என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் லாரி மோதி கவிழ்ந்தது.
    • நிலக்கரி சாலை முழுவதும் கொட்டியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த ஜெயராஜ்(வயது42) என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் கிளீனராக சேலம் மாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோகுல் (22) உடனிருந்தார்.

    இன்று அதிகாலை திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் லாரி மோதி கவிழ்ந்தது. இதில் நிலக்கரி சாலை முழுவதும் கொட்டியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து டிரைவர் ஜெயராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த கோகுலை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 54 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இதனால் சுமார் ரூ. 2¼ கோடி வாடகை பாக்கி ஏற்பட்டது.
    • வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 164 கடைகள் உள்ளது. ஏலம் விடப்பட்டு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 54 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இதனால் சுமார் ரூ. 2¼ கோடி வாடகை பாக்கி ஏற்பட்டது.

    இந்த நிதி இழப்பு காரணமாக மாநகராட்சி திட்டப் பணிகள் செயல்படுத்த முடியாமல் நிர்வாகம் திணறியது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும் காலம் தாழ்த்தும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் பஸ்நிலைய பகுதியில் உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையில் நகர அமைப்பு பொறியாளர் தன்ராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் உடனடியாக ரூ.10 லட்சம் வசூலானது.

    இதேபோல் திண்டுக்கல் மாநகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த கட்டிடதொழிலாளி பாண்டியராஜன்(34). இவர் நேற்றுமுன்தினம் இரவு திண்டுக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்து கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின்பேரில் மறியலை கைவிட்டனர். இருந்தபோதும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என இன்று 2-ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாநிதி, கண்ணாகாந்தி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவா ளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது தொடர்பில் இருந்தவர்கள் யார் என தெரியவில்லை. வேலைக்கு சென்ற இடத்தில் பழகி வந்த 3 பேர் ஒன்றாக சேர்ந்து டாஸ்மாக் கடைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பாண்டியராஜனுடன் சென்றவர்கள் யார் என 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட வில்லை.
    • சம்பளம் கேட்டு சென்றால் பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தகாத வார்ததைகளால் திட்டி அவமானப்படுத்துகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக வேலை செய்தும் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட வில்லை.

    மேலும் சம்பளம் கேட்டு சென்றால் பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தகாத வார்ததைகளால் திட்டி அவமானப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
    • மேலும் பழிக்கு பழியாக வேறு யாரையாவது இந்த கும்பல் கொலை செய்ய திட்டம் வைத்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்தவர் அழகர்(45). இவர் நிலக்கோட்டையில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக நிலக்கோட்டை போலீசில் அழகரின் மனைவி மேரி புகார் அளித்தார்.

    அந்த புகாரில் திண்டுக்கல் லை சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் எனது கணவர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்தவழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் அவரது நண்பர்கள் கடந்த சில நாட்களாகவே எனது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.

    எனவே அவர்கள்தான் கொலை செய்திருக்ககூடும் என தெரிவித்திருந்தார். இதனிடையே கொலை வழக்கு தொடர்புடைய சுள்ளான்ரமேசின் தம்பி சதீஸ், திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்தி, கோவிந்தா புரத்தை சேர்ந்த சிவகணே சசபரி, பிள்ளையார்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம், சர்புதீன் ஆகியோர் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    இதனையடுத்து சரணடைந்த 5 பேர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவேண்டும் என நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் நிலக்கோட்டை போலீசார் அனுமதிகோரினர். மாஜி ஸ்திரேட் நல்லகண்ணன் அவர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குருவெங்க ட்ராஜ் தலைமையிலான போலீசார் அவர்களிடம் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றார். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் பழிக்கு பழியாக வேறு யாரையாவது இந்த கும்பல் கொலை செய்ய திட்டம் வைத்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • டிரைவர் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
    • கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை உறவினர் வடிவேல் என்பவர் இரவோடு இரவாக மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அதில்சுரேஷ்குமார் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேல் தனது நண்பர்களுடன் சுரேஷ்குமாரை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.

    வடிவேல் ஓடைப்பட்டி வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்தார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தேடி வந்தனர்.

    ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமை யிலான தனிப்படையினர் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோயம்பே ட்டில் பதுங்கி இருந்த நட ராஜனை கைது செய்தனர்.

    இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நல்லமனார்கோட்டை துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

    எனவே அன்றுகாலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை குளத்தூர், சூடாமணிபட்டி, காள ணம்பட்டி, புளியமரத்து ப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்ைட, கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • டைமிங் பிரச்சினையில் 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு அரசு ஏ.சி. பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் ெதாடர்ந்து சாதாரண அரசு பஸ்சும் அடுத்து புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் ஏ.சி. பஸ் டிரைவர் தாமதமாக பஸ்சை எடுத்துள்ளார்.

