என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனித சங்கிலி பேரணியில் கலந்து கொண்டவர்கள்.
நிலக்கோட்டை அருகே மனித சங்கிலி போராட்டம்
- தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
- 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள எம்.குரும்பபட்டி, மல்லனம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீர் மரபினர் நல சங்கம் சார்பாக தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு பல ஆண்டுகளாக போராடி வரும் கள்ளர், முத்தரையர், வலையர், உள்ளிட்ட 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Next Story






