என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகரிக்கும் மது விற்பனை"

    • வடமதுரை பகுதியில் தாபா ஹோட்டல்கள் கூடாரங்களில் அமர்ந்து மதுகுடிக்கும் குடிமகன்கள் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.
    • மது விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து வருகிறது. மேலும் சில தனியார் பார்கள் லைசென்ஸ் எடுத்து மதுவிற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காலை 12 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே மது விற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் 24 மணிநேரமும் தடையில்லாமல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வேலைக்கு செல்லாமல் கூலித்தொழிலாளர்கள் மது குடித்து மயங்குகின்றனர்.

    இதனால் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

    மேலும் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் வடமதுரை பகுதியில் ஏராளமான தாபா ஹோட்டல்கள் உள்ளன. இங்கு குடும்பத்துடன் உண்ணும் உணவகம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடாரங்களில் அமர்ந்து மதுகுடிக்கும் குடிமகன்கள் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சிலர் மது குடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மது விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×