என் மலர்
திண்டுக்கல்
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மாமனார் வாளால் மருமகனை தலையில் வெட்டினார்.
- போலீசார் வழக்குபதிந்து மாமனாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள பொன்மாந்துரை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சின்னு(45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் சரண்யா(30) என்பவருக்கும், தேனியை சேர்ந்த தன்ராஜ் (38) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தன்ராஜ் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சரிவர வேலை இல்லாததாலும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாலும் சரண்யா தனது குழந்தை களுடன் பொன்மாந்துரை யில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
தன்ராஜ் வேலைக்கு சென்றுவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தை களை பார்க்க வருவது வழக்கம். இருந்தபோதும் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அதேபோல் சரண்யாவை தன்ராஜ் தாக்கியதால் ஆத்திரமடைந்த சின்னு வாளால் தனது மருமகன் தன்ராஜை தலையில் பலமாக வெட்டி னார்.
பலத்த ரத்த காயங்க ளுடன் தன்ராஜ் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், சப்-இன்ஸ்பெ க்டர் அருண்நாராயணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து சின்னுவை கைது செய்தனர்.
- டிப்-டாப் ஆசாமிகள் பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.
- பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டி ஏமாற்றம் அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள பெரியகோம்பை பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிப்டாப் ஆசாமிகள் சிலர் காரில் வந்து இறங்கினர். அவர்கள் அங்குள்ள பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.
முன்பணமாக ரூ.2400 கட்டினால், ரூ.1 லட்சம் பணம் கிடைக்கும். அதனை சிறுசிறு தொகைகளாக வங்கியில் செலுத்தலாம் என கூறியுள்ளனர். மேலும் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாக த்தில் தங்கள் அலுவலகம் உள்ளது எனக்கூறி உள்ளனர். டேப்லெட்டில் கூகுள் மேப் வரைபடத்தை காட்டி தங்களது கிளை அலுவலகம் பல இடங்களில் உள்ளதாக அந்த கிராம மக்களை நம்ப வைத்தனர். அதனை நம்பி அந்த கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டினர்.
சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர். 2 நாட்களில் பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஆசாமிகள் சொன்ன விலாசத்திற்கு வந்து பார்த்த போது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இல்லையென தெரியவந்தது.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இதேபோல கடந்த சில நாட்களாக கிராமப்புறங்க ளில் தாங்கள் ஆதரவ ற்றோருக்கு உதவிகள் செய்து வருவதாகக் கூறி உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு சில கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணம் மட்டுமின்றி அரிசி, பருப்பு, துணிகள் ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டு ஆதரவற்றோர் மையத்திற்கு உதவி செய்வதாக கூறி வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடி கும்பலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என போலீசார் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மழைக்கால நோய்களுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. இருந்த போதும் மழை காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆளாகி வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மழைக்கால நோய்களுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாய பணிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் தொடர்மழை வியாபாரிகளை சிரமப்படுத்தி வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல் மாவட்ட த்திற்கு மேலும் சில நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதாலும் காலையில் சாரல்மழை தூருவதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகுமோ என்று மாணவர்கள் ஏமா ற்றம் அடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் நேற்று ஒரேநாளில் 143.40 மி.மீ. மழையளவு பதிவானது. திண்டுக்கல் 33.4, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 24, பழனி 11.5, சத்திரப்பட்டி 22.4, நிலக்கோட்டை 10, வேட சந்தூர் 8.3, காமாட்சிபுரம் 5.6, பிரையண்ட் பூங்கா 20.2 மி.மீ. மழையளவு பதிவானது.
- இறந்தவர் உடலை சந்தனவர்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ள த்தில் கடந்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
- பொதுமக்களின் நலன் கருதி ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைத்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே செடிப்பட்டி உள்ளது.இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு சந்தனவர்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ள த்தில் கடந்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மழைக்காலங்களில் ஆற்றில் அதிகளவு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும்.அந்த சமயத்தில் இறந்தவர் உடலை தண்ணீரில் சிரமத்துடன் தூக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
பல ஆண்டுகளாக இந்தநிலை நீடித்து வருகிறது என அப்பகுதி மக்கள் வேதனை யுடன் தெரிவிக்கின்றனர்.எனவே இறந்தவர் உடலை புதைப்பதற்கு ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் செடிப்பட்டியைச் சேர்ந்த ராமன் (வயது 65) என்ற விவசாயி உடல் நலக்குறை வால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஏற்பாடு மேற்கொண்டனர்.
