search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை அருகே அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு
    X

    பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    செந்துறை அருகே அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு

    • செந்துறையில் அரசு பள்ளிகளில் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவ-மாணவிகளின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே கரந்தமலை பகுதியில் உள்ள பெரியமலையூர்அரசு நடுநிலைப்பள்ளியிலும், சின்னமலையூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், வலசை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் வாசிப்புத்திறன், கணிதப்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். இந்த கல்வியாண்டில் மாணவ-மாணவிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

    அவர்களின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார். இந்த ஆய்வின் போது நத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, எஸ்தர்ராஜம் மற்றும் பிற ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×