என் மலர்
திண்டுக்கல்
- உண்டுஉறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுககூட்டம் கலெக்டர் தலைமையில் எம்.வி.எம்.அரசு மகளிர்கல்லூரியில நடைபெற்றது.
- நீட், ஐ.ஐ.டி, ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டுஉறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுககூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் எம்.வி.எம்.அரசு மகளிர்கல்லூரியில நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி பேசியதாவது,
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக சிறப்பு திட்டமாக மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. உண்டுஉறைவிட வசதியுடன் 9 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவ-மாணவிகளுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் பயில மாவட்டம் முழுவதிலும் இருந்து 553 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், இங்கு அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்ட எழுது பலகைகள், ஒலிபெருக்கி, கணினிதொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா , பயோமெட்ரிக் வருகைபதிவேடு ஆகியவற்றுடன் தனித்தனியாக விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9.30 மணிமுதல் பகல் 11 மணிவரை நீட், ஐ.ஐ.டி, ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்கவும், அவர்களது முழுமனித ஆற்றலையும் ஊக்குவிக்க ஏதுவாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த மாதிரி பள்ளியில் பணியாற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் இருந்து சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்ெதடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முதன்மை கல்விஅலுவலர் நாசுருதீன், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சட்டப்படிப்பு பயில அகில இந்திய அளவில் நடத்த ப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட 12-ஆம் வகுப்பு முடித்த மற்றும் நடப்பு ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் உள்ள மாணவர்களுக்கு சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு பயில அகில இந்திய அளவில் நடத்த ப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள இணைய தளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
சட்டப்ப டிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சியினை முடிக்கும் மாணவர்க ளுக்கு 2ம் கட்ட நேர்காண லுக்கான குழு விவாதம் மற்றும் எழுத்து தேர்வு களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- பச்சையார் பாலம் சேதமடைந்ததால் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.
- தற்காலிக தரைப்பாலத்தை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நாயக்கர் தோட்டத்திற்கும், பெருமாள் புதூர் இடையே உள்ள பச்சையார் பாலம் சேதமடைந்ததால் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.
இதற்காக மாற்றுப்பாதை யாக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக பச்சையாற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், தொழிலா ளர்கள் மிகுந்த சிரமமடை ந்தனர். தனியார் பள்ளி பஸ்கள் 8 கி.மீ. தூரம் சுற்றி சென்றன.
இதனை தொடர்ந்து மழை நின்றவுடன் தரை ப்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்றது. பின்னர் இன்று வழக்கம் போல் அந்த பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. தற்காலிக தரைப்பாலத்தை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டயர் குடோனில் திறந்த வெளியில் டயர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது.
- கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அச்சம் அப்பகுதி மக்களிடையே இருந்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாக சென்று அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை தீவிரம் காட்டி வருகின்றனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செல்லா ண்டியம்மன் கோவில் பகுதியில் டயர் குடோனில் திறந்த வெளியில் டயர்கள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. டயர்களில் தேங்கும் நன்னீரில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதன் மீது குடோன் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட டயர்கள் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அச்சம் அப்பகுதி மக்களி டையே இருந்து வருகிறது.
இந்த டயர்களை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுத்து டெங்கு இல்லாத மாநகரமாக உருவாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரில் வந்த ஒரு கும்பலும் மணல் கடத்தலை தடுக்கமுயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- லாரியை ஓட்டிச்சென்றது காளிமுத்து என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பொன்னிமலை சித்தன்கோவில் அருகே சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது என போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. கடந்த 13-ந்தேதி வி.ஏ.ஓ கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் இலாகிபானு, உதவியாளார் மகுடீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு மணல் திருடப்பட்டு கொண்டிருந்தது கண்டறியப்படவே லாரியை பறிமுதல் செய்தனர். ஆயக்குடி போலீஸ் நிலையத்திற்கு வி.ஏ.ஓ.க்கள் கருப்புசாமி, பிரேம்குமார், உதவியாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் கொண்டுவந்தனர். வரும் வழியில் லாரியில் இருநத மணலை கொட்டி அதிகாரிகளை கொல்ல முயன்றனர்.
மேலும் காரில் வந்த ஒரு கும்பலும் மணல் கடத்தலை தடுக்கமுயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாஸ்கரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இதனிடையே கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பாலசமுத்திரத்தை சேர்ந்த சக்திவேல்(60), அவரது மகன்கள் ரமேஷ்(33), கார்த்தி என்ற காளிமுத்து(30), தி.மு.க மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாஸ்கரன்(48) ஆகிய 4 பேரையும் கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று லாரியை ஓட்டிச்சென்றது காளிமுத்து என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயக்குடி போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் நகை பறித்துசென்றனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
நத்தம்:
நத்தம் அருகே வேலாயுதம்பட்டி- காரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 42). இவரது மனைவி ரேணுகாதேவி (35). வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிசங்கி லியை பறித்து சென்றுள்ள னர்.
இதுகுறித்து நத்தம் போலீசில் ரேணுகாதேவி புகார் அளித்தார். அதன்பே ரில் இச்சம்பவம் தொட ர்பாக நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது.