ஆற்றில் தண்ணீர் சென்ற தால் இறந்தவர் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்றுத் தண்ணீரில் இறங்கி சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைத்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முறையான சாக்கடை கால்வாய் அமைக்கப்படாத தால் நேற்று பெய்த கனமழையின்போது தண்ணீர் கிராமத்தை சூழ்ந்தது.
- பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டி பட்டி கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித் தொழிலாளிகள்.
இங்கு அங்கன்வாடி மையம், அரசு கள்ளர் பள்ளி மற்றும் முத்தால ம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில்கள் உள்ளது. இக்கிராமத்தில் முறையான சாக்கடை கால்வாய் அமைக்கப்படாத தால் நேற்று பெய்த கனமழையின்போது தண்ணீர் கிராமத்தை சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியா மல் மிகுந்த சிரமப்பட்டன.
வேறு வழியின்றி ரோட்டின் ஒரு பகுதியை உடைத்து தண்ணீர் வெளியேற்றினா லும் ஆங்காங்கே தண்ணீர் பள்ளிகூடம் மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
கனமழை பெய்யும் நேரங்களில் எல்லாம் இதேபோன்ற சூழல் நிலவுவதால் தண்ணீர் வெளியேற வடிகால் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.
- மூர்த்தி, பூமாதேவி மற்றும் 2 வயது குழந்தை ஹேமலதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூமாதேவி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தனது வீட்டு அருகே விளைந்த காளான்களை பறித்து பூமாதேவி சாப்பிட்டார். மேலும் தனது குழந்தை மற்றும் கணவருக்கும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு உண்டானது. உடனடியாக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் மூர்த்தி, பூமாதேவி மற்றும் 2 வயது குழந்தை ஹேமலதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாப்பிட்டது விஷக்காளான் வகையை சேர்ந்தது என்பதும் அதனால் தான் இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் இவர்களது வீட்டின் மின்பெட்டி பாதுகாப்பற்ற முறையில் இருந்தது.
- இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை என தெரிகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மம்மானியூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி நல்லம்மாள். இவர்கள் 2 பேரும் கூலித்தொழி லாளர்கள். இவர்களுக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இதில் அழகுமீனா (வயது18), மகன் குமார் (6) ஆகியோர் மட்டும் நேற்றுவீட்டில் இருந்தனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் இவர்களது வீட்டின் மின்பெட்டி பாதுகாப்பற்ற முறையில் இருந்தது. இது குறித்து சுந்தரம் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து மின் பெட்டியை மாற்றி தருமாறு கூறி உள்ளார். ஆனால் மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை என தெரிகிறது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் குமார் சுவிட்சை போட முயன்றார். அப்போது தகர கதவில் மின்சாரம் பாய்ந்து குமார் தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்ற அழகுமீனா சென்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர்கள் உடல் பிரேதபரிசோதனை செய்ய ப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டது. ஆனால் உடல்களை வாங்க மறுத்து அரசு மருத்துவக்கல்லூரி முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. நகர் வடக்கு போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- அகில இந்திய சப் ஜூனியர் பேட்மின்டன் தரவரிசை போட்டியில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு இறகுபந்து நடைபெற்றது.
- இதில் பழனியை சேர்ந்த மாணவி 2 வெண்கலப் பதக்கம் வென்றார்.
பழனி:
ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் நடைபெற்ற அகில இந்திய சப் ஜூனியர் பேட்மின்டன் தரவரிசை போட்டியில் 13 வயதுக்குட்பட்ட இறகுபந்து பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி 2 வெண்கலப் பதக்கம் வென்றார்.