    இதனை சாதாரண பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தட்டிக்கேட்டு ள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரு க்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொது இடத்தில் தகாதமுறையில் நடக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தனது காதலியை அஜித்குமார் திருமணம் செய்து கொண்டார்.
    • வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கோவக்காபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(22). இவர் நாகையகோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தபோது தன்னுடன் படித்துவந்த 19 வயது மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கவே காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்றார்.

    பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விபரம் அஜித்குமாரின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கும் தடைவிதித்தனர். இதனையும் மீறி கடந்த 18.8.2023-ம் தேதி தனது காதலியை அஜித்குமார் திருமணம் செய்து கொண்டார்.

    அவர் கருவுற்றிருந்தநிலையில் அவருக்கே தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளனர். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் நடந்த விபரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டபோது அவரது ஜாதியை சொல்லி திட்டி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து பெண்ணை ஏமாற்றிய கணவர் அஜித்குமார், தாய் பரமேஸ்வரி, பாட்டி வெள்ளையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது எதிரொலியாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.
    • மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார் சத்திரம், ஜம்புலியம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 40 டன் பூக்கள் வரையும் வரத்து உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது எதிரொலியாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது. இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்து காணப்பட்டது. பூ மார்க்கெட் வெறிச்சோடி யது. மாலைக்கு பயன்ப டுத்தும் பூக்கள் ரூ. 10 முதல் 20 வரை மட்டுமே விலைபோனது.

    இந்நிலையில் நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு 40 டன் பூக்கள் வந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி மற்றும் சம்மங்கி ரூ.60க்கும், கோழிக்கொண்டை ரூ. 30, அரளி ரூ. 200, ரோஸ் ரூ. 50, கனகாம்பரம் ரூ. 200, ஜாதி பூ ரூ.300, முல்லை ரூ. 300க்கும் விற்கப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் பரவலாக பருவமழை கடந்து சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் மல்லிகை பூக்கள் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளது. பூ மார்க்கெட்டிற்கு 1½டன் பூக்கள் மட்டுமே வரத்து வந்துள்ளது.

    இதனையடுத்து கிலோ ரூ. 800 முதல் 1000 வரை விற்கப்பட்டது.கடந்த சில தினங்களாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கணக்கன்பட்டி சற்குருபீடம் ஓம் சற்குருபழனி சாமிகள் ஜீவசமாதியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
    • இரவு 12 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையிலும் மற்றும் நாளை மாலை 6 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    திண்டுக்கல்:

    பழனி அருகில் உள்ள கணக்கன்பட்டி சற்குருபீடம் ஓம் சற்குருபழனி சாமிகள்ஜீவசமாதியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று இரவு 12 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையிலும் மற்றும் நாளை மாலை 6 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதில் பக்தர்கள் பெரு ந்திரளாக கலந்து கொண்டு சாமிகளின் அருளாசியை பெற்றுச்செல்லுமாறு பழனிச்சாமி சுவாமிகள் பீட நிர்வாகி மோகன் தெரிவித்தார். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    • கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது. இதயம் நல்லெண்ணெய் குழும நிறுவனர் முத்துவின் 'பன்ச் ப்ராஜக்ட்' என்ற அமை ப்பின் மூலமாக பல்கலை க்கழகத்தின் மாணவிகளு க்காக நடத்தப்பட்டது. பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்த பல்கலை க்கழகத்தின் துணை வேந்தர் கலா, உலக மயமாக்கல் காரணமாக தனியார் நிறுவனங்கள் பெருகி வரும் தற்போதைய சூழலில் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்வது மிக அத்தியாவசியமானது.

    இப்பல்கலைக்கழகத்தின் மாணவிகள் அனைத்துத் திறன்களையும் கற்பதற்கு தேவையான வாய்ப்பு களையும் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி வருகிறது. மாணவிகள் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் . பாரதியார் போன்ற பெரும் தமிழ்ப் புலவர்கள் ஆங்கிலத்திலும் இணையான புலமை பெற்றிருந்ததை சுட்டிக் காட்டி பேசினார். பதிவாளர் ஷீலா மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிளாரா தேன்மொழி ஆகியோர் தொடக்க உரை மற்றும் வாழ்த்துரை வழங்கி னர்.

    முன்னதாக கொடைக்கா னல் ரோட்டரி சங்கத் தலை வர் மதன்குமார் கோவி ந்தன் வரவேற்புரை யாற்றி னார். இந்நிகழ்ச்சியை கரூர், விருதுநகர் மற்றும் கொடை க்கானல் ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் ஜெயப்பிரகாஷ், விருதுநகர் பீஹைவ் அகாடமி தலைவர் ஷ்யா ம்ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். விமலா, கணிணி த்துறை இணைப்பேராசி ரியர் மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் விஜயா ஆகியோர் ஒருங்கிணை ப்பாளராக செயலாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவிகளு க்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

    ×