- கொடைக்கானலில் செம்போத்து பறவை அதிக அளவு இருப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் இந்த சமயங்களில் அதிகளவில் வருவது வழக்கம். குறிப்பாக சோலைக் காடுகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை வாய்ந்த செம்போத்து பறவை. மிகவும் அரிதாக தென்படும் பறவைகள் என பறவை ஆர்வலர்களால் இது பார்க்கப்படுகிறது.
மனதுக்கு இதமான காடுகளின் நிசப்தத்திற்கு ஏற்றாற் போல கடின ஒலி எழுப்பும் இப்பறவை கொடைக்கானல் வனப்பகுதிகளில் மட்டுமல்லாது பழ மரங்கள் அதிகம் உள்ள தோட்டப் பகுதிகளிலும் தென்படுகிறது. பழங்களை உண்டு விதைகளை காடுகளில் பரப்பும் இந்த பறவையின் தேவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் தோட்டங்களில் அதிகம் பழம் தரும் மரங்களை நட்டு வளர்த்து செம்போத்து பறவையின் வாழ்வியலுக்கு மனிதர்கள் உதவ வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
பெரும்பாலும் தரைப்பகுதியில் மட்டுமே இந்தப்பறவைகள் அதிக அளவில் காணப்படும். ஏனெனில் இந்தப்பறவையால் உயரமாக பறக்க முடியாது. ஆனால் தற்போது கொடைக்கானலில் செம்போத்து பறவை அதிக அளவு இருப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
- ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் திண்டு க்கல் மேற்கு வட்ட த்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி களும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பய ன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தை மேம்படுத்தும் பணியானது பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
- படகு இல்லத்தில் குப்பைகளை குவித்து வைத்தது போல் காட்சி பொருளாகவே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தமிழக சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கூடும் மையப்பகுதியாக நட்சத்திர ஏரி விளங்கி வருகிறது. ஏரியில் சுற்றுலாத்துறை சார்பில் 2 படகு இல்லங்களும், நகராட்சி சார்பில் ஒரு படகு இல்லமும் இருந்து வந்தது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சுவாரி செய்து மகிழ்ந்து செல்வர். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தை மேம்படுத்தும் பணியானது பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவாக நடைபெற்று வந்த பணிகள் முடிவு பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொடைக்கான லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அலை க்கழிப்புக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் படகு இல்லத்தில் குப்பைகளை குவித்து வைத்தது போல் காட்சி பொருளாகவே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . எனவே நகராட்சி படகு இல்லத்தை விரைந்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து ள்ளது.
- அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்:
அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்ேமாகன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர் இைளஞரணி செயலாளர் வி.டி.ராஜன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் திவான்பாட்சா, நிர்வாகிகள் நைனார்முகமது, வெங்கிடு, மகளிர்அணி செயலாளர் ஜெயலட்சுமி, வக்கீல் பிரிவு செயலாளர் ெஜயபால், அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் பிரபுராம், லெனின், கவுன்சிலர் பாஸ்கரன், வக்கீல் பழனிச்சாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் நாராயணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பெண்கள் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி:
பழனி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இன்று இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பழனி நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
தொடர்ந்து அதிகாரிகள் யாரும் இல்லாததால் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டவுன் போலீசார் பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை என்றும் நிலத்தடி நீர் குழாயும் பழுதடைந்து சரிசெய்யப்படவில்லை என்றும் இது குறித்து பலமுறை வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரி களிடம் முறையிட்டும் நடவடிக்கையும் எடுக்காத தால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து குடிநீர்குழாய் உடைப்பை சரி செய்து விநியோகம் தொடங்கியுள்ளதாகவும், இன்று மாலை 5வதுவார்டு பகுதிக்கு குடிநீர் வரும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பெண்கள் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கொடைக்கானல் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- விவசாய நிலங்களை அழிக்கும் காட்டு யானைகள், காட்டு பன்றிகளை ஒழிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரை த்தனர்.சமீப காலமாக விவசாய நிலங்களுக்குள் யானைகள்,காட்டுப் பன்றிகள் புகுந்து பண பயிர்களை அழித்து வருவதாகவும் இதனை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
மேலும் சமீப காலமாக பேரிக்காய், ப்ளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதையும் இவ்வகை விவசாயத்தில் நோய் தாக்குதல் அதிகரி த்துள்ளதையும் இதனை ஆய்வு செய்து பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல்களை கூட்டுவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வும் கேட்டுக் கொண்டனர்.விவசாய நிலங்களை அழிக்கும் காட்டு யானைகள், காட்டு பன்றிகளை ஒழிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.கிராமப் பகுதி களில் கேஸ் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்க ப்படுவ தாகவும், மேல்மலை பகுதிகளில் விவசாயப் பகுதிகள் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்கவும்,சாலைகளை சீரமைத்து தரவும் கோரிக்கை வைத்தனர்.
பெருமாள் மலை பகுதியில் இருந்து கொடை க்கானல் வரை நெடு ஞ்சாலைகளில் ஆக்கிர மிப்புகள் அதிகரித்துள்ள தாகவும் இதனை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.விவசாயிகளின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்






