search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள டயர்கள்-டெங்கு பரவும் அபாயம்
    X

    திறந்த வெளியில் கிடக்கும் டயர்கள்.

    திண்டுக்கல்லில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள டயர்கள்-டெங்கு பரவும் அபாயம்

    • டயர் குடோனில் திறந்த வெளியில் டயர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது.
    • கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அச்சம் அப்பகுதி மக்களிடையே இருந்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாக சென்று அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை தீவிரம் காட்டி வருகின்றனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் செல்லா ண்டியம்மன் கோவில் பகுதியில் டயர் குடோனில் திறந்த வெளியில் டயர்கள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. டயர்களில் தேங்கும் நன்னீரில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதன் மீது குடோன் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட டயர்கள் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அச்சம் அப்பகுதி மக்களி டையே இருந்து வருகிறது.

    இந்த டயர்களை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுத்து டெங்கு இல்லாத மாநகரமாக உருவாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×