என் மலர்
திண்டுக்கல்
- ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர்.
- சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்நிலைப் பகுதியில் உள்ள மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த கைகாட்டி, கண்ணன்புரம் போன்ற பல்வேறு பகுதி களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் கைகாட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் வரும் வழியில் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ள தாகவும் இதனை சீரமைக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும், ஒருசில இடங்களில் பழைய குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், புதிய குடிநீர் குழாய் அமைக்க அரசிடம் நிதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனிடையே சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருகிறது.
- வெளிநாட்டவரும் கோடைகாலத்தை கொண்டாடும் விதமாக கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் எங்கும் பச்சைபசேல் என காணப்படும் புல்வெளிகளும் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. வெளிநாட்டவரும் கோடைகாலத்தை கொண்டாடும் விதமாக கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று ஓய்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 73 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளியூர்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் நகர் நுழைவுவாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகே சுழற்சி முறையில் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சுற்றுலா பயணிகள் 2 தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என சுகாதாரத்துறையினர் சோதனை செய்கின்றனர். பொது இடங்கள், சுற்றுலா தலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால் முககவசம் அணிய வேண்டும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- வடமதுரை பகுதியில் தாபா ஹோட்டல்கள் கூடாரங்களில் அமர்ந்து மதுகுடிக்கும் குடிமகன்கள் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.
- மது விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து வருகிறது. மேலும் சில தனியார் பார்கள் லைசென்ஸ் எடுத்து மதுவிற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 12 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே மது விற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் 24 மணிநேரமும் தடையில்லாமல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வேலைக்கு செல்லாமல் கூலித்தொழிலாளர்கள் மது குடித்து மயங்குகின்றனர்.
இதனால் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
மேலும் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் வடமதுரை பகுதியில் ஏராளமான தாபா ஹோட்டல்கள் உள்ளன. இங்கு குடும்பத்துடன் உண்ணும் உணவகம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடாரங்களில் அமர்ந்து மதுகுடிக்கும் குடிமகன்கள் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சிலர் மது குடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மது விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்விரோதம் காரணமாக விவசாயியை மர்மகும்பல் தாக்கியது.
- கும்பலை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் ஊராட்சி மல்லியம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் சிவக்குமார் அணைப்பட்டி யில் உள்ள உறவினர் தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேத்துப்பாறை அஞ்சுவீடு பகுதியில் ஆதிமக்கள் வாழ்ந்த கல்திட்டுகள், எலிபெண்ட் வேலி வியூ உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.
- மன்னவனூர் பகுதியில் உள்ள பழங்கால கோவில்கள், பூம்பாறை குழந்தைவேலப்பர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர்பகுதியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதையும் தாண்டி மலைகிராமங்களில் பலரும் கண்டிராத வகையில் ஆச்சரியமான சுற்றுல ாஇடங்கள் உள்ளன. பேத்துப்பாறை அஞ்சுவீடு பகுதியில் ஆதிமக்கள் வாழ்ந்த கல்திட்டுகள், எலிபெண்ட் வேலி வியூ உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.
மேல்மலை பகுதியில் கூக்கால் ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும். விவசா யிகளின் தேவைகளை இந்த அருவி பூர்த்திசெய்கிறது. மேலும் ஓராவி அருவி, புலவிச்சாறு அருவி உள்ளிட்ட இடங்களில் சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்றுள்ளது.
மன்னவனூர் பகுதியில் உள்ள பழங்கால கோவில்கள், பூம்பாறை குழந்தைவேலப்பர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மலைப்பகுதியில் டிரக்கிங் உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ள வருகின்றனர். இதில் பெரும்பாலான இடங்கள் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. எனவே இந்த இடங்களை மே ம்படுத்தி தயார்படுத்தினால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதன்மூலம் கொடைக்கானல் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சித்திரை திருவிழாவையொட்டி மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அபிராமி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
- வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், இரவு சாமி சாட்டுதல் நடை பெற்றது. நேற்று காலை பானக்கம் பாலாபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு மேல் கொடி யேற்றம் நடைபெற்றது.
இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் கோவில் கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை காலை பூச்சொரிதலும், பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலையில் பாலாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
28-ந்தேதி கரகம் ஜோடித்து மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதிஉலா வருகிறார். 29-ந்தேதி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். மாலையில் சிறப்பு அலங்காரம் நடைபெறும். 30-ந்தேதி காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், இரவு வில்லிசை நடைபெறுகிறது.
மே 1-ந்தேதி மாலை அழகு போட்டு நகர்வலம், அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. 2-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம், கரகம் விடுதல் மற்றும் இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.
3-ந்தேதி மஞ்சள் நீராட்டுவிழா, 4-ந்தேதி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் ஊஞ்சல் மண்டகப்படி, அதனைதொடர்ந்து 5-ந்தேதி மாலை தெப்பத்திருவிழா மற்றும் கோட்டைக்குளத்தில் தேரோட்டம் நடைபெறு கிறது.
இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தலைவரும், பரம்பரை அறங்காவலரு மான பாண்டி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலிலும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
- வாரவிடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
- கூட்டம் காரணமாக சுமார் 2½ மணிநேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடிந்தது.
பழனி:
தமிழகத்தில் சிறந்த ஆன்மீக தலமாகவும், முருகப்பெருமானின் 3ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகை யில் வாரவிடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
குறிப்பாக மலைக்கோவி லின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
கூட்டம் காரணமாக சுமார் 2½ மணிநேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடிந்தது. மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
- 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
- மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் மிகவும் பழமையானதும் ஆங்கிலேயர்களால் அறியப்பட்டதாகவும் இருப்பது வெள்ளகவி என்ற மலைக்கிராமம். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சாலை வசதி இல்லாத இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடைபயணமாகவே 16 கி.மீ. தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை மண்சாலை மட்டுமே 3 கி.மீ. தூரத்துக்கு அமைக்க ப்பட்டுள்ளது.
சாலை வசதி இல்லாததால் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.
கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் அந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களுடைய கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும் அவர்களுக்கான உரிமைகளை பெறு வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தங்களுடைய அடிப்படைத் தேவைகளை சட்டபூர்வமாக எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சட்ட விழிப்புணர்வுகளை நீதிபதி மற்றும் வக்கீல்கள் பங்கேற்று கிராம மக்களுக்கு விளக்கிக் கூறினர்.
மேலும் கொடைக்கா னலில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு 10 கி.மீ. மலை பாதையின் நடுவே நடந்தே சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
முதன்முறையாக நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதே போன்று இன்னும் பின் தங்கி உள்ள கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை யாக உள்ளது.
- கொடைக்கானல் நகருக்குள் நுழைவு பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- மலர் கண்காட்சி கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணமும், மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறையால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானல் நகருக்குள் நுழைவு பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே போதிய அளவு போலீசார் பணியமர்த்தி போக்குவரத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் முக்கிய சுற்றுலா தலங்களான வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, நட்சத்திர ஏரி, பிரையண்ட்பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் நட்சத்திர ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றும் அனைவரையும் கவர்ந்தது. நேற்று சாரல் மழையில் நனைந்தபடியே ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், கைடுகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்த வாரம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே மலர்கண்காட்சி கோடைவிழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
- கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.481ஐ திருடப்பட்டது.
- அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே மார்க்கம்பட்டியில் நாகராஜ் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.481ஐ திருடப்பட்டது. இதுகுறித்து இடையகோட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழனி அருகே உள்ள நெய்காரப்பட்டியை சேர்ந்த சின்னகாளியப்பன்(48) என்பவர் பணம் திருடியது தெரியவந்தது.
அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வழக்குநடந்து வந்தது. இதனைவிசாரித்த நீதிபதி செல்வமகேஸ்வரி பணம் திருடிய சின்னகாளியப்பனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.200-ம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- சேதமான இலவச சைக்கிள்களை பள்ளி நிர்வாகத்தினர் அரசிடம் ஒப்படைக்காமல் இரும்பு கடையில் விற்பனை செய்தனர்.
- இதுகுறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படு கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனி யார் பள்ளிக்கு வழங்க ப்பட்ட இலவச சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
இந்த சைக்கிள்களை அரசிடம் திருப்பி வழங்க முடிவு செய்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் அந்த சைக்கிள்களை அரசிடம் ஒப்படைக்காமல் இரும்பு கடையில் விற்பனை செய்தனர்.
இது குறித்து தாசில்தாருக்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து தாசில்தார் முத்துராமன், பழைய இரும்பு கடையில் ஆய்வு செய்தார். அப்போது சைக்கிள்களில் அரசு முத்திரை இருந்தது தெரிய வந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரி வித்தார்.
பள்ளி நிர்வாகம் சேதம் அடைந்த பொருட்களை அகற்றும் போது தவறுதலாக 11 சைக்கிள்களையும், இரும்பு கடைக்கு எடுத்து சென்றதாகவும் பின்னர் இது குறித்து அறிந்ததும் மீண்டும் எடுத்து வந்து விட்டதாகவும் தெரிவித்த னர். எனினும் கல்வித்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வரு கின்றனர். தவறு செய்த வர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரி வித்தார்.
- செந்துறையில் அரசு பள்ளிகளில் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- மாணவ-மாணவிகளின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார்.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே கரந்தமலை பகுதியில் உள்ள பெரியமலையூர்அரசு நடுநிலைப்பள்ளியிலும், சின்னமலையூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், வலசை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் வாசிப்புத்திறன், கணிதப்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். இந்த கல்வியாண்டில் மாணவ-மாணவிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
அவர்களின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார். இந்த ஆய்வின் போது நத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, எஸ்தர்ராஜம் மற்றும் பிற ஆசிரியர்கள் உடனிருந்தனர்.






