அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை

கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை
Published on

ஈரோடு:

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதி சாலைத் தெருவை சேர்ந்தவர் பெரு மாள் மனைவி கிருஷ்ண வேணி (வயது 48). இவர் தற்போது ஈரோடு ரங்க ம்பாளையம் ஜீவா நகரில் தனது மகன் பாலமுருகன் (27) என்பவருடன் வசித்து வந்தார்.

கிருஷ்ணவேணி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com