மெயின் டிராவில் 21-12, 21-13, என்ற கணக்கில் மகாராஷ்டிரவை சேர்ந்த விதி சைனியையும், ஒரிசாவை சேர்ந்த நிமிஷா ஓஜாயை 21-6, 21-12 என்ற கணக்கில் தோற்கடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில், தெலுங்கானாவை சேர்ந்த மான்யா அகர்வாலை 21-17, 12-21, 21-19 என்ற கணக்கிலும் தோற்கடித்து கடைசி 8 க்குள் நுழைந்தார். காலிறுதியில் 10- 21, 24-22, 21-19 என்ற செட் கணக்கில்தெலுங்கானாவை சேர்ந்த ஸ்நிக்தா பீரம் என்ற முன்னனி வீராங்கனையை தோற்கடித்து மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றார்.
ஆனால் அரையிறுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த தேசிய அளவில் 2ம் இடத்தில் இருந்த அவணி விக்ரம் கோவிந்த் என்ற மூத்த வீராங்கனையிடம் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கம் பெற்று ஆறுதல் அடைந்தார்.
இதுபோல இரட்டையர் பிரிவிலும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஜெர்சிக்கா சரின் வீராங்களையுடன் ஜோடி சேர்ந்து அரையிறுதி வரை முன்னேறி அதிலும் வெண்கல பதக்கத்தை பெற்றார். இவர் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் முன்பு இருந்த 6வது இடத்திலிருந்து 2 வது இடம் முன்னேறி உள்ளார்.
ஜெய சப்த ஸ்ரீ இந்த மாதம் வருகிற 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒடிசாவில் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மெயின் டிரா வீராங்கனையாக கலந்து கொண்டு தமிழக வீராங்க னையாக விளையாட உள்ளார். மேலும் இந்த ஆண்டு இவர் 3 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு சதீஷ்குமார் பயிற்சி அளித்து வருகிறார். ஆசியப் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்வது தனது கனவு என அவர் தெரிவித்துள்ளார்.
- நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
- பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு ள்ளனர்.
வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் இது கைகல ப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவ லர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடை ந்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெண்மைக்கு எத்த னையோ சிறப்புகள் இருந்தா லும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை,
- சிறு குழந்தைகளு க்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைெபற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசியதாவது:-
பெண்மைக்கு எத்த னையோ சிறப்புகள் இருந்தா லும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை, ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறப்பாகும்.
நம்முடைய உடலும், மனமும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. மனதில் ஏற்படும் மாற்றங்கள். முக்கியமாக கவலைகள் உடலையும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பெரிதும் பாதிக்கின்றது. பாது காப்பான தாய்மைக்கு. கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப கால கவனிப்புகள், பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளு க்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஏனெனில், பாதுகா ப்பான தாய்மையை பின்பற்றாததால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை களால் பாதிக்கப்படுகி ன்றனர். இவர்களுடைய அஜாக்கிரதையினால் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு விகிதமும், குழந்தை களின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.
பாது காப்பான தாய்மைக்காக கூறப்பட்டுள்ள அறிவுரை களை தாய்மார்கள் பின்பற்றுவதன் மூலம் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். அவ ர்களின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய முடியும். அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெ டுத்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருநங்கைகள் சுற்றுலா பயணிகளை தலையில் கை வைத்து பணம் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது.
- அவர்கள் பணம் தராததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருள்களை அள்ளிச் சென்று ரகளையில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். திருநங்கைகள் சுற்றுலா பயணிகளை தலையில் கை வைத்து பணம் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக போலீசாரின் நடவடிக்கைகளால் கொடைக்கானலில் திருநங்கைகள் மிரட்டல் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது பைக் மற்றும் காரில் கும்பலாக வந்து ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர். கலையரங்கம், நகரின் முக்கிய பகுதிகள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளை வழிமறித்து பணம் கேட்டு வருகின்றனர்.
மேலும் மிரட்டல் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.ஏரிச்சாலை பகுதியில் உள்ள கடைகளில் பணம் கேட்டனர். அவர்கள் பணம் தராததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருள்களை அள்ளிச் சென்று ரகளையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏரிச்சாலை, நகர் பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தங்களை மிரட்டுவதால் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியவில்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






