என் மலர்
நீங்கள் தேடியது "fire is burning continuously"
- செம்பட்டி அடுத்த சக்கைய நாயக்கனூர் அருகே மொண்டம்பட்டி பிரிவில் உள்ள மின் கம்பத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தீ எரிந்து வருகிறது.
- சாலையின் குறுக்கே இந்த மின்சார வயர்கள் செல்வதால் பெரும் விபத்து ஏற்படுவதற்குள் அதனை சரி செய்ய வேண்டும்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி மின் நிலையத்தி லிருந்து, செம்பட்டி மற்றும் காமலாபுரம், சக்கைய நாயக்கனூர், கொடை ரோடு, அம்மைய நாயக்கனூர், பள்ளபட்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிரா மங்களுக்கு, மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
செம்பட்டியில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் உயர் மின் அழுத்த வயர்கள், மேட்டுப்பட்டி, காமு பிள்ளை சத்திரம், பூதிப்புரம், சக்கையநாயக்கனூர், ஜல்லிபட்டி வழியாக கொடைரோடு செல்கிறது. இதில், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் மின்சாரம் பழுது ஏற்படும் போது, இந்த வழியே செல்லும் மின்சாரத்தை டி.பி என்று சொல்லப்படும் மின் கம்பத்தில் நிறுத்தி பழுது நீக்கம் செய்வார்கள். இந்நிலையில் செம்பட்டி அடுத்த சக்கைய நாயக்கனூர் அருகே மொண்டம்பட்டி பிரிவில் உள்ள மின் கம்பத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தீ எரிந்து வருகிறது.
சுமார் 5 முதல் 10 நிமிட த்திற்கு ஒரு முறை எரியும் பயங்கர தீ 3 முதல் 4 நிமிடங்கள் வரை எரிந்து அணைந்து விடுகிறது. பின்னர் மீண்டும் தீப்பிடித்து எரிகிறது. பகல் நேரங்களில் தீ எரிவது சரியாக தென்படா விட்டாலும் இரவு நேரங்களில் தீ எரிவது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படு த்தி உள்ளது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் பெரும் அச்சத்துடன் செல்கி ன்றனர்.
கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் இந்த தீயை சரி செய்ய செம்பட்டி மின்சார வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படு கிறது. சாலையின் குறுக்கே இந்த மின்சார வயர்கள் செல்வதால் பெரும் விபத்து ஏற்படு வதற்குள் அதனை சரி செய்ய வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள், விவ சாயிகள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






