என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் தொடர் மழையால் ஆர்ப்பரித்துக் கொட்டும் தூவ‌த்தூர் அருவி
    X

    தூவத்தூர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

    கொடைக்கானலில் தொடர் மழையால் ஆர்ப்பரித்துக் கொட்டும் தூவ‌த்தூர் அருவி

    • கொடைக்கானல் மேல்மலை கிராமமான கும்பூர் அக்க‌ரைக்காடு ம‌லைக் கிராமத்தின் இடையே தூவ‌த்தூர் அருவி அமைந்துள்ளது.
    • தொட‌ர் ம‌ழையால் தூவ‌த்தூர் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கொடைக்கானல்:

    மலைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கான‌லில் நில‌வும் இத‌மான‌ சீேதாஷ்ணம் மற்றும் ம‌லைப்ப‌குதிக‌ளில் கொட்டிக்கிட‌க்கும் இய‌ற்கை அழ‌கினை க‌ண்டு ர‌சிக்க‌ த‌மிழ‌க‌ம் மட்டுமின்றி கேர‌ளா, ஆந்திரா, க‌ர்நாட‌கா உள்ளிட்ட‌ பல்வேறு மாநிலங்க‌ளில் இருந்தும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகின்றனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான கும்பூர் அக்க‌ரைக்காடு ம‌லைக் கிராமத்தின் இடையே தூவ‌த்தூர் அருவி அமைந்துள்ளது. இந்த‌ அருவி மற்றம் சுற்றியுள்ள ப‌சுமை போர்த்திய‌ ம‌லை முக‌டுக‌ளையும், அருவியை சுற்றியுள்ள‌ சோலைக்காடுக‌ளையும் கண்டு ர‌சிக்க‌ கொடைக்கான‌லில் இருந்து 48 கி.மீ செல்ல‌ வேண்டும்.இந்த சில வாரங்களாக மேல்மலைக்கிராம‌ப்பகுதிகளில் பெய்த‌ தொட‌ர் ம‌ழையால் தூவ‌த்தூர் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அருவியை கிராமத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று பார்க்க முடியும். சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கியுள்ள நிலையில் அருவியினை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பெயர் பலகைகள், பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற சுற்றுலாத்துறையினர் முன்வர வேண்டும் என்ப‌தே இந்த‌ப்ப‌குதி ம‌லைக்கிராம‌ ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

    Next Story
    ×