என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • உயரமான அளவில் கட்சிக்கொடி கட்ட ஒருதரப்பினர் முயன்றனர். இதனால் அங்கு வந்த போலீசார் கட்சிக்கொடி கட்டக்கூடாது என தெரிவித்தனர்.
    • இருதரப்பினரும் கொடிகளை அகற்றுமாறு போலீசார் எச்சரித்தனர்.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையிலும், ஹெலிபேடு தளத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரையிலும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சார்பில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

    இன்று மேலும் உயரமான அளவில் கட்சிக்கொடி கட்ட ஒருதரப்பினர் முயன்றனர். இதனால் அங்கு வந்த போலீசார் கட்சிக்கொடி கட்டக்கூடாது என தெரிவித்தனர். இருதரப்பினரும் கொடிகளை அகற்றுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது யார் முதலில் கொடியை அகற்றுவது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து போலீசாரே கொடியை அகற்ற முயன்றதால் அதனை தடுக்க முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசார் கீழே விழும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து அனைத்து கொடிகளையும் அகற்ற உத்தரவிட்டார். அதன் பின் கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. விழாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியினர் யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தி தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வடமதுரை மற்றும் அய்யலூர் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.
    • அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூரை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு காலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பள்ளியில் ஆப்சென்ட் போடப்பட்டது. இதுதொடர்பாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாக வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அரசு பஸ் இயக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போக்குவரத்து வசதியின்றி தவித்தனர். இதனால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இன்று காலை மம்மானியூர் வந்த அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கொம்பேறிபட்டி, காடையனூர், மம்மானியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு போதுமான பஸ்வசதி செய்து தரவேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    • கொடைக்கானல் மேல்மலை கிராமமான கும்பூர் அக்க‌ரைக்காடு ம‌லைக் கிராமத்தின் இடையே தூவ‌த்தூர் அருவி அமைந்துள்ளது.
    • தொட‌ர் ம‌ழையால் தூவ‌த்தூர் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கொடைக்கானல்:

    மலைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கான‌லில் நில‌வும் இத‌மான‌ சீேதாஷ்ணம் மற்றும் ம‌லைப்ப‌குதிக‌ளில் கொட்டிக்கிட‌க்கும் இய‌ற்கை அழ‌கினை க‌ண்டு ர‌சிக்க‌ த‌மிழ‌க‌ம் மட்டுமின்றி கேர‌ளா, ஆந்திரா, க‌ர்நாட‌கா உள்ளிட்ட‌ பல்வேறு மாநிலங்க‌ளில் இருந்தும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகின்றனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான கும்பூர் அக்க‌ரைக்காடு ம‌லைக் கிராமத்தின் இடையே தூவ‌த்தூர் அருவி அமைந்துள்ளது. இந்த‌ அருவி மற்றம் சுற்றியுள்ள ப‌சுமை போர்த்திய‌ ம‌லை முக‌டுக‌ளையும், அருவியை சுற்றியுள்ள‌ சோலைக்காடுக‌ளையும் கண்டு ர‌சிக்க‌ கொடைக்கான‌லில் இருந்து 48 கி.மீ செல்ல‌ வேண்டும்.இந்த சில வாரங்களாக மேல்மலைக்கிராம‌ப்பகுதிகளில் பெய்த‌ தொட‌ர் ம‌ழையால் தூவ‌த்தூர் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அருவியை கிராமத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று பார்க்க முடியும். சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கியுள்ள நிலையில் அருவியினை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பெயர் பலகைகள், பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற சுற்றுலாத்துறையினர் முன்வர வேண்டும் என்ப‌தே இந்த‌ப்ப‌குதி ம‌லைக்கிராம‌ ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

    • கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் வீட்டுச்சுவர் பலமிழந்து காணப்பட்டது
    • 3 தூய்மை பணியாளர்களின் வீடுகள் இடிந்து சேதமடைந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி 28-வது வார்டு நெட்டு த்தெரு முனிசிபல் காலனி யில் தூய்மைப்பணி யாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 70 ஆண்டுக ளுக்கு முன்பாக நகராட்சி சார்பில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த வீடுகளில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிதிலமடைந்து காணப்பட்டது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் வீட்டுச்சுவர் பலமிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் முனிசிபல் காலனியை சேர்ந்த காளியப்பன்,லட்சுமணன் உள்பட 3 தூய்மை பணியாளர்களின் வீடுகள் இடிந்து சேதமடைந்தது.

