என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்கம்
    X

    திண்டுக்கல்லில் இன்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்லில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்கம்

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-
    • மழைநீர் அனைத்து நீர் ஆதாரங்களுக்கும் (ஆறு, ஏரி. கிணறு, ஆழ்துளை கிணறு) மூல ஆதாரம். பூமி உயிருள்ள கிரகமாக இருப்பதற்கு காரணம் தண்ணீர் தான். இயற்கை மிகவும் அற்புதமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், மழைநீரை சேகரிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மழைநீர் அனைத்து நீர் ஆதாரங்களுக்கும் (ஆறு, ஏரி. கிணறு, ஆழ்துளை கிணறு) மூல ஆதாரம். பூமி உயிருள்ள கிரகமாக இருப்பதற்கு காரணம் தண்ணீர் தான். இயற்கை மிகவும் அற்புதமானது. அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் வாழ உயிர்நீரை நீரியியல் சுழற்சியில் மழைப்பொழிவாகக் கொடுக்கிறது.

    நம் தலை மீது, நாம் இருக்கும் இடத்திலேயே மழை பொழிகிறது. தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல. தலை மீது விழும் மழை நீரை பிடித்து சேமிக்காமல், ஆறு, கிணறு என்று தேடிச் செல்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத முற்காலத்தில் முன்னோர்கள் மழை நீரைக் கொண்டே வாழ்க்கை நடத்தினார்கள். மழைநீர் தரத்தில் மற்ற நீர் ஆதாரங்களைவிட உயர்வானது, பிராணவாயுவை அதிகமாக உள்ளடக்கியது.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை நிறுவப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க வேண்டும். கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள், பழமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும். நீரின் பயன்பாட்டிற்கும். நீரின் சேமிப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவிட வேண்டும். அவ்வாறு நிறுவப்பட்ட கட்டமைப்புகளை புனரமைத்து நில வளம், நீர் வளம் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×