search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள்
    X

    அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

    திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள்

    • வடமதுரை மற்றும் அய்யலூர் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.
    • அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூரை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு காலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பள்ளியில் ஆப்சென்ட் போடப்பட்டது. இதுதொடர்பாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாக வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அரசு பஸ் இயக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போக்குவரத்து வசதியின்றி தவித்தனர். இதனால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இன்று காலை மம்மானியூர் வந்த அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கொம்பேறிபட்டி, காடையனூர், மம்மானியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு போதுமான பஸ்வசதி செய்து தரவேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×