என் மலர்
திண்டுக்கல்
- அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.
- புளியங்குளத்தில் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு அருகே உள்ள புளியங்குளத்தின் மொத்த பரப்பளவு சுமார் 60 ஏக்கர் ஆகும். இந்தக் குளத்தை நம்பி 50 கிராம பொதுமக்கள் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
புளியங்குளத்தில் சித்தரேவு மற்றும் நரசிங்கபுரத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதுகுறித்து அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சார்பாக சன்மகா என்பவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.
அதன்படி சித்தரேவு கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், வருவாய் அலுவலர் கணேசன், சர்வேயர் ராமு மற்றும் அதிகாரிகள் புளியங்குளத்தில் சித்தரேவு பகுதி மக்கள் செய்திருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றினர். ஆனால் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டிருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆத்தூர் தாலுகா அலுவலக நுழைவாயில் பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் புளியங்கு ளத்தில் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
- ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்த இடங்களை சர்வே செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வே பணியை தடுத்து விட்டனர்.
- சர்வே பணியின் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது/
செம்பட்டி:
செம்பட்டி அருகே மல்லையாபுரத்தில் பொதுப்பாதை இடங்களை சிலர் ஆக்கிரமிப்புகள் செய்திருந்தனர். இதனை அகற்ற வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலை யில் ஆக்கிரமிப்பாளர்கள் சர்வே பணியை தடுத்தனர்.
இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் செய்ய ப்பட்டது. இதையடுத்து மல்லையாபுரத்தில் ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டிருந்த இடங்களை சர்வே செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வே பணியை தடுத்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாது காப்புடன் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியில் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சக்திவேல், ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, எஸ்.பாறை ப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன், சர்வேயர் ஈஸ்வரன், எஸ்.பாரைப்பட்டி ஊராட்சி மன்ற செயலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சர்வே பணியின் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
- கடந்த 14-ந்தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் 100 சவரன்நகை, ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிபொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
பழனி:
பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14-ந்தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் 100 சவரன்நகை, ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிபொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
மேலும் டாக்டர் உதயகுமாரையும் கட்டிபோட்டு கத்தியால் குத்தி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் டாக்டர் உதயகுமார் வீட்டில் சில நாட்கள் டிரைவராக வேலைபார்த்த சரவணன்(40) என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 34 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.7 லட்சம் ரொக்கம், கார், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சரவணனுடன் மேலும் சிலரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவரவே அவர்களையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லையை சேர்ந்த சங்குராஜா என்பவரை போலீசார் தீவிரமாக கண்காணித்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது. பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை நட்பு வட்டாரத்தில் கொண்டுவந்து சரவணன் மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- இங்கு கடைகள் திறந்த நிலையில் இருப்ப தாகவும், போதிய அடிப்ப டை வசதிகள் செய்து தரப்பட வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து ள்ளது.
- ஒவ்வொரு கடையும் குறுகலாக அமைக்கப்பட்டு ள்ளது. தகரத்தால் அமைக்க ப்பட்டுள்ள இந்த கடை களில் கதவுகள் இல்லை.
பழனி:
பழனி மார்க்கெட் சாலையில் உள்ள நகராட்சி க்கு சொந்தமான காந்தியடி கள் தினசரி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்ேவறு கடைகள் செயல்ப ட்டு வருகின்றன. இங்கு போதிய அளவு இடவசதி இல்லாததால் எப்போதும் நெரிசலாகவே காணப்படும். அதேநேரம் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் அப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் இந்த மார்க்கெட் பல ஆண்டுகளாக பராமரிக்காமலேயே உள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் ,பொதுமக்க ளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ரூ.11.32 கோடி மதிப்பில் கடைகள், வாகன நிறுத்து மிடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் நவீன மார்க்கெட் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இதற்காக தற்போது உள்ள கடைகள் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
எனவே பள்ளி வளாகத்தில் ரூ.60 லட்சத்தில் 76 கடை களுடன் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடை ந்துள்ள நிலையில் கடைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இங்கு கடைகள் திறந்த நிலையில் இருப்ப தாகவும், போதிய அடிப்ப டை வசதிகள் செய்து தரப்பட வில்லை என்ற குற்றச்சா ட்டும் எழுந்து ள்ளது.
