என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் அதனை இருப்பு வைக்க முடியாததால் அழுகி வருகிறது.
    • பருவமழை முடியும் வரை இதே நிலை தொடரும் என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினசரி சுமார் 3 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பண்டிகை மற்றும் விசேச நாட்களில் அதிக அளவு காய்கறிகள் வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியும், பறிக்க முடியாத நிலையில் அழுகியும் வருகிறது. இதனால் காய்கறி செடிகள் பயிரிட்ட விவ சாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் அதனை இருப்பு வைக்க முடியாததால் அழுகி வருகிறது.

    இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.95 முதல் விற்பனை யாகிறது. வெளி மார்க்கெ ட்டில் இதைவிட கூடுதலாக விற்கும் என்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.

    ஆனால் அதே வேளையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளியை பறிக்காமலும், பறித்த தக்காளியை குப்பையிலும் விவசாயிகள் கொட்டி செல்கின்றனர்.

    இதேபோல முருங்கை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், வெண்டை க்காய் கிலோ ரூ.20 என்ற விலையிலும் விற்பனையா கிறது.

    பெரும்பாலான காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதும், ஒருசில காய்கறிகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதும் விவசாயி களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ெதாடர் மழை பெய்து வருவதால் அங்கிருந்து காய்கறிகள் வரத்து குறைந்ததால் இதுபோன்ற நிலையற்ற விலை உள்ளதாக வியாபாரிகள் தெரி வித்தனர்.

    பருவமழை முடியும் வரை இதே நிைல தொடரும் என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    • சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியதில் பெண் பரிதாபமாக பலியானார்.
    • வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூரை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி சாமியாத்தாள்(55). இவர் தனது உறவினர் சந்திரசேகர்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து பூதிப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் அய்யர்மடம் அருகே சாலையில் இருந்து திரும்ப முயன்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பின்னால் அமர்ந்திருந்த சாமியாத்தாள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சந்திரசேகர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    திண்டுக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடங்குவதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர்பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    இதனை வாக்காளர்கள் பார்வையிட்டு தங்கள் பெயர் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, முகவரிமாற்றம் செய்ய, நகல் அட்டை பெற விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் நேரடியாக சென்று மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ல் அழைத்தும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 12,13, 26 மற்றும் 27-ந்தேதிகளில் காைல 10 மணிமுதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைெபறும். இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

    இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல்அலுவலரும், கலெக்டருமான விசாகன் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அவர் வழங்கினார்.

    பழனி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,34,347, பெண்கள் 1,40,914, இதரர் 52 என மொத்தம் 2,75,313 பேர் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,15,490, பெண்கள் 1,22,743, இதரர் 9 என மொத்தம் 2,38,242 பேர் உள்ளனர்.

    ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,38,819, பெண்கள் 1,50,891, இதரர் 26 என மொத்தம் 2,90,736 பேர் உள்ளனர்.

    நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,20,711, பெண்கள் 1,25,683, இதரர் 11 என மொத்தம் 2,46,405 பேர் உள்ளனர்.

    நத்தம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,37,960, பெண்கள் 1,44,489, இதரர் 55 என மொத்தம் 2,82,508 பேர் உள்ளனர்.

    திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,31,495, பெண்கள் 1,39,302 இதரர் 53 என மொத்தம் 2,70,850 பேர் உள்ளனர்.

    வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,28,990, பெண்கள் 1,47,789 என மொத்தம் 2,63,779 பேர் உள்ளனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் ஆண்கள் 9,08,812, பெண்கள் 9,58,815, இதரர் 206 என ெமாத்தம் 18,67,833 பேர் உள்ளனர்.

    • கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் மாலை 3 மணி.46 நிமிடத்திற்கு ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம் ஆரம்பமாகி இருந்தது.
    • உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த நாகரத்தினம் என்ற மூதாட்டி அதனை செய்து காட்டினார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் ச‌ந்திர‌கிர‌க‌ண‌த்தினை சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள், பொதும‌க்க‌ள், மாண‌வ‌ மாண‌விக‌ள் க‌ண்டு ர‌சிக்க‌ அப்ச‌ர்வேட்ட‌ரி வான் இய‌ற்பிய‌ல் ஆராய்ச்சி மைய‌த்தில் சிற‌ப்பு ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்பட்டிருந்தது.

    2 பெரிய‌ தொலைநோக்கிக‌ளில் ச‌ந்திர‌கிர‌க‌ண‌த்தினை காண்ப‌த‌ற்கு ஏற்பாடுகள் மற்றும் வ‌ர‌க்கூடிய‌ பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அனைவ‌ரும் க‌ட்ட‌ண‌மின்றி க‌ண்டு ர‌சித்து செல்ல‌லாம் என வான் இயற்பியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் மாலை 3 மணி.46 நிமிடத்திற்கு ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம் ஆரம்பமாகி இருந்தது. இத‌னை தொட‌ர்ந்து ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தென்படும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர்.

