என் மலர்
ஈரோடு
ஈரோட்டில் நடந்த ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றினார். இதன்காரணமாக தமிழகம் மின்தடை இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.

கடந்த 26-ந் தேதி சென்னையில் ஒரு பகுதியில் மின்பாதை கம்பி அறுந்ததால் இரவு 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இதை எதிர்க்கட்சியை சேர்ந்தவர் (மு.க. ஸ்டாலின்) விமர்சனம் செய்தார். தமிழக அரசு மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், பணிகளில் சுணக்கம் உள்ளது என்றும் கூறினார்.

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 70 நாட்களாக 1000-க்கும் மேற்பட்ட கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார். பணிகளும் சுணக்கமின்றி நடந்து வருகிறது. வட சென்னையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு கொண்டதற்கிணங்க மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு சென்றேன்.
அதிகாலை 3.30 மணி வரை இரவு முழுவதும் அங்கேயே இருந்து பிரச்சினையை தீர்த்து மின்சாரம் வரும் நிலைமையை ஏற்படுத்திய பின்பே புறப்பட்டு சென்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாங்கள் பாசத்தால் பிணைந்து இருக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்கிறோம். எவராலும் அசைக்க முடியாத அளவில் நாங்கள் இணைந்து செயல்பட்டு புதிய வரலாற்றை படைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோபி:
கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையம் இந்திரா நகரை சோந்தவர் சதீஷ் (வயது 22) கூலி தொழிலாளி. இவரது மனைவி பாமளா (19). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது. திருமணமான தொடக்கத்தில் இவர்கள் சந்தோசமாக குடும்பம் நடததினர்.
இந்த நிலையில் இவர்களது வாழ்க்கையில் திடீர் என்று புயல் வீச தொடங்கியது . இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .
இதனால் பாமளா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்ததால் மனம் வெறுத்து போன சதீஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அவர் தனது வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் மட்டம் தொடர்ந்து 41, 40 அடியில் நீடித்து வருகிறது. அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படா விட்டாலும் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 135 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் நேற்று வினாடிக்கு 192 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி லேசாக அதிகரித்து வினாடிக்கு 337 கன அடி வீதம் தண்ணீர் வந்த கொண்டிருக்கிறது.
ஊட்டி மலைப்பகுதியில் பில்லூர் அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி கடந்த 10 மாதமாகியும் யாருடையது? என தெரியாமல் உள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டி.என். பாளையம் வனச்சரகம் மல்லியம்மன் துர்க்கத்தில் கடந்த ஆண்டு ஜீலை மாதம் 12-ந்தேதி மல்லியம் மன் துர்க்கம் வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் வன விலங்கு கணக்கெடுப்பு நடத்த சென்றிருந்தனர்.
அப்பகுதியிலுள்ள கொய்யாத்தோப்பு அருகிலுள்ள கல் சந்தில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதை கண்ட வனக்காப்பாளர் முத்துசாமி எடுத்து கடம்பூர் போலீசில் புகார் அளித்து ஒப்படைத்தார். புகாரை போலீசார் பதிவு செய்தனர்.
ஆனால் இன்று வரை அந்த துப்பாக்கி யாருடையது? என தெரியவில்லை. வேட்டையாடும் கும்பல் வைத்ததா? அல்லது மாவோயிஸ்டுகள் யாரேனும் பதுக்கி வைத்து விட்டு சென்றனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு துப்பு துலக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
கோபி தனியார் திருமண மண்டபத்தில் கோபி சட்டமன்ற தொகுதி மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
முகாமில் பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, ரேசன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை கேட்டு மனுக்களை அமைச்சர் செங்கோட்டையன் பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
டெட் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும் தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்யப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பாடவாரியாக அறைகள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையானது எவ்வித ஒளிவுமறைவின்றி செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் இந்தக் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்.சி. தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் வெளியாகும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறப்பதற்குள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் 25 சதவீத அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அதற்கான நிதியை அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே தமிழக கல்வி துறையானது முன் மாதிரியாக விளங்கும் அளவிற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு திண்டல் செங்கோடம்பள்ளம் பகுதியில் சுப்பிரமணியன், சிவக்குமார், செந்தில், கிருஷ்ண மூர்த்தி, அர்ஜூனன் ஆகிய 5 பேரின் குடிசை வீடுகள் தீ விபத்தில் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் சென்றார். பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தலா ரூ. 3 ஆயிரம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் கட்டும் பணி அடுத்த வாரம் தொடங்கும்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை விரைவில் சுமூகமான முறையில் நடக்கும். டி.டி.வி. தினகரன் மீது போடப்பட்டுள்ள வழக்கு 100 சதவீதம் பொய்யானது. இந்த வழக்கில் இருந்து அவர் விரைவில் விடுதலை ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பெரியார்நகர் அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் முற்றிலும் வறண்டு விட்டது. ஆங்காங்கே தண்ணீர் குட்டைபோல் உள்ளது.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில் மணல்மேடு என்ற பகுதி உள்ளது. இங்கு காங்கயம் கூட்டு குடிநீருக்கான குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெரிய குழி தோண்டப்பட்டு உள்ளது. தற்போது இங்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
திருப்பூர் வாவி பாளையத்தைச் சேர்ந்த 20 பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து செல்ல வந்தனர்.
