என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
சாக்குமூட்டையில் ஆண் பிணம் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் போலீசார்
- சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- அவரது சட்டை பையில் பீடி தீப்பெட்டி, மோட்டார் சைக்கிளின் சாவி, பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவை இருந்தது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை அருகே, ராஜவாய்க்கால் செல்லும் வழியில் சாலையோரம் முட்புதரில், சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம்வீசியதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செம்பட்டி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அந்த நபர் கைலி வேஷ்டி, அரை கை சட்டை அணிந்து இருந்தார். அவரது சட்டை பையில் பீடி தீப்பெட்டி, மோட்டார் சைக்கிளின் சாவி, பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவை இருந்தது.
மேலும் அவர் இடுப்பில் தாயத்து போட்ட கருப்பு கயிறு கட்டியிருந்தார். அடையாளம் தெரியாத அவரை யாராவது கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி அந்தப் பகுதியில் வீசி விட்டுச் சென்று இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.
மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் சுமார் 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி இங்கு வீசி சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி போட்ட, நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தெரிய வில்லை.
சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவம் குறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபர் யார்? அவரை கொலை செய்து அந்த பகுதியில் வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த நபரின் சட்ைட காலரில் செம்பட்டியை சேர்ந்த தையல் கடை முகவரி இருந்ததால் அவர் செம்பட்டிைய சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அப்பகுதியில் மாயமான நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






