என் மலர்
திண்டுக்கல்
- எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்ப தாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
- அதிகாரிகள் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்ப தாக பொதுமக்கள் குற்றம்சா ட்டினர். எனவே பிளாஸ்டிக் அரிசி இதில் கலந்துள்ளதா என சந்தேக மடைந்து ஊழி யர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிஉள்ளதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி ரேசன்கடை களில் ஆய்வு செய்தார்.
அதில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பது தெரி யவந்தது. அதைதொடர்ந்து வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
இேதபோல் அனைத்து ஊராட்சிகளிலும் அதிகாரிகள் விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின்போது கூட்டுறவு த்துறை தனிசார்பதிவாளர் பாஸ்கரன், தனிவருவாய் ஆய்வாளர் சரவணமுத்து மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் உடனிருந்தனர்.
- பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
- சிறிய விஷயத்துக்காக மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் அவருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகில் உள்ள கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொன்னிவளவன் (வயது17) என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று இந்த பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
சைக்கிளை பெற்றுக்கொண்ட மாணவன் பொன்னிவளவன் பெல் சரியாக அடிக்கிறதா என்று சரி பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் பெல்லைஅடித்துக்கொண்டே இருந்ததால் அருகில் இருந்த தலைமை ஆசிரியர் மாணவனின் காதில் தாக்கினார்.
இதனால் மாணவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேடந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மாணவனின் மாமா ஜெயமுருகன் தெரிவிக்கையில், சிறிய விஷயத்துக்காக மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் அவருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது.
எனவே இனிமேலாவது இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றார்.
- திண்டுக்கல் மாவட்டத்தில குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதி க்கப்பட்டு வருகின்றனர்.
- 6 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள், காலியிடங்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதி க்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒய்.எம்.ஆர் பட்டியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆஸ்ப த்திரியில் பரிசோதனை செய்ததில் டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று மருத்தவ பரிசோதனை நடத்தி வருகின்றனர். சிறுமி தனியார் தொடக்கப்பள்ளி யில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்து மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்ப ட்டது. மேலும் காய்ச்சல், சளி இருந்தால் குழந்தை களை மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ஆசிரியர்களுக்கு மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர்.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் காய்ச்சலுக்கு தனி பிரிவு தொடங்கப்பட்டு, தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் 3 இடங்களில் சிறப்பு காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயக்காததால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
- பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் பல்வேறு கிராமங்களுக்கு தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்து வருகின்ற னர்.
கடந்த சில மாதங்களாக ஒரு சில தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை இயக்காமல் மற்ற தனியார் பஸ்கள் இயங்கும் நேரத்தில் பஸ்களை இயக்குவதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தங்கள் ஊருக்கு செல்வதாக பல மணி நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.
சில தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்கள், வட்டார மற்றும் மண்டல போக்கு வரத்து அலுவலகங்கள் ஆகியவற்றில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் முறையிட்டனர். பஸ்கள் முறையாக நேரத்துக்கு இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி தடை ஆணை பெற்றனர்.
ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்து தனியார் பஸ்களின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (52). பூச்சி நாயக்க ன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஜாபர் என்பவர் கத்தியால் குத்தியதில் படுகாய மடைந்தார் .
இவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் திண்டுக்கல் அடுத்த மயிலாப்பூர் வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் செபஸ்தியார் (62). விவசாயி. இவரை ஸ்டீபன் என்பவர் கத்தியால் குத்தியதில், படுகாயமடைந்த இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திறந்து வைத்தார்.
- அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் தனியார் ஹாலில் அமைக்கப்பட்டு ள்ள மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமல க்கண்ணன் திறந்து வைத்தார்.
சென்னை நெசவாளர் சேவை மையம் சார்பில் திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை திண்டுக்கல்லில் வருகிற 23ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 5 கைவினை கலைஞர்கள் தங்கள் உற்பத்தி ரகங்கள் மற்றும் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படு த்தியுள்ளனர்.
மேலும் பரமக்குடி காட்டன் சேலைகள், அருப்பு க்கோட்டை காட்டன் சேலைகள், காட்டன் லுங்கிகள், துண்டுகள், சட்டைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், செயற்கை ப்பட்டு சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கைத்தறி , ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு ள்ளன. அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
- அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திண்டுக்கல்:
திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதையொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர்,
தாய்முகாம்பிகை நகர் மற்றும் பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
- சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முருகேசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வெகுநேரமாகியும் எழுந்து வெளியே வரவில்லை.இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு உள்ளே சென்று முருகேசனை எழுப்ப முயற்சித்தனர்.ஆனால் அவர் இறந்து போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில் அங்குவந்த சாணார்பட்டி போலீசார் முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் கூவனூத்து குரும்ப பட்டியை சேர்ந்தவர் சேவுகன் (வயது 50) விவசாயி.இவர் தோட்டத்து வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.இந்த 2 சம்பவங்கள் குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தேனி மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
தேனி மேற்கு மாவட்ட த்தின் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்து ள்ளார்.
மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக சீதா லெட்சுமி, அவைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், இணைச் செயலாளராக முத்து ரத்தினம், துணைச் செயலாளர்களாக வீரமணி கர்ணன், சற்குணம், பொரு ளாளராக இளையநம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக பாண்டியராஜ், வக்கீல் பிரிவு செயலாளராக கருப்பசாமி பாண்டியன், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக அப்துல் ஆசிக், விவசாய பிரிவு செயலாளராக முருகவேல், மீனவர் பிரிவு செயலாளராக நந்திமாறன், மருத்துவர் அணி செய லாளராக டாக்டர் செல்வம், இலக்கிய அணி செயலாள ராக சுப்பிரமணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளராக குறிஞ்சி மணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக காசிமாயன், வர்த்தகர் அணி செயலாள ராக சந்தான முத்தையா, கலைப்பிரிவு செயலாளராக திருக்குமார் நியமிக்கப்பட்டு ள்ளனர்.
கம்பம் ஒன்றிய செயலாள ராக ஈஸ்வரன், போடி ஒன்றிய செயலாளராக பாலசுப்பிரமணி, போடி மத்திய ஒன்றிய செயலாள ராக முத்துப்பாண்டி, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக கண்ணன், சின்னமனூர் ே மற்கு ஒன்றிய செயலாளராக எல்லப்பட்டி முருகன், தேனி கிழக்கு ஒன்றிய செயலாள ராக நாராயணசாமி, மேற்கு ஒன்றிய செயலாளராக தயாளன், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய செய லாளராக கல்யாணகுமார், கம்பம் வடக்கு நகர செய லாளராக கார்த்திகேயன், தெற்கு நகர செயலாளராக கணபதி, சின்னமனூர் நகர செயலாளராக பிச்சைக்கனி, போடி வடக்கு நகர செயலாளராக சேதுராம், போடி தெற்கு நகர செயலாளராக மாரியப்பன்,
அனுமந்தன்பட்டி பேரூராட்சி செயலாளராக மார்க்கண்டன், உத்தம பாளையம் பேரூராட்சி செயலாளராக சக்கரவர்த்தி, மார்க்கையன்கோட்டை பேரூராட்சி செயலாளராக சென்றாயப்பெருமாள், குச்சனூர் பேரூராட்சி செயலாளராக பாண்டி, மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி செயலாளராக நித்யானந்தன், மீனாட்சிபுரம் பேரூராட்சி செயலாளராக கருப்பையா, வீரபாண்டி பேரூராட்சி செயலாளராக கணேசன், பண்ணைப்புரம் பேரூராட்சி செயலாளராக பாஸ்கரன் மற்றும் தேனி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக ஜெய ச்சந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டு ள்ளார்.
- காந்தி மார்க்கெட்டில் கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- குப்பைகள் அகற்ற வேண்டும் மற்றும் குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வியாபாரிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோ ட்டை அருகே 280 கடைகளுடன் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி கள், இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிலாந்து, பெங்களூர் உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100டன் காய்கறி கள் வருகிறது. மேலும் ரூ. 5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
புதிதாக பதவியேற்ற கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் தங்களது குறைகளை முறையிட்டனர். குப்பைகள் அகற்றப்ப டவில்லை, குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வலியுறுத்தினர்.
இது குறித்து கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க இருபுறமும் விரிவுபடுத்தவும், துர்நாற்றம் இல்லாத அளவிற்கு குப்பைகள் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுக்கழிப்பிட வசதி, பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி கமிஷனர் வில்லியம் சகாயராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்ததாக எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டு புகார் அளித்தனர்.
- இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ரேஷன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்ய ப்பட்டது. இந்த அரிசியை வாங்கி சென்ற பொதுமக்கள் வீட்டில் அரிசி ஊற வைத்த போது அதில் ஒரு சில அரிசிகள் அப்படியே மேலே மிதந்து வந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி என நினைத்து பதறி எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டு புகார் அளித்தனர். உடனே அங்கிருந்த விற்பனையாளர் பொதுமக்களிடம் கடந்த 2 மாதங்களாக செறிவு ஊட்டப்பட்ட அரிசி தான் வழங்கப்படுகிறது. இந்த அரிசியை தான் வழங்க ப்பட்டது. அந்த அரிசியில் சற்று கூடுதலான சத்து கிடைப்பதாக மேல் அதிகாரிகள் எங்களிடம் கூறியிருந்தார்கள். ஆகையால் பயப்படாமல் அரிசியை கீழே போடாமல் சாப்பிடலாம் என்று கூறியுள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல் ரேஷன் கடையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நிலக்கோ ட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பொது மக்களிடம், இதுகுறித்து அரசு தரப்பில் வழங்கப்பட்ட அரிசி தான். அதில் சத்துக்கள் நிறைந்த அரிசியாக விநியோகிக்க ப்பட்டுள்ளது. நிச்சயமாக இது பிளாஸ்டிக் கலந்த அரிசி அல்ல எனக்கூறி சமரசம் செய்தார். இதை த்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் வழங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி ஆக இருக்கும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கவுதம் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் நகர்தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- திண்டுக்கல் நகரில் பழிக்குப்பழியாக கொலை தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
குள்ளனம்பட்டி:
மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்தவர் கவுதம்(38). இவர் மீது மதுரை மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களாக இவர் திண்டுக்கல் என்.எஸ்.நகர் பகுதியில் வசித்து வந்தார்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திலும் இவர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றிரவு பாரதிபுரம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யும் இடத்திற்கு சென்று மதுபானங்கள் வாங்கி குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பலுக்கும், கவுதமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கவுதமை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
இன்றுகாலை கவுதம் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் நகர்தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
இவர் மீது ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் பழிக்குப்பழியாக இவரை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர். மேலும் மதுரையில் இருந்து எதற்காக கவுதம் திண்டுக்கல் வந்தார், வேறு யாரையாவது கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கவுதமின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் பழிக்குப்பழியாக கொலை தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.