இதுகுறித்து வியா பாரிகள் கூறுகையில், தற்காலிக மார்க்கெட்டில் ஒவ்வொரு கடையும் குறுகலாக அமைக்கப்பட்டு ள்ளது. தகரத்தால் அமைக்க ப்பட்டு ள்ள இந்த கடை களில் கதவுகள் இல்லை. மேலும் குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிகளும் ஏற்படுத்த வில்லை. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். தற்காலிக மார்க்கெட்டுக்கு இடமாறுதல் செய்ய 2 வாரம் கால அவகாசம் வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
- தரைப்பகுதியில் கோடைவெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
- நகரின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறைக்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சீசன் கால மான இந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதருவது குறித்த கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் அளித்தனர்.
மே மாதத்திற்கு முன்பாக சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படும். பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. தற்போது தரைப்பகுதியில் கோடைவெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தினந்தோறும் ஆயிரக்கண க்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மோயர் சதுக்கம், குணாகுகை, நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.
பீக் சீசன் எனப்படும் மே 1 முதல் 30-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரி க்கும். இந்த சமயத்தில் சாலையில் அமைக்கப்பட்டு ள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படும். மேலும் சுற்றுலா இடங்களில் கழிப்பிட வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். நகரின் நுழைவாயில் பகுதியான மூஞ்சிக்கல்லில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. பயணிகள் தங்கள் வாகனங்களை எங்கே நிறுத்தவிட்டு செல்வது என தெரியாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
மேலும் புதிதாக முளை த்துள்ள காட்டே ஜ்களில் கட்டணதொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே முறையற்ற வகையில் இயங்கும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கூடுதல் போலீசார் இன்னும் நியமிக்கப்படாததால் வாக னங்களை ஒழுங்குபடுத்து வதில் சிக்கல் ஏற்படுகிறது. சர்வதேச சுற்றுலா தலம் என்ற அந்தஸ்து இல்லாமல் ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல் ஆங்காங்கே சிதறி கிடக்கும் நிலை உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கொடை க்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும்.
- எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும். தமிழகம் ஏற்கனவே அதிகளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்தால் அவர்களுக்கான ஊதியமும் அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும். கொரோனா கால கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதனை எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். எந்த நிறுவனமும் தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. அதேபோல முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகளும் இல்லை.
தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் 12 மணிநேர வேலை மசோதவை தொழிற்சங்கங்களும், தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் மே 5-ந்தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் திண்டுக்கல் மண்டலம் சார்ந்த திண்டுக்கல், பழனி, தேனி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிநிறைவு சான்றிதழ்கள் பெற்றால்தான் வணிக கட்டிடங்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்கப்படும் என்ற மின்சார வாரியத்தின் கொள்கை முடிவை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயல்தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் மங்களம் அழகு, பொருளாளர் நசீர்சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுமலையில் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகை செடிகளின் அபூர்வம் குறித்த தகவல் இன்னும் வெளிவராமல் உள்ளது.
- ஆடாதோடா சளியை நீக்கும் அருமருந்தாக உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் பெரும்பாலான பகுதிகளில் காய்கறி செடிகள் மற்றும் மலர் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தினசரி வருவாய் கிடைக்கும் செடிகளாக இவை பயிரி டப்பட்டாலும் பெரு ம்பாலான சமயங்களில் இவை விவசாயிகளுக்கு நஷ்டத்தையே தருகின்றனர்.
குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்களுக்கு வருடத்தின் பல மாதம் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் அதனை குப்பையில் வீசி செல்லும் நிலை உள்ளது. இதேபோல பலவித மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு தமிழகம், கேரளா மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இவையும் விவசாயிகளுக்கு போதிய லாபம் தருவதில்லை. இதனை த்தொடர்ந்து மாற்றி யோசித்த விவசாயிகள் வறட்சியை தாங்கி வளரும் மூலிகை செடிகளை வளர்க்க தொடங்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் ஆயிரக்கண க்கான அரியவகை மூலிகை செடிகள் உள்ளன. இதில் பல மூலிகைகளின் அபூர்வம் குறித்த தகவல் இன்னும் வெளிவராமல் உள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் மூலிகை செடிகளை வாங்குவதற்கு நகரின் மையப்பகுதி யில் பல கடைகள் உள்ளன. இதனால் செம்பருத்தி, ஆவாரம் பூ, இலந்தை பழம், பிரண்டை, தூதுவளை போன்ற மூலிகை செடிகள் மலை கிராமங்களில் சேகரிக்க ப்பட்டு பதப்படுத்தி திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்வரிசையில் திண்டு க்கல் அருகே குட்டத்துப்பட்டி யில் ஆடாதோடா மூலிகை செடிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளனர். தோட்டத்து வேலிகளிலும் இச்செடியை பயிரிட்டு வருகின்றனர். ஆடு, மாடுகள் இந்த செடியை உட்கொள்ளாது என்பதால் இதற்கு வேலி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த செடி வளர 3 மாதங்கள் ஆகும் நிலையில் அதில் உள்ள இலைகளை பறித்து காய வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பலமுறை அறுவடை செய்யும் வகை யில் இலைகள் செழித்து வளர்கின்றனர். இந்த இலைகளை பொடியாக செய்தும், ஆடாதோடா மனப்பாகு என்றும் சித்த மருத்துவ கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது சளியை நீக்கும் அருமருந்தாக உள்ளது.
இதனால் வருடம் முழுவதும் இந்த செடியை வாங்கி செல்கின்றனர். இது குறித்து இப்பகுதி விவ சாயிகள் தெரிவிக்கையில், வறட்சியை தாங்கி வளரும் ஆடாதோடா செடிக்கு செலவு இல்லை. நோய் தாக்குதல் ஏற்படாது. விலையும் ஓரளவுக்கு கிடைக்கிறது. சித்த மருத்துவ நிறுவனங்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். மேலும் சிலர் திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் விற்பனை செய்கின்றனர்.
இதேபோல மற்ற மூலிகை செடி வளர்ப்பிலும் விவ சாயிகளுக்கு அதிகாரிகள் உதவி செய்தால் மாற்றுச்செடி வளர்ப்பில் ஆர்வம் காட்டுவார்கள். காய்கறி செடி பயிரிட்டு வந்த விவசாயிகளும் தற்போது மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். மேலும் பல அபூர்வ மூலிகை செடியின் தன்ைம, அதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை வளர்க்க வழிகாட்ட வேண்டும் என்றனர்.
- சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கிராம மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.
பழனி அருகே கோம்பை பட்டியில் பிரசித்திபெற்ற பெரியதுரையான் கருப்புசாமி கோவில் உள்ளது. பழனிசுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இவரை காவல்தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கருப்புசாமிக்கு விழா எடுப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சித்திரை மாதம் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைதொடர்ந்து தினந்தோறும் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கருப்புசாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஆடுகளை பலியிட்டு அசைவ உணவு தயாரித்து அதனை அன்னதானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலில் தங்கள் பிரச்சினைகள் தீரவும், வேண்டுதலை நிறைவேற்றியதற்கும் பக்தர்கள் ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்குவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை பலியிட்டு அதன்பின்பு உணவு தயாரிக்கப்பட்டது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பழனி, கோம்பைபட்டி, கணக்க ன்பட்டி உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.
- இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன
- தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் நத்தத்தில் இருந்து சேர்வீடு கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக 4 வழிச்சாலையில் சுரங்க ப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் இந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன. இதனிடையே சுற்றுப்பாதை யில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், எதிர்கால த்தில் தண்ணீர் தேங்காத வாறு வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.
பழனி:
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் விரைந்து தீயை அணைத்தனர்.