    ஆனால் மலைப்பகுதியில் அடர் பனி மூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை பெய்ததால் சந்திரகிரகணம் தென்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ மாணவியர்கள், பொதுமக்களை அரங்கில் அமர வைத்து யூடியூப் சேனல் மூலம் சந்திர கிரகணத்தை நேரலையாக ஒளிப்பரப்ப செய்து கிரகணம் ஏற்படும் முழு விவரங்களையும் விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.

    மேலும் இது குறித்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

    கிரகணம் நடைபெறும் சமையத்தில் உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த நாகரத்தினம் என்ற மூதாட்டி அதனை செய்து காட்டினார். கிரகண சமயத்தில் உலக்கை நின்று முடிந்ததும் அது சாய்ந்து விழுந்தது.

    • பிரையண்ட் பூங்காவில் பல்வேறு மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கண்காட்சிக்காக தயார் செய்யப்படும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • பயணிகளின் பாதுகாப்பு கருதியும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுப்பதற்காகவும், ரூ.21 லட்சம் மதிப்பில் 56 கண்காணிப்பு காமிரா பல்வேறு இடங்களில் பொருத்தி உள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனின் போது பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா, மலர்கண்காட்சி, தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது 2-வது ஆப்சீசன் தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்து உள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    பிரையண்ட் பூங்காவில் பல்வேறு மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கண்காட்சிக்காக தயார் செய்யப்படும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதியும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுப்பதற்காகவும், ரூ.21 லட்சம் மதிப்பில் 56 கண்காணிப்பு காமிரா பல்வேறு இடங்களில் பொருத்தி உள்ளனர்.

    இதில் பதிவாகும் காட்சிகளை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா வருகிற 11-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக பல்கலைக்கழக விருந்தினர் இல்லமும், முதல்-அமைச்சருக்காக துணைவேந்தர் இல்லமும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    பிரதமர் வருகையை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல்கலைக்கழகம் அருகே நான்குவழிச்சாலையில் உள்ள அணுகு சாலைகளில் வேகத்தடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பதிவாளர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் விழாமேடை மற்றும் பல்கலைக்கழக வளாகப்பகுதிகளை கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், மதுரை மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், திண்டுக்கல் டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் பிரதமர் வருகையை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ராமசீனிவாசன் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருவது இதுவே முதல் முறை.

    எனவே மதுரை விமான நிலையத்தில் இருந்து பிரதமரை வரவேற்க பா.ஜ.க. நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. பிரதமர் வருகையை திண்டுக்கல் மக்கள் மட்டுமின்றி தமிழகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றார்.

    • அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரை கடத்தியவரை கைது செய்தனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருேக உள்ள நல்லகண்டம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தோட்டத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அக்காவின் கணவர் சின்னத்தம்பி, தனது உறவினர் பொன்ராஜூக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரை காரில் கடத்தினார்.

    சின்னத்தம்பியுடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனர். தனது மகளை காணாமல் தவித்த பெற்றோர் அவர் கடத்தப்பட்டது குறித்து அறிந்ததும் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் பாக்கியராஜ், வேல்முருகன் ஆகியோர் கொண்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சிறுமியை கடத்திய ஒருவரது செல்போன் சிக்னலை டிரேஸ் செய்து பார்த்ததில் அந்த கும்பல் கரூர் மாவட்டம் கம்பிளியம்பட்டியில் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரை கடத்திய ராமசாமி என்பவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான சிறுமியின் அக்கா கணவர் சின்னத்தம்பி, சிங்கம்பட்டியை சேர்ந்த கங்கேஸ்வரன் உள்பட மேலும் 4 பேைர தேடி வருகின்றனர்.

    • அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்தவர்களை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • சிகிச்சையில் இருந்த எலக்ட்ரீசியன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூரைச் சேர்ந்தவர் அம்மாபட்டி (வயது 35). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பரான அழகாபுரியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சண்முகா நதி பகுதிக்கு வந்தார்.

    அப்போது நவீன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    சிகிச்சையில் இருந்த அம்மாபட்டி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா மற்றும் நவீன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே மாயமான தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தார். அதன் பின்பு வீட்டில் இருந்த மாணவி மீண்டும் திடீரென மாயமானார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). காய்கறி வியாபாரி. இவரது மகள் யோகஜோதி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த மாதம் 21-ந் தேதியன்று விடுதியில் இருந்து மாணவி மாயமாகி விட்டதாக அவரது தந்தைக்கு வார்டன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து முருகன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

    இந்நிலையில் மீண்டும் யோக ஜோதி விடுதிக்கு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து முருகன் விசாரித்தார். அதன் பின்பு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் நிலக்கோட்டை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • எந்தவிதமான ஓட்டுனர் உரிமமும் இன்றியும் இரவு பகல் பாராமல் கற்களை ஏற்றி வருகிறார்கள். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும்.
    • எனவே இந்த லாரியை சிறை பிடித்து வந்துள்ளோம் என தெரிவித்தனர். உடனடியாக நிலக்கோட்டை போலீசார் லாரி டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமம் மிளகாய்பட்டியை ஒட்டி உள்ள கரட்டு பகுதியில் ஒரு தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் இருந்து கல் உடைத்து லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். சில நேரங்களில் கல்குவாரியில் எந்தவிதமான அறிவிப்பும் இன்றி வெடி போடுவதால் அங்கிருந்து கற்கள் வீடுகளிலும் விழுவதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் டிப்பர் லாரி ஒன்றில் குவாரியில் உடைக்கப்பட்ட கற்களை அள்ளிக் கொண்டு வந்தனர்.

