என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ரூ.21 லட்சம் மதிப்பில்   56 கண்காணிப்பு காமிராக்கள்
    X

    கோப்பு படம்

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ரூ.21 லட்சம் மதிப்பில் 56 கண்காணிப்பு காமிராக்கள்

    • பிரையண்ட் பூங்காவில் பல்வேறு மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கண்காட்சிக்காக தயார் செய்யப்படும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • பயணிகளின் பாதுகாப்பு கருதியும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுப்பதற்காகவும், ரூ.21 லட்சம் மதிப்பில் 56 கண்காணிப்பு காமிரா பல்வேறு இடங்களில் பொருத்தி உள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனின் போது பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா, மலர்கண்காட்சி, தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது 2-வது ஆப்சீசன் தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்து உள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    பிரையண்ட் பூங்காவில் பல்வேறு மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கண்காட்சிக்காக தயார் செய்யப்படும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதியும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுப்பதற்காகவும், ரூ.21 லட்சம் மதிப்பில் 56 கண்காணிப்பு காமிரா பல்வேறு இடங்களில் பொருத்தி உள்ளனர்.

    இதில் பதிவாகும் காட்சிகளை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×