ரெயில் மோதி மனநலம் பாதித்தவர் பலி

ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள புது ரோடு நாகைய க்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 58). இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை யிலான போலீசார் பிரேத த்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com