search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்- கலெக்டர்  தொடங்கி வைத்தார்
    X

    கால்நடை சுகாதார முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    வடமதுரை:

    வடமதுரை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 2023-24-ஆம் ஆண்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடத்தப்பட உள்ளது.

    முகாம்களில் நோய்வா ய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்க ளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார ந டவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராம்நாத், உதவி இயக்குநர் விஜயகுமார், திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் முகமது அப்துல்காதர், ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பில்லமநாய க்கன்பட்டி, வன்னியபாறை ப்பட்டி, நடுப்பட்டி, கோசுக்கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×