என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் மாணவர்களின் இலவச சைக்கிள்கள் விற்பனை - அதிகாரிகள் விசாரணை
    X

    பழைய இரும்புக்கடையில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு சைக்கிள்கள்.


    கொடைக்கானலில் மாணவர்களின் இலவச சைக்கிள்கள் விற்பனை - அதிகாரிகள் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேதமான இலவச சைக்கிள்களை பள்ளி நிர்வாகத்தினர் அரசிடம் ஒப்படைக்காமல் இரும்பு கடையில் விற்பனை செய்தனர்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படு கின்றன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனி யார் பள்ளிக்கு வழங்க ப்பட்ட இலவச சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

    இந்த சைக்கிள்களை அரசிடம் திருப்பி வழங்க முடிவு செய்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் அந்த சைக்கிள்களை அரசிடம் ஒப்படைக்காமல் இரும்பு கடையில் விற்பனை செய்தனர்.

    இது குறித்து தாசில்தாருக்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து தாசில்தார் முத்துராமன், பழைய இரும்பு கடையில் ஆய்வு செய்தார். அப்போது சைக்கிள்களில் அரசு முத்திரை இருந்தது தெரிய வந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரி வித்தார்.

    பள்ளி நிர்வாகம் சேதம் அடைந்த பொருட்களை அகற்றும் போது தவறுதலாக 11 சைக்கிள்களையும், இரும்பு கடைக்கு எடுத்து சென்றதாகவும் பின்னர் இது குறித்து அறிந்ததும் மீண்டும் எடுத்து வந்து விட்டதாகவும் தெரிவித்த னர். எனினும் கல்வித்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வரு கின்றனர். தவறு செய்த வர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரி வித்தார்.

    Next Story
    ×