ஈரோடு ரங்க ம்பாளையம் ஜீவா நகரில் தனது மகன் பாலமுருகன் (27) என்பவருடன் வசித்து வந்தார்.

    கிருஷ்ணவேணி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரம்பரிய நெல் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தூயமல்லி என்ற பாரம்பரிய நெல் பவானி அரசு விதைப்பண்ணையில் சென்ற ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான திட்டக்கூறு களில் ஒன்றான நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகம் தூயமல்லி விதைகள் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.25 வீதம் ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பாரம்பரிய நெல் பயன்பாடு நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கிடைப்பதுடன் இவ்வாறான ரகங்கள் அனைத்து விதமான மண் வளத்திலும், பாதகமான வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை கூட தாங்கி வளரக்கூடிய திறன் படைத்ததாகவும் உள்ளது.

    மேலும் இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது. கால்நடைகள் பாரம்பரிய நெல் ரகத்தின் வைக்கோலை விரும்பி உட்கொள்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கோபிசெட்டி பாளையம், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் டி.என்.பாளையம் தவிர மற்ற வட்டாரங்களில் குறைந்த அளவே மொத்தம் 1314 கிலோ மட்டுமே இருப்பு உள்ளது.

    எனவே பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து மானிய விலையில் வாங்கி பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.வெங்கடேசகன் தெரிவித்துள்ளார்.

    • அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அம்மை, அப்பன் உற்சவ சிலைகள் கோவிலை சுற்றி வந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.
    • புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து மல்லியம்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது ஊரில் இருந்து புளியம்பட்டி வார சந்தைக்கு காய்கறி பொருட்களை வாங்க வந்துள்ளார்.

    பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு மல்லியம்பட்டி க்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் அமர்ந்துள்ளார். இதனையடுத்து பொன்னம்மாள் தனது ஊர் செல்வதற்கு அரசு பஸ் வந்தவுடன் அதில் ஏறி டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு தலை சுத்தி மயக்கம் வந்ததாக கூறுபடுகிறது.

    உடனே அருகில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின்பு சிறு தூரம் சென்றதும் மூதாட்டி மயக்கம் தெளிந்து பார்த்த பொழுது பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது அவருக்கு தெரிய வந்தது. பதட்டம் அடைந்த மூதாட்டி அலறினார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர், கண்டெக்டர் உட்பட அனைவரும் தேடி பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மூதாட்டி பொன்னம்மாள் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் பஸ் நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒற்றை காட்டு யானை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • கால்நடை மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் புலிகள் காப்பக த்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இவைகள் அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீரு க்காகவும் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்தி ற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை நேற்று காலை 6 மணியளவில் அய்யம்

    பாளையம் கிராமத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள், சோளார் மின் வேலி, தண்ணீர் குழாய் பைப்புகளை சேதப்படுத்தியது.

    இதனை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க ப்பட்டு சுமார் 8 மணி நேரம் போராடி யானையை வனத்தி ற்குள் விரட்டி அடித்தனர்.

    அந்த ஒற்றை காட்டு யானை அய்யம்பாளையம் கிராம பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியையொட்டி முகாமிட்டுள்ளதால் மீண்டும் கிராம பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்து அந்த ஒற்றை காட்டு யானை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் ஆனமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 2 கும்கி யானைகளை வைத்து மயக்க ஊசி செலுத்தி யானை பிடிப்பதற்கு நேற்று கபில் தேவ் என்ற கும்கி யானை லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.

    விளாமுண்டி வனச்சரக அலுவலக பகுதியில் கபில்தேவ் யானை நிறுத்தி வைத்து உள்ளனர். மேலும் முத்து என்ற கும்கி யானையும் இன்று வரவழைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் சென்றனர். அங்கு காட்டுயானை நடமாட்டம் கண்காணிக்க பட்டு வன கால்நடை மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×