என் மலர்
திண்டுக்கல்
- முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குனரை உடனடியாக பணி மாறுதல் செய்ததை வரவேற்கும் விதமாக தமிழக முதல்-அமைச்சருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் தமிழக பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு, முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு மாநில மூத்த தலைவர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. ராஜாராம், ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்குலத்தோர் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், மதுரை,திண்டுக்கல், தேனி , உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளுக்கு மதுரை கள்ளர் சீரமைப்பு துறை கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குனரை உடனடியாக பணி மாறுதல் செய்ததை வரவேற்கும் விதமாக தமிழக முதல்-அமைச்சருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோ,மாவட்டச் செயலாளர் வக்கீல் மாயாண்டி, ஒன்றிய துணை தலைவர் மாவலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (17ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
பெரும்பாறை:
அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (17ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை பகுதி, கோப்பை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரி வித்துள்ளார்.
- இவர் மாவட்ட மண்டல அளவிலான பல்வேறு கபடி போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ளார்.
- தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் தீபக்கை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
நத்தம்:
நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் தீபக். இவர் மாவட்ட மண்டல அளவிலான பல்வேறு கபடி போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ளார். அதன் மூலம் அவர் ஏராளமான பரிசுளும், பதக்கங்கள், சான்றிதழ்களையும் பெற்றார். இந்த நிலையில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கபடி போட்டி விரைவில் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்ளும் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு அணிக்கு வீரர்கள் தேர்வு கரூர் மாவட்டம் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவர் தீபக் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் . இதன் மூலம் அவர் 14 வயதிற்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை கரூர் மாவட்ட முதன்மை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வழங்கினார்.
இதனை அடுத்து தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் தீபக்கை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.மேலும் 2024- அடுத்தாண்டு நடைபெறும் தேசிய அளவிலான கபடி போட்டியில் தீபக் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.
- நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம், பேரூர் தி.மு.க. மற்றும் ஸ்ரீ சாய் சித்த வேதா கிளினிக் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- முகாமில் மழைக்காலத்தில் ஏற்படும் மர்ம காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு சித்த மருத்துவம் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம், பேரூர் தி.மு.க. மற்றும் ஸ்ரீ சாய் சித்த வேதா கிளினிக் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமை வகித்த தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முகாமை தொடங்கி வைத்தார்.
பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை, பேரூராட்சி தலைவர் சுகாசினிப்ரியா கதிரேசன ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் கதிரேசன் வரவேற்றார்.முகாமில் மழைக்காலத்தில் ஏற்படும் மர்ம காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு சித்த மருத்துவம் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், கவுன்சிலர்கள் தியாகு,சிலம்பு செல்வன்,அமைப்புசாரா ஓட்டுநரணி பொறுப்பாளர் சுந்தர் மற்றும் ஒன்றிய பேரூர் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோட்டை பகுதி தி.மு.க. கிளைச் செயலாளர் அழகர் நன்றி கூறினார்.
- தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
- கனமழை எதிரொலியால் திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் இரவில் கனமழையாக தீவிரமடைந்தது. திண்டுக்கல்லில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. அதன்பின்பு மழையின் தீவிரம் குறைந்து சாரல் மழையாக விட்டு விட்டு பெய்தது.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையிலும் தொடர்ந்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
விடுமுறை அறிவிப்பு சற்று தாமதமாக வந்த நிலையில் பல கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் அதிகாலையிலேயே வரத் தொடங்கினர். விடுமுறை அறிவிப்பு தெரிந்த பிறகு அவர்கள் மழையில் நனைந்து கொண்டே தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
இதேபோல், கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை சில மணிநேரத்திலேயே இறந்து விட்டது.
- தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த வாலிபர் சிறுமியிடம் அத்துமீறி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் 10ம் வகுப்பு படித்து வரும் சமயத்திலேயே அவர் கருவுற்றார். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுமி கருவுற்றிருந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட வாலிபரிடம் கேட்ட போது திருமணம் செய்து கொள்வதாக கூறி பின்னர் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் சிறுமியின் கருவை கலைக்க முடியாததால் அவருக்கு நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில மணிநேரத்திலேயே அது இறந்து விட்டது. இதனிடையே 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி கற்பழித்த வாலிபர் விவரம் கேட்டபோது நடந்தவற்றை அவர் கூறியுள்ளார்.
பின்னர் வடமதுரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல மைனர் பெண்கள் கருவுற்று பின்னர் கலைக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. சமரசம் செய்து திருமணம் நடத்தி வைக்கலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தால் அந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுகிறார். இதனால் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வாலிபர்கள் திருமணத்திற்கு மறுத்து தப்பியோடி விடுகின்றனர்.
சமூக நலத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வயது திருமணம், போக்சோ குறித்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தென்மண்டலம் சார்பில் இன்று தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தென்மண்டலம் சார்பில் இன்று தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி, ஈட்டியவிடுப்பு வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய அரசாணை வெளியிடவேண்டும். தொடக்க கல்வித்துறையில் வட்டார முன்னுரிமை வழங்கும் முறையை கைவிடவேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜ்மோகன், மதுரை மாவட்ட தலைவர் முகமதுபிரேம்ரோஸ், தேனி மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் சிறப்புரையாற்றினார். ஏராளமான ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 பயனாளிகளுக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்வதுடன், குறைந்தது 10 நபர்களுக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அவர்களையும் ஊக்கப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 பயனாளிகளுக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கி பேசியதாவது,
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவதற்காகவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில் தொடங்க மானிய கடனுதவிகள் வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பித்த 2 பேருக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடனுதவிகள் பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் தொழில் செய்து, தொழிலை மேம்படுத்தி, தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக ்கொள்வதுடன், குறைந்தது 10 நபர்களுக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அவர்களையும் ஊக்கப்படுத்திட வேண்டும், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கமலக்கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர்அருணாச்சலம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலுவலர்சுதாதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பழனியில் நவராத்திரி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
- 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது.
பழனி:
முருகபெருமானின் 3ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இன்று காலை கிழக்கு ரதவீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் முதலில் காப்பு கட்டப்பட்டது. கோவிலில் உள்ள அம்மன், முருகன், வள்ளிதெய்வானை ஆகியோருக்கும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து மலைக்கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையின் போது முருகப்பெருமான், வள்ளி தெய்வானை, துவார பாலகர்கள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு காப்பு கட்டப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும்.
கோவில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டு தினந்தோறும் வெவ்வேறு அம்மன்கள் அலங்காரம் செய்யப்படும். 9ம் நாள் விழாவாக வருகிற 23ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மதியம் 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலை சாமி வந்தடைந்து பராசக்திவேல் மலைக்கோவில் அடைந்த பின்பு அர்த்தசாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்றுமுதல் வருகிற 23ம் தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்றும், 24ம் தேதி முதல் தங்கரத புறப்பாடு மீண்டும் புறப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லோடுமேன் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டி ருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளால் உயிர்நாடியில் இடித்து சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதை பகுதியை சேர்ந்தவர் தர்மர் (வயது45). லோடுமேன் வேலை பார்த்து வந்தார். குடி பழக்கத்துக்கு அடிமையானவர்.
நேற்று இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.அதன்பிறகு தர்மரை அந்த கும்பல் மோட்டார் சைக்கிளால் உயிர்நாடியில் இடித்து சென்று விட்டனர். இன்று காலை தர்மர் மயங்கிய நிலையில் கிடந்ததால் அவர் குடிபோதையில் இருக்கலாம் என நினைத்தனர்.
அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது ரத்தம் இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தர்மரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் சங்கரதாஸ் சாமிகளின் நாடக நடிகர்கள் சங்கம் சார்பாக எழுதி அமைக்கப்பட்ட காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்ட நிலையில் சம்பந்தமில்லாத வேறு நபர்கள் நாடகத்தை கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இசை நாடகத்தின் சார்பில் பல்வேறு நாடகங்கள் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், மண ப்பாறை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடை பெறுவது வழக்கம்.அதே போல் புராண கதைகளில் ஒன்றான காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகம் ஆசிரியர் முனி யராஜன் கைவண்ணத்தில் இயற்றி எழுதப்பட்டது. இந்த நாடகத்தினைஅய்யலூர் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர் சங்கம் சார்பாக அனுமதி பெறப்பட்டு அந்த நாடகத்திற்கு முழுமையான மத்திய அரசு காப்புரிமை பெறப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்த நாடகத்தினை அய்யலூரை சேர்ந்த சில நடிகர்கள் கதை திருட்டு செய்து நாடகத்தை கொச்சை ப்படுத்தி தவறாக நடித்து வந்தனர். இதை எதிர்த்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோது இது தங்களது நாடகம் என்று வாதிட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசால் பெறப்பட்ட காப்புரிமை சான்றிதழை வடமதுரைபோலீஸ் இ ன்ஸ்பெக்டரிடம்காட்டி சம்மந்த ப்பட்ட குழுவினர் புகார் அளித்தனர்.
சங்கர தாஸ் சுவாமிகளின் நாடக நடிகர் சங்கத்திற்கு உரிமம் பெற்ற இந்த நாடகத்தினை எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். எதிர்தரப்பினர் இனி இந்த நாடகத்தினை நாங்கள் நடத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து எழுத்து மூலமாக சமர்ப்பித்துச் சென்றனர்.
இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது. என்று சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர்கள் சங்க தலை வர் சாமி தெரிவித்துள்ளார்.
- கொடைக்கானலில் பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணமும், மாலை நேரத்தில் சாரலாக தொடங்கி கனமழை பெய்தது.
- கனமழையால் நகர்பகுதியில் மட்டு மல்லாது பெருமாள்மலை, செண்பகனூர் உள்ளிட்ட இடங்களிலும் மின்தடை ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவ ரசியான கொடை க்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமா நிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகி ன்றனர். தற்போது ஆப்சீசன் தொடங்கி உள்ள நிலையில் வடமாநில ங்களில் இருந்து தேனிலவு கொண்டாட இளம் தம்பதி யினர் வர தொடங்கி யுள்ளனர்.
மேலும் போர் காரணமாக இஸ்ரேலில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வட்டக்கானல் பகுதியில தங்கியுள்ளனர். கடந்த வாரம் வெயில் அடித்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று பகல் பொழுதில் இதமான சீேதாஷ்ணமும், மாலை நேரத்தில் சாரலாக தொடங்கி கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்டது. அவர்கள் வீடு மற்றும் அறை களிலேயே முடங்கினர். கனமழையால் படகு சவாரி நிறுத்த ப்பட்டது. மேலும் ஏரிச்சா லையை சுற்றி செல்லும் குதிரை மற்றும் சைக்கிள் சவாரியும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இடி-மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் நகர்பகுதியில் மட்டு மல்லாது பெருமா ள்மலை, செ ண்பகனூர், வட்டக்கானல், வில்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மின்தடை ஏற்பட்டது. பல மணிநேரம் மின்தடை ஏற்ப ட்டதால் மலைகிரா மங்கள் இருளில் மூழ்கியது. இதனை சீரமை க்கும் பணியில் மின்ஊ ழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானல் நகருக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரி வித்தனர்.
மேலும் மலைப்பகுதி களில் புதிய அருவிகள் உருவாகின. வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதன்முன்பு சுற்றுலா பயணிகள் புகை ப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர். இன்றும் காலை முதலே சாரல்மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணி கள் ஊர்திரும்ப ஆயத்த மானார்கள். மேலும் வாகன ஓட்டி களும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர்.






