என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "festival begins with chanting"

    • பிரசித்தி பெற்ற தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு தொடங்கியது.
    • இரவு 10 மணி அளவில் கண் திறப்பு மண்டபத்தில் நடைபெற்ற சாமி சாட்டுதல் நிகழ்ச்சியில் 18 பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தாடிக்கொம்பு:

    பிரசித்தி பெற்ற தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு தொடங்கியது. இரவு 10 மணி அளவில் கண் திறப்பு மண்டபத்தில் நடைபெற்ற சாமி சாட்டுதல் நிகழ்ச்சியில் 18 பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சாமி சாட்டுதல் முடிந்த பிறகு அவர்களுக்கு தேங்காய், பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது. இன்று முதல் 22ம் தேதி வரை கோவிலில் இருந்து பண்டாரபெட்டியும், அம்மன் உற்சவம், கொலு மண்டபத்திற்கு எழுந்தருளல் அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    23ம் தேதி காலை 10:30 மணிக்குள் அம்மன் கண் திறப்பு மண்டபத்தில் இருந்து கண் திறப்பு வைபவம் நடைபெற்று, அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கொலு மண்டபத்திற்கு வந்தடையும். காலை 11 மணி முதல் அம்மன் கொலுமண்டபத்தில் காட்சியளிப்பார். இரவு 12 மணி முதல் வானக் காட்சி மண்டபத்தில் அம்மன் புஷ்ப விமானத்தில் காட்சியளிப்பார். அன்று இரவு 12.30 மணி அளவில் மாபெரும் வானவேடிக்கை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 24ம் தேதி மதியம் 1.30மணி அளவில் அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், தொழிலதிபர் மேகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்

    ×