- காலை நடந்த தீ விபத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு ள்ளது. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மளமளவென அடுத்த டுத்த கடைகளுக்கும் பரவியது.
இதன் காரணமாக காதர் என்பவரின் கம்பளி விற்பனை கடை, வேலார் என்பவரின் காய்கறிக்கடை, மணி என்பவரின் லாரி புக்கிங் ஆபீஸ்,ஜோஸ்வா என்பவரின் தேனீர்கடை, குட்டி என்கிற சலேத்நாத னின் டிராவல்ஸ் அலுவலகம் ஆகிய கடைகள் தீக்கிரையானது.இந்தக் கடைகளில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் விரைந்து தீயை அணைத்தனர்.விரைவாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் தேநீர் கடையில் இருந்த கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படு த்தினர்.இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. லேசான சாரல் துளிகள் விழுந்தாலே கொடைக்கானலில் மின்சாரம் துண்டிக்கப்படு வது வாடிக்கையாக உள்ளது. அச்சமயத்தில் அடிக்கடி மின்சாரம் போய் வரும்போது திடீரென கூடுதல் மின்சாரம் பாய்வதும், அதன் காரணமாக வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள், பல்புகள் என வீட்டு உபயோகப் பொருட்கள் செயலற்றுப் போகிறது. இதே போல் நேற்று முதல் அடிக்கடி மின்சாரம் நின்று வந்ததாலும், கூடுதல் மின்சாரம் பாய்ந்ததாலும் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்து வருகிறது.
எனவே சீரான மின்விநியோகம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை நடந்த தீ விபத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
எனவே வருவாய்த்துறை யினர் உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செம்பட்டி அடுத்த சக்கைய நாயக்கனூர் அருகே மொண்டம்பட்டி பிரிவில் உள்ள மின் கம்பத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தீ எரிந்து வருகிறது.
- சாலையின் குறுக்கே இந்த மின்சார வயர்கள் செல்வதால் பெரும் விபத்து ஏற்படுவதற்குள் அதனை சரி செய்ய வேண்டும்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி மின் நிலையத்தி லிருந்து, செம்பட்டி மற்றும் காமலாபுரம், சக்கைய நாயக்கனூர், கொடை ரோடு, அம்மைய நாயக்கனூர், பள்ளபட்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிரா மங்களுக்கு, மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
செம்பட்டியில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் உயர் மின் அழுத்த வயர்கள், மேட்டுப்பட்டி, காமு பிள்ளை சத்திரம், பூதிப்புரம், சக்கையநாயக்கனூர், ஜல்லிபட்டி வழியாக கொடைரோடு செல்கிறது. இதில், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் மின்சாரம் பழுது ஏற்படும் போது, இந்த வழியே செல்லும் மின்சாரத்தை டி.பி என்று சொல்லப்படும் மின் கம்பத்தில் நிறுத்தி பழுது நீக்கம் செய்வார்கள். இந்நிலையில் செம்பட்டி அடுத்த சக்கைய நாயக்கனூர் அருகே மொண்டம்பட்டி பிரிவில் உள்ள மின் கம்பத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தீ எரிந்து வருகிறது.
சுமார் 5 முதல் 10 நிமிட த்திற்கு ஒரு முறை எரியும் பயங்கர தீ 3 முதல் 4 நிமிடங்கள் வரை எரிந்து அணைந்து விடுகிறது. பின்னர் மீண்டும் தீப்பிடித்து எரிகிறது. பகல் நேரங்களில் தீ எரிவது சரியாக தென்படா விட்டாலும் இரவு நேரங்களில் தீ எரிவது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படு த்தி உள்ளது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் பெரும் அச்சத்துடன் செல்கி ன்றனர்.
கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் இந்த தீயை சரி செய்ய செம்பட்டி மின்சார வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படு கிறது. சாலையின் குறுக்கே இந்த மின்சார வயர்கள் செல்வதால் பெரும் விபத்து ஏற்படு வதற்குள் அதனை சரி செய்ய வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள், விவ சாயிகள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