    அப்போது வீட்டில் இருந்த காளியப்பன் மற்றும் லட்சுமணன் குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி யதால் காயமின்றி உயிர்தப்பி னர். இருந்தபோதும் வீடுகள் இடிந்து சேதமடைந்ததால் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • எரியோடு கோவிலூர் பகுதியில் வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • 14-ம் நூற்றாண்டு வில்லேந்திய வீரன் நடுகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே எரியோடு கோவிலூர் பகுதியில் வரலாற்று ஆய்வு குழு ஆய்வாளர் விஸ்வ நாததாஸ், மாணவர் ரத்தின முரளிதர், தலித் சந்திரசேகர், பெருமாள்சாமி, புண்ணியமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் இடைக்கால பாண்டியர் ஆட்சிக்காலத்தில் பள்ளி நாடு எனப்படும் எரியோடு, கோவிலூர் பகுதியில் 14-ம் நூற்றாண்டு வில்லேந்திய வீரன் நடுகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுகல் 3 அடி அகலம், 6 அடி நீளம் ¾ அடி கனம் கொண்ட பலகை கல் நடுகல்லாக உள்ளது.

    வீரனின் தலையில் தலைப்பாகை மகுடமும், அதில் முத்துச்சரம் சுற்றப்பட்டு தலைப்பாகை முனையும் முத்துச்சரத்தின் முனையும், காற்றில் அசைந்தாடுவது போல் உள்ளது. இரு காதிலும் குண்டலங்கள் தொங்கு கிறது. மார்பில் கழுத்தணி ஆரமும், வீரச்சங்கிலியும், இருதோள்களிலும் லாகு வளையமும், இருகைகளிலும் மணிகட்டில் கங்கணமும் உள்ளது.

    வலது கை கத்தியை நீட்டிபிடித்த நிலையும், இடதுகை வில்லை பிடித்து தரையில் ஊன்றிய நிலை யில் உள்ளது. இடது தோளுக்கு மேலே வேல் நீட்டிய நிலையில் உள்ளது. அதற்கு கீழே அம்பார துணியில் அம்பு நீட்டிய நிலையில் உள்ளது. வீரனின் இடை கச்சை முழங்கால் வரை உள்ளது. இடைக்கச்சை யில் குறுவாள் தொங்கிய நிலையில் உள்ளது.

    இந்த நடுகல் வீரன் நிற்கும் நிலையில் போருக்கு தயாராக உள்ளதை குறிக்கிறது. 14ம் நூற்றாண்டு பிற்கால பாண்டியரின் கால நடுகல். லிங்கத்தில் ஆவுடையார் மட்டும் உள்ளது. இதில் லிங்கம் காணவில்லை ஆவுடையார் முறையாக செதுக்கப்பட வில்லை.

    தமிழரின் மழை அளவு மழை மானி-3 மழை அளவு 1 செ.மீ 1 உழவு எனப்படும். பெரிய கற்களில் வாப்பாடுடன் கூடிய குழி ஆட்டுக்கல் போல் இருக்கும். இதுவே பழந்தமிழரின் மழை மானி. இதில் பெரிய மழை மானி 4 டன் எடை, 6 அடி உயரம், 3½ அடி விட்டம் கொண்டது. அக்குழியில் வாப்பாடு பகுதி ¼ அடி உயரமும் மேலும் நடுவில் உள்ள குழியின் விட்டம் 1 அடியும் அதன் ஆழம் 1½ அடியும் கொண்ட அதன் உள்கூடு விட்டம் 1½ அடியும் மிகப் பெரிய மழைமானி.

