என் மலர்
நீங்கள் தேடியது "அமாவாசை பூஜை"
- குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள்.
- தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு.
அமாவாசை அன்று கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு. இதில் அமாவாசை விரத சமையலிலும் சரி, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போது வேதியருக்கு கொடுக்கும் பொருட்களிலும் சரி வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள். அதே போல் அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை வசிஷ்ட முனிவர், விஸ்வாமித்திரரை சந்தித்து, தனது வீட்டிற்கு உணவு அருந்த வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்டர், விஸ்வாமித்ரர் இருவருமே பயங்கர கோபக்கார முனிவர்கள். வசிஷ்டரின் இந்த அழைப்பை ஏற்ற விஸ்வாமித்ரர், தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும் என கூறினார்.
இதை கேட்ட வசிஷ்டர் திகைத்து போனார். "1008 காய்கறிகளா? அத்தனை வகை காய்கறிகளை எப்படி தேடி பிடிப்பது? எப்படி சமைப்பது?" என குழப்பமடைகிறார். ஆனால் அருகில் இருந்த வசிஷ்டரின் மனைவியும், தீவிர பதி விரதையுமான அருந்ததி, விஸ்வா மித்ரரின் வார்த்தைகளை ஏற்று, நீங்கள் கூறிய படி 1008 காய்கறிகளை சமைத்து பரிமாறுகிறேன் சுவாமி என பணிவுடன் பதிலளித்தாள்.
சிரார்த்தம் கொடுக்கும் நாளும் வந்தது. ரிஷிகளில் பிரம்மரிஷி பட்டம் வாங்கிய விஸ்வாமித்ரரும் உணவு சாப்பிட வந்தார். வாழை இலை போட்டு உணவுகளை பரிமாற துவங்கினாள் அருந்ததி. முதலில் எட்டு வாழைக்காய்களை வைத்தாள்.
பிறகு பாகற்காய், பிரண்டை, பலாக்காய் என பரிமாறி முடித்து விட்டு, 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது. உணவு அருந்துங்கள் சுவாமி என பணிவுடன் விஸ்வாமித்ரரிடம் வேண்டினாள். ஆனால் ஆத்திரமடைந்த விஸ்வாமித்ரர், என்ன இது? நான் 1008 காய்கறிகள் சமைத்து பரிமாறச் சொல்லி கேட்டால், நீ நான்கு காய்களை மட்டும் பரிமாறி விட்டு 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது என சொல்லி என்னை அவமானப் படுத்துகிறாய் என கோபமடைந்தார்.
அதற்கு அமைதியாக பதிலளித்த அருந்ததி, "சுவாமி, தாங்கள் அறியாதது இல்லை. அனைத்தும் அறிந்த நீங்களே இப்படி கோபப்படலாமா? அதாவது பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பலாக்காய் 600 காய்கறிக்கும் சமம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவை ஆயிரம் காய்கறிகள் ஆகி விட்டது. இதோ எட்டு வாழைக்காய்களை வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகி விட்டது" என கூறினாள்.
இதைக் கேட்டு சாந்தமடைந்த விஸ்வாமித்ரர், அருந்ததியின் புத்திகூர்மையையும், சாஸ்திர முறைப்படி நடக்கும் குணத்தையும் கண்டு வியந்து, அருந்ததியையும், வசிஷ்டரையும் ஆசிர்வதித்து சென்றார். சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளதன் காரணமாகவே உயர்வான இந்த 4 காய்கறிகள் மட்டும் அமாவாசை சமையலில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
- மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது.
- இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
மாசி மாதம் மகத்துவமான மாதம். மாசி மாதத்தில் கலைகளையும் கல்வியையும் கற்றறியலாம். உபநயனம் முதலான விசேஷங்கள் செய்யலாம். தீர்த்த நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்றெல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள்.
