பவானியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பவானி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வாகனங்கள் ஊர்ந்து சென்றது.
பவானியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

பவானி:

பவானி கூடுதுறைக்கு மகாளய அமாவாைசயை யொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்தனர். மேலும் பொதுமக்கள் பலர் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர்.

இதனால் பவானி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த ரோடு மேட்டூர், அந்தியூர் மற்றும் பெங்களூர் செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் லட்சுமி நகர் முதல் பவானி பஸ் நிலையம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றது.

பவானி கூடுதுறையில் இருந்து லட்சுமி நகர் செல்ல சுமார் 1 மணி நேரமானது. மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இரு சக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் சிறிய ரோடுகள் மற்றும் தெருக்களிலும் புகுந்து சென்றனர்.

இதனால் பவானி நகரில் எங்கு பார்த்தாலும் வாகனங்களாகவே தென்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com