    மாவட்டத்திலேயே இதுதான் பெரிய மழைமானி. மற்ற இரண்டும் இதை விட சிறியதானவை. இதிலிருந்து மழை அளவை கணக்கிடு வதில் நம் முன்னோர்கள் மிகுந்த மதி நுட்பத்துடன் செயல்பட்டு வந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.

    இதே போல் விநாயகர் சிற்பம் போன்றும் செதுக்க ப்பட்டுள்ளது. அதன் மேல் சூரியன், சந்திரன் கோட்டுரு வாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 15ம் நூற்றா ண்டைச் சேர்ந்தவையாக இருக்கும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதே போல மண்பானை ஓடுகளும் இரும்பு ஆயுதம் தயாரிக்க ப்படும் இரும்பு தாது கற்களும் இங்கு அதிகம் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    • பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
    • இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்தவர் பொன்னழ கப்பன். இவரது மகன் குருபா(7). நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முய ன்றார். அப்போது கொட்டா ம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் விரைந்து சென்று சிறுவ னின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிகள் உள்ள பகுதியில் டிப்பர் லாரிகள் அதிவேக மாக வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவ தாக கூறி வியாபாரிகள், பொது மக்கள் சாலைமறி யலில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்ததால் அவர்கள் கலைந்து சென்ற னர். நேற்று திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான். அரசு விடுதியில் தங்கிய மாணவன் எப்படி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார் என கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.

    அதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இந்தநிலையில் லாரி மோதி மற்றும் ஒரு பள்ளி மாண வன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • ரூ.4.50 கோடி நன்கொடைக்கு பக்தர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில ங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்ப ட்டது. 16 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    பழனி கோவில் கும்பாபி ேஷக திருப்பணி தொட ர்பாக நன்கொடையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடை பெற்றது. அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தலைைமயில் அறங்காவ லர்கள், பழனிகோவில் இணை ஆணையர் நட ராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனி கோவிலில் நன்கொ டையாளர்கள், உள்ளூர் முக்கிய பிரமுக ர்கள், வெளிநாடுகளை சேர்ந்த முருக பக்தர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கும்பாபி ஷேகம் தொட ர்பாக நடைபெற வேண்டிய திருப்பணிகள் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    இதில் ரூ.3.14 கோடி மதிப்பில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக 7 பணிகளும், ரூ.1.36 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியி லான பூஜை பொருட்கள் காணிக்கை களை செய்து கொடுக்க நன்கொடை யாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மொத்தம் ரூ.4.50 கோடி நன்கொடைக்கு பக்தர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.

    • 2018-19, 2019-20ம் கல்வி ஆண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்குகிறார்.
    • இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை 16-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர், ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக பிரதமர் மோடி நாளை காலை பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதியம் 2 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் வருகிறார். பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார்.

    2018-19, 2019-20ம் கல்வி ஆண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்குகிறார். தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார்.

    மாலை 5 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்தில் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிற்கும் வகையில் ஹெலிபேடு தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பல முறை ஒத்திகை நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருகை தருவதால் திண்டுக்கல், காந்திகிராமம், சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகம் மத்திய பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அருகில் உள்ள சிறுமலை வனப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் இயக்குவதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் மதுரையில் இருந்து கார் மூலம் பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மதுரை மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அலங்காநல்லூர், நத்தம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் மதுரை, திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை திண்டுக்கல்லில் இருந்து காந்தி கிராமம் மார்க்கமாக மதுரை செல்லும் அனைத்து இலகு ரக, கனரக, இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தோமையார்புரம், செம்பட்டி, காமலாபுரம் வழியாக அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடி வழியாக செல்ல வேண்டும்.

    மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக வரும் வாகனங்கள் அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடி, காமலாபுரம், செம்பட்டி, தோமையார்புரம் வழியாக திண்டுக்கல்லை கடந்து செல்ல வேண்டும் என்றும், நாளை (11-ந் தேதி) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல்லில் இருந்து காந்திகிராமம் மார்க்கமாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் தோமையார்புரம், செம்பட்டி, காமலாபுரம் வழியாக அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடி வழியாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 சக்கர வாகன ரோந்தும், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரு சக்கர வாகன ரோந்தும் நியமிக்கப்பட்டும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பிரதமர், முதல்-அமைச்சர் வந்து செல்லும் வழித்தடங்களில் வெடிகுண்டு கண்டறியும் 30 குழுவினர் நியமிக்கப்பட்டு அவர்களுடன் மோப்பநாய் தடுப்பு படையினரும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் இன்று காலை 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை ஆள் இல்லா வான் வெளி வாகனம் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்கலைக்கழகத்தை சாராதவர்களுக்கு உள்ளே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • ஹெலிபேடு தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புபடை பிரிவினர் காந்திகிராமம் வந்தனர். விழா அரங்கம், ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பிரதமர் வந்து செல்லும் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன், திண்டுக்கல் டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு பிரிவினர் ஆலோசனைகள் வழங்கினர். பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்தை சாராதவர்களுக்கு உள்ளே தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஹெலிபேடு தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.

    பிரதமர் பங்கேற்கும் உள் அரங்கத்தில் பணிகள் முடிவடைந்தது. இதனைதொடர்ந்து இன்று முதல் மத்திய பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் தமிழக மந்திரிகள், அதிகாரிகள், பங்கேற்க உள்ளனர். இதனால் அமைச்சர் அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமர்மோடி, முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர். பிரதமர் மற்றும் முதல்-அமைச்சர் வரும் காண்வாயில் பங்கேற்க அரசு சார்பில் 3 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நவம்பர் 11-ந்தேதி ஹெலிபேடு தளம், காந்திகிராம பல்கலைக்கழகம், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி என 3 இடங்களில் தயார் நிலையில் இருக்கும். ஒரு குழுவில் 4 டாக்டர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நாளை ஒத்திகை நடைபெறும் என்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்திருந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, முராஜிதேசாய், ராஜீவ்காந்தி என 4 பிரதமர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வரும் 5-வது பிரதமர் மோடி என்பதால் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்வி பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவித்தார். இதேபோல் பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகர்நிலை பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைகழகமாக நிலை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என கல்வியாளார்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது
    • இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த சாலை வழியாக பஞ்சந்தாங்கி, தபால்புள்ளி, கிணற்றுப்பட்டி, குருந்தம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு விவசாயிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    மேலும் வடமதுரையிலிருந்து நத்தத்திற்கு செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள ரெயில்வேகேட் ஏற்கனவே 2 முறை உடைந்து விழுந்து ள்ளது. தற்போது மீண்டும் சாலையில் உடைந்துள்ளது. பயணிகள் செல்லாததால் சேதம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளோம். மேலும் முறையாக பராமரிக்காத தால் மழை காலத்தில் கேட் உடைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விசயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பள்ளி செல்லும் சாலையில் சேறும் சகதியு மாக மாறி அவ்வழியாக சென்று வர மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். கொல்லன்குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே கிணற்றுபட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பாலா தோட்டம், களத்து ப்பட்டி, கணவாய்ப்பட்டி, தொட்டியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர்.

    இதன் அருகேயே அங்க ன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலை அருகே கொல்லன்குளம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த குளம் நிரம்பி சாலை யில் தண்ணீர் தேங்குகிறது.

    இதனால் சேறும் சகதியு மாக மாறி அவ்வழியாக சென்று வர மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகளும் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியா மல் தவித்து வருகின்றனர்.

    எனவே இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். கொல்லன்குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமகிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
    • இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமகிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார். முன்னதாக 11-ந்தேதி காலையில் கரூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    அதனைதொடர்ந்து அங்கிருந்து கார்மூலம் திண்டுக்கல் வருகை தரு கிறார். முதல்-அமைச்சருக்கு திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட எல்லையான வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர, நகர பகுதிபேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    திண்டுக்கல் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் தெரி வித்துள்ளனர்.

    ×