என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே மனைவி பிரிந்து சென்றதால் புது மாப்பிள்ளை தற்கொலை
    X

    கோபி அருகே மனைவி பிரிந்து சென்றதால் புது மாப்பிள்ளை தற்கொலை

    கோபி அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையம் இந்திரா நகரை சோந்தவர் சதீஷ் (வயது 22) கூலி தொழிலாளி. இவரது மனைவி பாமளா (19). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது. திருமணமான தொடக்கத்தில் இவர்கள் சந்தோசமாக குடும்பம் நடததினர்.

    இந்த நிலையில் இவர்களது வாழ்க்கையில் திடீர் என்று புயல் வீச தொடங்கியது . இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .

    இதனால் பாமளா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்ததால் மனம் வெறுத்து போன சதீஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து அவர் தனது வீட்டில் வி‌ஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×