இதில் முருகன் என்பவரின் மகன் ரகுபதி (வயது 18) செல்வம் என்பவரின் மகன் சங்கர் (23) ஆகிய 2 பேரும் கூட்டு குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள தேங்கிய தண்ணீரில் குளிக்க ஆசைப்பட்டனர்.
இதையொட்டி அவர்கள் அந்த தண்ணீரில் இறங்கி குளித்தனர்.
இதில் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் தண்ணீரில் மூழ்கினார்கள். சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.
வாலிபர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
இதை கண்டு அவர்களுடன் வந்தவர்கள் கதறிஅழுதனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் அங்கு விரைந்தனர். பலியான 2 பேர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தண்ணீரில் மூழ்கி பலியான ரகுபதி, சங்கர்.
ஈரோடு:
கோபி அருகே உள்ள மொடச்சூர் சங்குவார் குட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவருக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆஷாராணி என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.
திருமணமான 6 மாதத்தில் இருந்தே தாய் வீட்டுக்கு சென்று நகை, பணம் வாங்கி வருமாறு கூறி ஆஷாராணியை ரமேஷ் கொடுமைப்படுத்தினாராம். மேலும் சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறத்தி உள்ளார்.
இவற்றை தாங்க முடியாமல் தவித்த ஆஷாராணி 2-7-2014 அன்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஷா ராணியை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்த ரமேஷை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு இன்று தீர்ப்பு கூறினார்.
ஆஷாராணியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரமேசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
வரதட்சணை கேட்டு கொடுமை செய்த வழக்கில் ரமேசுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 1000 அப ராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். அடித்து துன்புறுத்திய வழக்கில் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நாகரத்தினம் வாதாடினார்.
கோபி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தந்தை, தாய் இல்லாததால் தனது தாத்தா, பாட்டி பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.
திடீரென அவரது தாத்தா இறந்து போனார். பாட்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டது. எனவே பாட்டியால் சிறுமியை பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோபியில் உண்டு உறைவிட பள்ளியில் அந்த சிறுமி தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்தார். இந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் சிறுமியை பார்த்துக்கொள்வதாக கூறினர்.
அதன்படி அந்த உறவினரின் வீட்டுக்கு சென்ற சிறுமி அங்குள்ள வேலைகளை செய்து வந்தார். அங்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக தெரிகிறது.
சித்ரவதையால் சிறுமி மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் இது தொடர்பாக ஈரோடு ‘சைல்டு லைன்’ அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுமி சித்ரவதை செய்யப்படும் தகவலை உறுதி செய்த ‘சைல்டு லைன்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன், உறுப்பினர்கள் ஜெகநாதன், நிஷா ஆகியோர் சிறுமியின் உறவினர் வீட்டுக்கு சென்று மீட்டனர்.
பின்னர் ஈரோடு கொள்ளுக்காடு மேட்டில் உள்ள காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.
கோபி:
கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக பல இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன.
பொலவக்காளிபாளையம், கடுக்காம்பாளையம், காளாங்காட்டூர், வெள்ளாங்கோவில் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.
இந்த சேதம் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றி அவர்கள் கூறியதாவது:-
அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சூறாவளிக்கு சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர். சூறாவளி காற்று காரணமாக வெள்ளாங்கோவிலில் இருந்து கோபி செல்லும் சாலையில் வெள்ளை வேல மரம் முறிந்து விழுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று சுழட்டி சுழட்டி அடித்து மழை பெய்தது. அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூரில் ரோட்டோரம் உள்ள ஒரு புளியமரம் காற்றில் முறிந்து விழுந்தது.
இதேபோல் சிங்கம் பேட்டை பகுதியில் ஒரு மரம் சாய்ந்தது. இதனால் மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2½ மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணி நடந்தது. மேலும் இதேபோல் சிறிய.. சிறிய மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
பலத்த காற்று வீசியதால் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய-விடிய மின்சாரம் இல்லை இதனால் மக்கள் தூக்கம் இன்றி மிகவும் அவதிப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு சுத்தானந்தன் நகர் பின்புறம் உள்ள காலி இடத்தில் சூரம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 38) அரசு அனுமதியின்றி 10 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையம், வி.என்.எம். நகரில் சூரம்பட்டிவலசை சேர்ந்த குமார் (32) என்பவர் 3 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை ஈரோடு வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெரோனிகா கைது செய்தார்.
ஈரோடு திண்டலில் உள்ள மளிகை கடை அருகில் திண்டல் ரோடு புதுக் காலனியை சேர்ந்த சுகுமார் டேவிட் என்பவர் 8 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரை ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் கைது செய்தார்.
ஈரோடு வில்லரசம்பட்டி சாணார்பாளையம் கருப்ப ராயன் கோவில் அருகே கிட்டுசாமி (62) என்பவர் 5 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரை ஈரோடு வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் கைது செய்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்த காஜா உசேன்(26) என்பவர் 6 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு கைது செய்தார்.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த இளங்கோ (45) என்பவர் 6 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி கைது செய்தார்.
பவானி-மேட்டூர் ரோடு ஊராட்சி கோட்டை, எம். ஜி.ஆர். நகரில் ராமநாதன் (63) என்பவர் 5 மது பாட் டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரகிமான் கைது செய்தார்.