மாசி மாத அமாவாசையை பால்குண அமாவாசை என்றும், பால்குண மாதத்தின் நிறைவு நாள் என்றும் சொல்லுவது உண்டு. மாசி அமாவாசைக்கு முன்பாக சிவன் மற்றும் அன்னை பார்வதியை போற்றும் மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்து, சிவனின் அருளை பெற்ற கையோடு அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றால் பித்ருதோஷங்களில் இருந்து விடுபட முடியும்.
இந்த மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது. இந்த நாளில் பசுவிற்கு தீவனம் கொடுப்பது நல்லது. அமாவாசை நாட்கள் கிரக பிரவேசம், மொட்டை அடிப்பது, திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தம் உட்பட எந்த மங்களகரமான சடங்குகளையும் யாரும் செய்வதில்லை.
ஆனால் அமாவாசை நாட்களில் புனித கங்கையில் நீராடுதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தான தர்மங்கள், பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்து முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளை மேற்கொள்வதோடு, சனியுடன் தொடர்புடைய பரிகாரங்களையும் செய்யலாம்.
அதேபோல் குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு வழிபடலாம். அன்று புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்கலப் பொருட்கள் வைத்து வேண்டி அந்தப் புடவை முதலான மங்கலப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்கி ஆசிபெற்றால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் தங்கள் தோஷம் நீங்க வரமிளகாய், நல்எண்ணை மற்றும் பூஜை பொருட்களை வழங்கினர்.
குனியமுத்தூர்,
கோவையை அடுத்த ேகாவைப்புதூரில் என் பிளாக்கில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் சுடலை கருப்புசாமி, சித்தர் சக்தி நாதர் கோவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ சித்தர் சக்திநாதர் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் இந்த கோவிலில் அமாவாசை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரத்தியங்கரா ஹோமம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் தோஷம் நீங்க வரமிளகாய், நல்எண்ணை மற்றும் பூஜை பொருட்களை வழங்கினர். இதுகுறித்து ஸ்ரீசித்தர் சக்திநாதர் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமிகள் கூறுகையில், பிரதி மாதம் அமாவாசை தினத்தன்று இத்தகைய பிரத்தியங்கரா ஹோமம் நடைபெறும். இதனை நிகும்பலா யாகம் என்றும் கூறுவார்கள்.
நிகும்பலா யாகம் என்பது பிரத்தியங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும். யாகத்தில் இடப்படும் மிளகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது சிறப்பாகும். இந்த யாகத்தில் கலந்து கொண்டால் அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும். இழந்த பதவி, செல்வாக்கு, மீண்டும் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோக உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு உண்டாகும். திருமணம், வியாபாரம் எதிர்பார்த்த முறையில் நடைபெறும். பக்தர்கள் தங்களது தோஷம் நீங்க இந்த யாகத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். கால் கிலோ வர மிளகாய்க்கு, முக்கால் லிட்டர் நல்எண்ணை மற்றும் பூஜை பொருட்களை வழங்கி யாகத்தில் கலந்து கொள்ளலாம். இனி ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் இரவில் இந்த ஹோமம் நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்று பிரத்தியங்கரா தேவி அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
- கணக்கன்பட்டி சற்குருபீடம் ஓம் சற்குருபழனி சாமிகள் ஜீவசமாதியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
- இரவு 12 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையிலும் மற்றும் நாளை மாலை 6 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
திண்டுக்கல்:
பழனி அருகில் உள்ள கணக்கன்பட்டி சற்குருபீடம் ஓம் சற்குருபழனி சாமிகள்ஜீவசமாதியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று இரவு 12 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையிலும் மற்றும் நாளை மாலை 6 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இதில் பக்தர்கள் பெரு ந்திரளாக கலந்து கொண்டு சாமிகளின் அருளாசியை பெற்றுச்செல்லுமாறு பழனிச்சாமி சுவாமிகள் பீட நிர்வாகி மோகன் தெரிவித்தார். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.






