search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன விலங்குகளால் பயிர் சேதம்: உயிர் பலியை தடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    வன விலங்குகளால் பயிர் சேதம்: உயிர் பலியை தடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்க ளில் பன்றி, காட்டெருமை, யானைகள் ஆகியவற்றால் பயிர்கள் சேதப்படுத்த ப்பட்டு வருகிறது.
    • பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்களில் பன்றி, காட்டெருமை, யானைகள் ஆகியவற்றால் பயிர்கள் சேதப்படுத்த ப்பட்டு வருகிறது.

    இந்த பயிர்களுக்கு முழு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், வன விலங்குகளால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகளால் பாதிக்க ப்பட்டு காயம் அடைந்த வர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும். கேரள அரசை போல பன்றிகளை ஒழித்திட அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு தலைமை வகித்தார். நிர்வாகிகள் பெருமாள், ராமசாமி, தயாளன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×