பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.26 அடியாக சரிந்து உள்ளது.அணையில் இருந்து 2,650 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.26 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,761 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.56 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 9.51 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.95 அடியாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com