என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் ஒருவர் கைது
    X

    பழனியில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் ஒருவர் கைது

    • பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
    • கடந்த 14-ந்தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் 100 சவரன்நகை, ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிபொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    பழனி:

    பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14-ந்தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் 100 சவரன்நகை, ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிபொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    மேலும் டாக்டர் உதயகுமாரையும் கட்டிபோட்டு கத்தியால் குத்தி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் டாக்டர் உதயகுமார் வீட்டில் சில நாட்கள் டிரைவராக வேலைபார்த்த சரவணன்(40) என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 34 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.7 லட்சம் ரொக்கம், கார், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சரவணனுடன் மேலும் சிலரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவரவே அவர்களையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லையை சேர்ந்த சங்குராஜா என்பவரை போலீசார் தீவிரமாக கண்காணித்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது. பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை நட்பு வட்டாரத்தில் கொண்டுவந்து சரவணன் மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×