என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு"

    • எந்தவிதமான ஓட்டுனர் உரிமமும் இன்றியும் இரவு பகல் பாராமல் கற்களை ஏற்றி வருகிறார்கள். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும்.
    • எனவே இந்த லாரியை சிறை பிடித்து வந்துள்ளோம் என தெரிவித்தனர். உடனடியாக நிலக்கோட்டை போலீசார் லாரி டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமம் மிளகாய்பட்டியை ஒட்டி உள்ள கரட்டு பகுதியில் ஒரு தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் இருந்து கல் உடைத்து லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். சில நேரங்களில் கல்குவாரியில் எந்தவிதமான அறிவிப்பும் இன்றி வெடி போடுவதால் அங்கிருந்து கற்கள் வீடுகளிலும் விழுவதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் டிப்பர் லாரி ஒன்றில் குவாரியில் உடைக்கப்பட்ட கற்களை அள்ளிக் கொண்டு வந்தனர்.

    அந்த கற்கள் வழிெநடுகிலும் விழுந்த படி சென்றது. இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் சாலையில் கற்களை சிந்திய படி சென்றால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்படி கற்களை சிந்திய படி செல்ல வேண்டாம் என்று கூறி தட்டி கேட்டுள்ளனர். இதற்கு லாரி டிரைவர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி இளைஞர்களை திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் லாரியை சிறை பிடித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பிள்ளையார் நத்தம் வருவாய் ஆய்வாளர் மீனாட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த என்.ஆண்டிபட்டி, மிளகாய் பட்டி பகுதி இளைஞர்கள் சிறை பிடித்த டிப்பர் லாரியை நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கல்குவாரியில் ஓட்டி வரும் டிப்பர் லாரிக்கு எந்த விதமான அரசு அனுமதி கடிதம் இன்றியும், டிப்பர் லாரி டிரைவருக்கு எந்தவிதமான ஓட்டுனர் உரிமமும் இன்றியும் இரவு பகல் பாராமல் கற்களை ஏற்றி வருகிறார்கள். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

    ஆகையால் தான் இந்த லாரியை சிறை பிடித்து வந்துள்ளோம் என தெரிவித்தனர். உடனடியாக நிலக்கோட்டை போலீசார் லாரி டிரைவருக்கு அபராதம் விதித்தும், அதேபோன்று என்.ஆண்டிபட்டி, மிளகாய் பட்டி பகுதி இளைஞர்களுக்கு தனியார் கல்குவாரி மீது ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தால் மாவட்ட கலெக்டர், தாசில்தாரிடம் உரிய மனு செய்து நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×