    அந்த கற்கள் வழிெநடுகிலும் விழுந்த படி சென்றது. இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் சாலையில் கற்களை சிந்திய படி சென்றால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்படி கற்களை சிந்திய படி செல்ல வேண்டாம் என்று கூறி தட்டி கேட்டுள்ளனர். இதற்கு லாரி டிரைவர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி இளைஞர்களை திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் லாரியை சிறை பிடித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பிள்ளையார் நத்தம் வருவாய் ஆய்வாளர் மீனாட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த என்.ஆண்டிபட்டி, மிளகாய் பட்டி பகுதி இளைஞர்கள் சிறை பிடித்த டிப்பர் லாரியை நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கல்குவாரியில் ஓட்டி வரும் டிப்பர் லாரிக்கு எந்த விதமான அரசு அனுமதி கடிதம் இன்றியும், டிப்பர் லாரி டிரைவருக்கு எந்தவிதமான ஓட்டுனர் உரிமமும் இன்றியும் இரவு பகல் பாராமல் கற்களை ஏற்றி வருகிறார்கள். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

    ஆகையால் தான் இந்த லாரியை சிறை பிடித்து வந்துள்ளோம் என தெரிவித்தனர். உடனடியாக நிலக்கோட்டை போலீசார் லாரி டிரைவருக்கு அபராதம் விதித்தும், அதேபோன்று என்.ஆண்டிபட்டி, மிளகாய் பட்டி பகுதி இளைஞர்களுக்கு தனியார் கல்குவாரி மீது ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தால் மாவட்ட கலெக்டர், தாசில்தாரிடம் உரிய மனு செய்து நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் வழங்கும் பணத்துக்கு ரசீது இல்லாமல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர்கள் மோசடி செய்துள்ளனர்.
    • எனவே பொதுமக்களை மிரட்டி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள யாகப்பன்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பீட்டர் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், யாகப்பன்பட்டியில் பொதுமக்களிடம் வரி வசூல் செய்து அந்தோணியார் கோவில் கட்டி வருகிறோம். பொதுமக்கள் வழங்கும் பணத்துக்கு ரசீது இல்லாமல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ், கென்னடி, ஆரோக்கியசாமி, ஞானராஜ், விமல் ஆகியோர் மோசடி செய்துள்ளனர்.

    ரூ.1 லட்சம் வரை மக்களிடம் வசூல் செய்த பணத்தை கணக்கில் காட்டவில்லை. மேலும் ஊர் திருவிழா அன்னதானத்தில் ஏலம் விடப்பட்ட மளிகை பொருட்களுக்கான தொகை ரூ.52 ஆயிரத்தையும் கணக்கில் காட்டாமல் கையாடல் செய்து விட்டனர்.

    இது குறித்து நாங்கள் கேட்டபோது, வெளியூரைச் சேர்ந்த கூலிப்படையினரை வைத்து எங்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். கோவில் கட்டுமானம் தொடர்பாக ஊர் கூட்டம் நடத்த வலியுறுத்தினாலும் அவர்கள் வராமல் உள்ளனர். மேலும் எங்கள் அனுமதி இல்லாமல் ஊர் கூட்டம் நடத்தினால் யாரும் உயிருடன் செல்ல மாட்டீர்கள் என மிரட்டுகின்றனர்.

    17 இடங்களில் நாங்கள் வைத்திருந்த சி.சி.டி.வி. கேமராக்களை அபகரித்து விட்டனர். இது போன்ற முறைகேடுகள் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே பொதுமக்களை மிரட்டி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் புகாரையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்து சென்றனர்.

    • பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பவளவிழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
    • பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டியில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. 1947-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சமூக பணியோடு கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

    இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பவளவிழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு காந்தி கிராம பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் குர்மித்சிங் வரவேற்று பேசுகிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டமளிப்பு விழாவுக்காக 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து மாலை 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார். இதற்காக காந்தி கிராம சுகாதார, குடும்ப நல அறக்கட்டளை வளாகத்தில் ெஹலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்நோக்கு அரங்குக்கு வந்தடைகிறார். இதனை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் புதுப்பொழிவு பெற்று வருகிறது.

    ஹெலிபேடுதளம், பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரங்குக்கு வரும் மாணவர்கள், பார்வையாளர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதை வழித்தடங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித் சிங், பதிவாளர் சிவக்குமார், காந்தி கிராம அறக்கட்டளை அறங்காவலர் சிவக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×