என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers are interested"

    • சிறுமலையில் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகை செடிகளின் அபூர்வம் குறித்த தகவல் இன்னும் வெளிவராமல் உள்ளது.
    • ஆடாதோடா சளியை நீக்கும் அருமருந்தாக உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் பெரும்பாலான பகுதிகளில் காய்கறி செடிகள் மற்றும் மலர் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தினசரி வருவாய் கிடைக்கும் செடிகளாக இவை பயிரி டப்பட்டாலும் பெரு ம்பாலான சமயங்களில் இவை விவசாயிகளுக்கு நஷ்டத்தையே தருகின்றனர்.

    குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்களுக்கு வருடத்தின் பல மாதம் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் அதனை குப்பையில் வீசி செல்லும் நிலை உள்ளது. இதேபோல பலவித மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு தமிழகம், கேரளா மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இவையும் விவசாயிகளுக்கு போதிய லாபம் தருவதில்லை. இதனை த்தொடர்ந்து மாற்றி யோசித்த விவசாயிகள் வறட்சியை தாங்கி வளரும் மூலிகை செடிகளை வளர்க்க தொடங்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் ஆயிரக்கண க்கான அரியவகை மூலிகை செடிகள் உள்ளன. இதில் பல மூலிகைகளின் அபூர்வம் குறித்த தகவல் இன்னும் வெளிவராமல் உள்ளது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் மூலிகை செடிகளை வாங்குவதற்கு நகரின் மையப்பகுதி யில் பல கடைகள் உள்ளன. இதனால் செம்பருத்தி, ஆவாரம் பூ, இலந்தை பழம், பிரண்டை, தூதுவளை போன்ற மூலிகை செடிகள் மலை கிராமங்களில் சேகரிக்க ப்பட்டு பதப்படுத்தி திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்வரிசையில் திண்டு க்கல் அருகே குட்டத்துப்பட்டி யில் ஆடாதோடா மூலிகை செடிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளனர். தோட்டத்து வேலிகளிலும் இச்செடியை பயிரிட்டு வருகின்றனர். ஆடு, மாடுகள் இந்த செடியை உட்கொள்ளாது என்பதால் இதற்கு வேலி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இந்த செடி வளர 3 மாதங்கள் ஆகும் நிலையில் அதில் உள்ள இலைகளை பறித்து காய வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பலமுறை அறுவடை செய்யும் வகை யில் இலைகள் செழித்து வளர்கின்றனர். இந்த இலைகளை பொடியாக செய்தும், ஆடாதோடா மனப்பாகு என்றும் சித்த மருத்துவ கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது சளியை நீக்கும் அருமருந்தாக உள்ளது.

    இதனால் வருடம் முழுவதும் இந்த செடியை வாங்கி செல்கின்றனர். இது குறித்து இப்பகுதி விவ சாயிகள் தெரிவிக்கையில், வறட்சியை தாங்கி வளரும் ஆடாதோடா செடிக்கு செலவு இல்லை. நோய் தாக்குதல் ஏற்படாது. விலையும் ஓரளவுக்கு கிடைக்கிறது. சித்த மருத்துவ நிறுவனங்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். மேலும் சிலர் திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

    இதேபோல மற்ற மூலிகை செடி வளர்ப்பிலும் விவ சாயிகளுக்கு அதிகாரிகள் உதவி செய்தால் மாற்றுச்செடி வளர்ப்பில் ஆர்வம் காட்டுவார்கள். காய்கறி செடி பயிரிட்டு வந்த விவசாயிகளும் தற்போது மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். மேலும் பல அபூர்வ மூலிகை செடியின் தன்ைம, அதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை வளர்க்க வழிகாட்ட வேண்டும் என்றனர்.

    ×