என் மலர்
நீங்கள் தேடியது "Lady died"
- சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியதில் பெண் பரிதாபமாக பலியானார்.
- வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூரை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி சாமியாத்தாள்(55). இவர் தனது உறவினர் சந்திரசேகர்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து பூதிப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் அய்யர்மடம் அருகே சாலையில் இருந்து திரும்ப முயன்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த சாமியாத்தாள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சந்திரசேகர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு வீட்டில் விளக்கு எரியவைக்கும் போது எதிர்பாராத விதமாக இளம்பெண் உடலில் தீப்பிடித்தது.
- பலத்த தீக்காயங்குளுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்ட இளம்பெண் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள அதிகாரிபட்டி ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கவிதா (வயது28). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
செல்வராஜ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சொத்து பிரச்சினை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்ப ட்டார். கவிதா கூலி வேலை பார்த்து தனது குந்தைகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு வீட்டில் விளக்கு எரியவைக்கும் போது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பிடித்தது.
பலத்த தீக்காயங்குளுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்ட கவிதா அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






