search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து-டிரைவர் தப்பி ஓட்டம்
    X

    சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து-டிரைவர் தப்பி ஓட்டம்

    • கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் லாரி மோதி கவிழ்ந்தது.
    • நிலக்கரி சாலை முழுவதும் கொட்டியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த ஜெயராஜ்(வயது42) என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் கிளீனராக சேலம் மாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோகுல் (22) உடனிருந்தார்.

    இன்று அதிகாலை திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் லாரி மோதி கவிழ்ந்தது. இதில் நிலக்கரி சாலை முழுவதும் கொட்டியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து டிரைவர் ஜெயராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த கோகுலை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×