என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • 2 மாத உரிமைத்தொகையை பெண்கள் பெற்றுவிட்டநிலையில் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
    • தாலுகா அலுவலகத்தில் சென்று விசாரித்தாலும் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். பெண்களின் வங்கி கணக்கிற்கே இந்த தொகை வரவு வைக்கப்படுவதால் எவ்வித இடைத்தரகருக்கும் பணம் கொடுக்காமல் முழுமையாக தங்களுக்கு கிடைப்பதால் பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

    தகுதியான மகளிருக்கு பணம் கிடைக்கவேண்டும் என்பதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 2 மாத உரிமைத்தொகையை பெண்கள் பெற்றுவிட்டநிலையில் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டை தாலுகாவில் தகுதியான மகளிர் பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்.

    தாலுகா அலுவலகத்தில் சென்று விசாரித்தாலும் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அனைத்து தகுதியான பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்றுகூறி உள்ள நிலையில் முகாம்கள் அமைத்து விடுபட்ட பெண்களை சேர்க்கவேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமணமாகாத மனவேதனையில் இருந்த வாலிபர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி சேரன்நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாண்டி(31). வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமண மாகவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த பாண்டி தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தாடி க்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் கும்பாபிஷேகத்தின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஏராளமான பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • புகாரின் பேரில் 4 பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை மீட்டனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புது கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஏராளமான பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் செம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    இதே போல மேலும் சில கோவில்களிலும் கும்பாபி ஷேகத்தின் போது நகை பறிப்பு தொடர்பாக புகார்கள் வந்தன. மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தர வின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் மேற்பார்வையில் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார் தலைமையில் ஒட்டன்சத்திரம் குற்ற தடுப்பு போலீசார் கொண்ட தனிப்படையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி யில் எடுக்கப்பட்ட வீடியோ க்களை எடுத்து அதில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உலா வருகின்றனரா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பெங்களூ ரைச் சேர்ந்த ஜோதி (வயது 30), காமாட்சி (58), கோவையைச் சேர்ந்த அம்மாச்சி (37), மீனா (56) ஆகிய 4 பேரும் பெண்க ளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது கண்டறிய ப்பட்டது.

    அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் இந்த கும்பலுக்கு வேறு யாரு டனாவது தொடர்பு உள்ளதா? என்றும் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது.

    • கனமழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. மேலும் பழனியை அடுத்துள்ள பெருமாள் புதூர், பெரியம்மாபட்டி, பச்சையாறு கிராமங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெருமாள்புதூர் கிராமத்திற்கு முன்பாக பச்சை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் வகையில் தற்காலிகமாக மண்ணைக் கொட்டி பாதை அமைத்துக் கொடுத்து ள்ளனர். கன மழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால் பச்சையாறு கிராமத்திலிருந்து பெருமாள்புதூர் கிராமத்திற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர். உடனடி யாக தற்காலிக பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாலம் சீரமைப்பு உடனடியாக நடைபெறாது என்பதால் மேலும் சில நாட்களுக்கு பணியில் தொய்வு ஏற்படும் எனவும் தெரிகிறது.

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-
    • மழைநீர் அனைத்து நீர் ஆதாரங்களுக்கும் (ஆறு, ஏரி. கிணறு, ஆழ்துளை கிணறு) மூல ஆதாரம். பூமி உயிருள்ள கிரகமாக இருப்பதற்கு காரணம் தண்ணீர் தான். இயற்கை மிகவும் அற்புதமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், மழைநீரை சேகரிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மழைநீர் அனைத்து நீர் ஆதாரங்களுக்கும் (ஆறு, ஏரி. கிணறு, ஆழ்துளை கிணறு) மூல ஆதாரம். பூமி உயிருள்ள கிரகமாக இருப்பதற்கு காரணம் தண்ணீர் தான். இயற்கை மிகவும் அற்புதமானது. அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் வாழ உயிர்நீரை நீரியியல் சுழற்சியில் மழைப்பொழிவாகக் கொடுக்கிறது.

    நம் தலை மீது, நாம் இருக்கும் இடத்திலேயே மழை பொழிகிறது. தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல. தலை மீது விழும் மழை நீரை பிடித்து சேமிக்காமல், ஆறு, கிணறு என்று தேடிச் செல்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத முற்காலத்தில் முன்னோர்கள் மழை நீரைக் கொண்டே வாழ்க்கை நடத்தினார்கள். மழைநீர் தரத்தில் மற்ற நீர் ஆதாரங்களைவிட உயர்வானது, பிராணவாயுவை அதிகமாக உள்ளடக்கியது.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை நிறுவப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க வேண்டும். கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள், பழமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும். நீரின் பயன்பாட்டிற்கும். நீரின் சேமிப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவிட வேண்டும். அவ்வாறு நிறுவப்பட்ட கட்டமைப்புகளை புனரமைத்து நில வளம், நீர் வளம் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரசித்தி பெற்ற தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு தொடங்கியது.
    • இரவு 10 மணி அளவில் கண் திறப்பு மண்டபத்தில் நடைபெற்ற சாமி சாட்டுதல் நிகழ்ச்சியில் 18 பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தாடிக்கொம்பு:

    பிரசித்தி பெற்ற தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு தொடங்கியது. இரவு 10 மணி அளவில் கண் திறப்பு மண்டபத்தில் நடைபெற்ற சாமி சாட்டுதல் நிகழ்ச்சியில் 18 பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சாமி சாட்டுதல் முடிந்த பிறகு அவர்களுக்கு தேங்காய், பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது. இன்று முதல் 22ம் தேதி வரை கோவிலில் இருந்து பண்டாரபெட்டியும், அம்மன் உற்சவம், கொலு மண்டபத்திற்கு எழுந்தருளல் அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    23ம் தேதி காலை 10:30 மணிக்குள் அம்மன் கண் திறப்பு மண்டபத்தில் இருந்து கண் திறப்பு வைபவம் நடைபெற்று, அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கொலு மண்டபத்திற்கு வந்தடையும். காலை 11 மணி முதல் அம்மன் கொலுமண்டபத்தில் காட்சியளிப்பார். இரவு 12 மணி முதல் வானக் காட்சி மண்டபத்தில் அம்மன் புஷ்ப விமானத்தில் காட்சியளிப்பார். அன்று இரவு 12.30 மணி அளவில் மாபெரும் வானவேடிக்கை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 24ம் தேதி மதியம் 1.30மணி அளவில் அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், தொழிலதிபர் மேகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்

    • வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.
    • அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்டக்டர் மீது மோதுவது போல வந்தனர்.

    வேடசந்தூர்:

    ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை ஆயக்குடியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக சாமியார் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (29) என்பவர் இருந்தார். வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் செல்வராஜ் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் செல்வராஜ் மீது மோதுவது போல வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர் சுதாரித்து நகர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனால் ஆட்டோ டிரைவருக்கும், செல்வராஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் செல்வராஜை கடுமையாக தாக்கி விட்டு சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதனையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஒரு கும்பல் அந்த தனியார் பஸ்சை வழி மறித்து தாக்கினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழ இறங்கினார். இந்த தாக்குதலில் பஸ்சின் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காளனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவீன்பாரதி (20), வேடசந்தூரைச் சேர்ந்த விக்ரம் (21). டி.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கருணாகரன் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • கர்ப்பகாலத்தில் பெண்கள் சத்தான உணவுகளையே உட்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நவீன பரிசோதனை கருவிகள் மூலம் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    குஜிலியம்பாறை:

    குஜிலியம்பாறையில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போசியா ரூபி தலைமை வகித்தார்.

    விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, பழம் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து காந்திராஜன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை வழங்கி பேசுகையில், ஏழை எளிய பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க பல்வேறு நலத்திட்ட ங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்ப டுத்தி வருகிறார்.

    ஏழை எளிய பெண்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை த்தொகை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், 100 கர்ப்பிணி பெண்களு க்குச் சமுதாய வளைகாப்பு நடைபெற்றுள்ளது. கர்ப்பகாலத்தில் பெண்கள் சத்தான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நவீன பரிசோதனை கருவிகள் மூலம் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்கள் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை ஒன்றிய ேசர்மன் சீனிவாசன், பாளையம் தி.மு.க. பேரூர் செயலாளர் கதிரவன், பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் லதா, ஒன்றிய பி.டி.ஓ. வீரகட ம்பகோபு, மருத்துவர் முத்துக்குமார், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பா ர்வையாளர்கள் விஜய லட்சுமி, சரஸ்வதி, செலவன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார ஒருங்கி ணைப்பாளர் சிவசந்திர குமார் நன்றி கூறினார்.

    • 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அடையாள தேர்வு அட்டை வழங்கப்பட்டது.
    • ஒருவர் மட்டும் உடனடி அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

    துணைத் தலைவர் சங்கரீஸ்வரி கவியரசு முன்னிலை வகித்தார். திண்டுக்கல் டாக்டர் கவுதம் தலைமையில் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 60 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அடையாள தேர்வு அட்டை வழங்கப்பட்டது. ஒருவர் மட்டும் உடனடி அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

    இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன் தலைமையில், துணைத் தலைவர், மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஊராட்சி மன்ற செயலாளர் சோலைமலை நன்றி கூறினார்.

    • வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை, இந்திய மருத்துவ சங்கம் வத்தலக்குண்டு கிளை, வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முருகேஷ் பாண்டியன், பொருளாளர் பிரகாஷ்ராஜ், ரோட்டரி நிர்வாகிகள் நஜ்முதீன், கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெய் சிங்ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர்சிதம்பரம் பேரணியை ெதாடங்கி வைத்தார்.

    பேரணியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் செங்குளத்துப் பட்டியை சேர்ந்த 5 வயதுபள்ளி மாணவன் தங்கப்பாண்டி குட்டிசைக்கிளில் 10 கி.மீ. பயணித்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

    • தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள எம்.குரும்பபட்டி, மல்லனம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீர் மரபினர் நல சங்கம் சார்பாக தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு பல ஆண்டுகளாக போராடி வரும் கள்ளர், முத்தரையர், வலையர், உள்ளிட்ட 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • நேற்று இரவு பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை அடைத்து விட்டு சென்று காலை கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • மேலும் 3 அம்மன் சன்னதிகளின் கதவுகளும் திறக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலிகள் திருடு போயிருந்தன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் பழமையான காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

    இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவர் இருந்து வருகிறார். நேற்று இரவு பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். இன்று காலை கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் 3 அம்மன் சன்னதிகளின் கதவுகளும் திறக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலிகள் திருடு போயிருந்தன. இது குறித்து அவர் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது.

    ×