என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழனி மலைக்கோவில் (கோப்பு படம்)
பழனி கோவில் கும்பாபிஷேக பணிகளுக்கு ரூ.4.50 கோடி நன்கொடை பக்தர்கள் பொறுப்பேற்பு
- பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- ரூ.4.50 கோடி நன்கொடைக்கு பக்தர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில ங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்ப ட்டது. 16 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பழனி கோவில் கும்பாபி ேஷக திருப்பணி தொட ர்பாக நன்கொடையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடை பெற்றது. அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தலைைமயில் அறங்காவ லர்கள், பழனிகோவில் இணை ஆணையர் நட ராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனி கோவிலில் நன்கொ டையாளர்கள், உள்ளூர் முக்கிய பிரமுக ர்கள், வெளிநாடுகளை சேர்ந்த முருக பக்தர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கும்பாபி ஷேகம் தொட ர்பாக நடைபெற வேண்டிய திருப்பணிகள் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் ரூ.3.14 கோடி மதிப்பில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக 7 பணிகளும், ரூ.1.36 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியி லான பூஜை பொருட்கள் காணிக்கை களை செய்து கொடுக்க நன்கொடை யாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மொத்தம் ரூ.4.50 கோடி நன்கொடைக்கு பக்தர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.






