என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து வாகனங்கள் திணறல்"

    • தரைப்பகுதியில் கோடைவெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
    • நகரின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறைக்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சீசன் கால மான இந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதருவது குறித்த கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் அளித்தனர்.

    மே மாதத்திற்கு முன்பாக சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படும். பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. தற்போது தரைப்பகுதியில் கோடைவெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தினந்தோறும் ஆயிரக்கண க்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    மோயர் சதுக்கம், குணாகுகை, நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.

    பீக் சீசன் எனப்படும் மே 1 முதல் 30-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரி க்கும். இந்த சமயத்தில் சாலையில் அமைக்கப்பட்டு ள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படும். மேலும் சுற்றுலா இடங்களில் கழிப்பிட வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். நகரின் நுழைவாயில் பகுதியான மூஞ்சிக்கல்லில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. பயணிகள் தங்கள் வாகனங்களை எங்கே நிறுத்தவிட்டு செல்வது என தெரியாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

    மேலும் புதிதாக முளை த்துள்ள காட்டே ஜ்களில் கட்டணதொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே முறையற்ற வகையில் இயங்கும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கூடுதல் போலீசார் இன்னும் நியமிக்கப்படாததால் வாக னங்களை ஒழுங்குபடுத்து வதில் சிக்கல் ஏற்படுகிறது. சர்வதேச சுற்றுலா தலம் என்ற அந்தஸ்து இல்லாமல் ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல் ஆங்காங்கே சிதறி கிடக்கும் நிலை உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கொடை க்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

    எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ×