என் மலர்
திண்டுக்கல்
- புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.
- பூக்கள் பறிப்பு கூலிக்கே கட்டுப்படியாகவில்லை. இதனால் செண்டு மல்லி, கோழிக்கொண்டை பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பூட்டு, பிரியாணிக்கு மட்டுமின்றி பூக்களுக்கும் பெயர்போனது. நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார் சத்திரம், ஜம்புலியம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் அதிகளவு பயிரிடப்படுகிறது.
பெண்கள் பயன்படுத்தும் மல்லிகை, முல்லை, ஜாதி பூ, காக்கரட்டான் ஆகியவையும், மாலைக்கு பயன்படுத்தும் கோழிக்கொண்டை, சம்பங்கி, ரோஸ், வாடா மல்லி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 30 டன் பூக்கள் வரையும் வரத்து உள்ளது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கோழிக்கொண்டை கிலோ ரூ.15க்கும், சம்மங்கி ரூ.20, வாடா மல்லி ரூ.25, செண்டு மல்லி ரூ.15, ரோஸ் ரூ.40, வாடா மல்லி ரூ.25க்கும் விலை போனது. அதேபோல் முல்லை ரூ.100, ஜாதி பூ ரூ.250, காக்கரட்டான் ரூ.250க்கும் விற்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பரவலாக பருவமழை பெய்து வருவதால் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.800க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து விவசாயி சுப்புராஜ் கூறுகையில், மாலைக்கு பயன்படுத்தும் பூக்கள் திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் அதிகளவு பயிரிடப்படுகிறது. தற்போது புரட்டாசி மாதம் காரணமாக விஷேச தினங்கள் குறைவு காரணமாகவும் இந்த பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. பூக்கள் பறிப்பு கூலிக்கே கட்டுப்படியாகவில்லை. இதனால் செண்டு மல்லி, கோழிக்கொண்டை பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். அடுத்து மஹாளய அமாவாசையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார்.
- புதிய செயலி அறிமுகப்படுத்தியதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.
- குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
ஊராட்சிகளில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைதிட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் போதுமான வருமானம் கிடைப்பதால் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலை நேரத்தை 9 மணிமுதல் 5 மணிவரை என்பதை 10 மணிமுதல் 4 மணிவரை என குறைக்கவேண்டும் என பயனாளிகள் கேட்டுெகாண்டிருந்தனர். இந்தநிலையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.
இதனால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலை 8 மணிக்கு வரவேண்டும் என பணித்தள பொறுப்பாளர்கள் அறிவுறுத்தினர். குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு உணவு சமைத்து கொடுத்து காலை 8 மணிக்கு வருவது என்பது இயலாத காரியம். எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும். முறையாக சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா கூறுகையில், அரசு கடந்தமாதம் ஒரு புதிய செயலியை அமல்படுத்தி உள்ளது. இதில் 9 மணிக்குள் மட்டுமே பயனாளிகள் பெயரை பதிய முடியும். எனவே அனைத்து 100 நாள் பணியாளர்களும் 8 மணிக்கு வரவேண்டும் என நிர்பந்திக்கவேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இரும்பு வியாபாரியை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
- 6 பேர் என்னை மிரட்டி என்றைக்கு இருந்தாலும் உனது கணவர் சாவு எங்கள் கையில்தான் என்று கூறி வந்தாக மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அழகர் (வயது 45). இவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு பழைய இரும்புக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று மதியம் தனது கடை அருகே நின்று கொண்டு இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அழகரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதா என்றும், அதில் கொலையாளிகள் உருவம் பதிவாகியுள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அழகரின் மனைவி மேரி (40) நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
நானும் எனது கணவர் அழகரும் காதலித்து கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் நிலக்கோட்டை மற்றும் கரூரில் வசித்து வருகின்றனர்.
2 மகன்கள் படித்து வரும் நிலையில் கண்ணன் என்பவர் மட்டும் சென்ட்ரிங் வேலைக்கு சென்று வருகிறார். நான் எனது கணவருடன் இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தேன். கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த சுள்ளான் ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் எனது கணவர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே திண்டுக்க ல்லைச் சேர்ந்த கார்த்தி, கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சிவகணேச சபரி, பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம், சதீஸ், சர்புதீன் மற்றும் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த நபர் என 6 பேர் என்னிடம் மிரட்டி வந்தனர். என்றைக்கு இருந்தாலும் உனது கணவர் சாவு எங்கள் கையில்தான் என்று கூறி வந்தனர்.
இதனால் பாரதிபுரத்தில் இருந்த நாங்கள் நிலக்கோட்டைக்கு வந்து வேலை பார்த்து வந்தோம். ஆனால் நாங்கள் இங்கு இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்கள்தான் பழிக்கு பழியாக எனது கணவரை வெட்டி கொலை செய்திருக்க கூடும். எனவே அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது புகார் மனுவில் மேரி தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட அழகரின் உடல் நிலக்ேகாட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
- இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
- மதியம் 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் புறப்பட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்களும் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவிலில் முருகப்பெருமான், துவாரபாலகர்கள் மற்றும் கோவில் தெய்வங்களுக்கு காப்புகட்டுதல் நடைபெறும்.
மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா அன்றே தொடங்கும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும்.
மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் 9ம் நாளான 23-ந் தேதி விஜயதசமியன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் புறப்பட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா மாலை 5 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் கோதை மங்கலம் சென்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் முத்துக்குமாரசாமி கோவிலுக்கு திரும்பி வரும் நிகழ்ச்சியும், அர்த்தஜாம பூஜையும் நடைபெறும். இதனையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வந்தடையும்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 9 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது. 24-ந் தேதி முதல் தொடர்ந்து வழக்கம் போல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நர்சு பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
- மோசடி நர்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மேற்கு ஆேராக்கியமாதா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது55). இவர் தனது மகனுக்கு அரசு வேலை வேண்டி முயற்சி செய்து வந்தார்.
அப்போது திண்டுக்கல் முத்தழகுபட்டி தெற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி மேரி (56) என்பவர் தனக்கு பல்வேறு அதிகாரிகளை தெரியும் என்றும், தன்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் என்றும் ஆரோக்கியதாசிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பி அவர் ரூ.3 லட்சம் வரை சாந்திமேரியிடம் கொடுத்துள்ளார்.
இதேபோல் பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆரோக்கியதாஸ் அறியவே தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் சாந்திமேரி ஏமாற்றி வந்துள்ளார்.
எனவே ஆரோக்கிய தாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி.உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ்செல்வி, ராஜகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சாந்திமேரி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது உறுதியானது.
இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் அவரை கைதுசெய்தனர். சாந்திமேரி ஒட்டன்சத்திரம் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
வடமதுரை:
வடமதுரை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்ட த்தில் 2023-24-ஆம் ஆண்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடத்தப்பட உள்ளது.
முகாம்களில் நோய்வா ய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்க ளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார ந டவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராம்நாத், உதவி இயக்குநர் விஜயகுமார், திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் முகமது அப்துல்காதர், ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பில்லமநாய க்கன்பட்டி, வன்னியபாறை ப்பட்டி, நடுப்பட்டி, கோசுக்கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தினர்.
- சோதனை நடத்திய போது ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாண்டியன் நகர் 3-வது தெருவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் அதிர டியாக அலுவலகத்துக்குள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அலுவலக கண்காணி ப்பாளர் மருதநாயகம் அறைக்கு சென்று சோதனை நடத்திய போது ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் குறித்து அ வரிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்க வில்லை.
இதனைத் தொடர்ந்து கணக்கில் வராத அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்குள்ள அலுவலர்களிட மும் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் அரசு அலுவலர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து அளிக்கும் புகார்களின் அடிப்படையில் இது போன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் தற்போதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
குள்ளனம்பட்டி:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சாணார்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார்.
இதில் மத்திய அரசு வழங்கக்கூடிய 100 நாள் வேலையை நம்பி மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 10 முதல் 15 வாரங்களாக ஊதியம் தராததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் ஒன்றிய தலைவர் முருகன், பொருளாளர் பழனியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதியிடம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
- ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
- ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள புது ரோடு நாகைய க்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 58). இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை யிலான போலீசார் பிரேத த்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்க ளில் பன்றி, காட்டெருமை, யானைகள் ஆகியவற்றால் பயிர்கள் சேதப்படுத்த ப்பட்டு வருகிறது.
- பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்களில் பன்றி, காட்டெருமை, யானைகள் ஆகியவற்றால் பயிர்கள் சேதப்படுத்த ப்பட்டு வருகிறது.
இந்த பயிர்களுக்கு முழு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், வன விலங்குகளால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகளால் பாதிக்க ப்பட்டு காயம் அடைந்த வர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும். கேரள அரசை போல பன்றிகளை ஒழித்திட அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு தலைமை வகித்தார். நிர்வாகிகள் பெருமாள், ராமசாமி, தயாளன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- மகனை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்ததாகவும் அப்போது தனது மகன் இறந்து கிடந்ததாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- பிரேத பரிசோதனையில் வாலிபரை அடித்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேற்கு பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சரத்குமார் (25) என்ற மகனும் சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சரத்குமார் தனியார் வாகனம் ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆக வில்லை.
சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து சரத்குமார் தனது தந்தை மற்றும் சகோதரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். பின்னர் சரத்குமாரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்ததாகவும் அப்போது தனது மகன் இறந்து கிடந்ததாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது சரத்குமாரின் பின் தலையில் பலத்த ரத்தக்காயம் இருந்தது. அப்போது வீட்டுக்குள் அடைத்ததால் மேற்கூரை வழியாக தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தலையில் அடி பட்டு இறந்து விட்டார் என்றும் ஆறுமுகம் தெரிவித்தார். இருந்தபோதும் அவரது பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்தது.
இதனையடுத்து சரத்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சரத்குமார் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. பின்னர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, வேறு வழியில்லாமல் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குடிபோதையில் தகராறு செய்ததால் மகனையே தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காலை நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் இரவு 8 மணிக்கு மேல் அரசு பஸ்கள் திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டைக்கு இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- இரவு 10 மணி வரை நிலக்கோ ட்டைக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இப்பகு தியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் தினந்தோறும் கல்வி, வேலை வாய்ப்புக்காக திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், கொடைக்கா னல் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நகரங்களில் இருந்து தனியார் பஸ்கள் போது மான அளவு இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரங்க ளில் பஸ்கள் இயக்கப்பட்டா லும் இரவு 8 மணிக்குமேல் அரசு பஸ்கள் திண்டுக்கல்லி ல் இருந்து நிலக்கோட்டைக்கு இயக்கப்படவில்ைல என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வேலை மற்றும் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் மக்கள் அடுத்தடுத்து டவுன் பஸ்களை பிடித்து ஊருக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவ தோடு பண விரையமும் உண்டாகிறது. எனவே இரவு 10 மணி வரை நிலக்கோ ட்டைக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






