என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார்
    • இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே குடகிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேனீ வளர்க்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

    இதற்கு சீட்ஸ் டிரஸ்ட் நிறுவன இயக்குநர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார். இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை பல கடைகளில் குறைந்துள்ள போதும் வாரச்சந்தையில் வியாபாரிகளே விலையை நிர்ணயித்து ரூ.100க்கு மேல் விற்று வருகின்றனர்.
    • னவே அதிகாரிகள் காய்கறிகளின் விலையை நிர்ணயித்து பொதுமக்களுக்கு உரிய விலையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை கடும் உச்சத்தை தொட்டது. தக்காளி ரூ.160க்கும், சின்ன வெங்காயம் ரூ.200க்கும் விற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் ரூ.150, தக்காளி ரூ.120 என குறைந்தது. கடந்த வாரம் இரண்டுமே சம அளவில் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    தற்போது வார சந்தையில் தக்காளி ரூ.120க்கும், ரூ.110 க்கும் விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயம் ரூ.120, ரூ.110 என தரம் பிரித்து விற்கப்படுகிறது. இதனால் வாரச் சந்தைக்கு வரும் பொது மக்களின் வரத்து பெரும்பாலும் குறைந்து காணப்பட்டது. தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை பல கடைகளில் குறைந்துள்ள போதும் வாரச்சந்தையில் வியாபாரிகளே விலையை நிர்ணயித்து ரூ.100க்கு மேல் விற்று வருகின்றனர்.

    பொது மக்கள் மற்ற கடை களில் விலை குறை வாக உள்ளது என சொன்னால் மட்டும் அவர்களுக்கு விலை குறைத்து கொடுக்கின்றனர். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து 2 மடங்கு கூடுதலாக விலை வைத்து விற்று வரு கின்றனர். பல இடங்களில் விலை குறைந்த போதும் சந்தையில் வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு கூடுதலாக வைத்து விற்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் காய்கறிகளின் விலையை நிர்ணயித்து பொதுமக்களுக்கு உரிய விலையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கொசவபட்டி, செம்மடை ப்பட்டி, கொழி ஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன் பட்டி, எமக்கலா புரம், கைலா சம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டியபட்டி, கோ ணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லு ப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சி யோடை பட்டி, குரும்பபட்டி, கூவனூத்து பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக ராஜக்கா பட்டி, சிலுவத்தூர், புகையி லைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தோத்தா ம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.

    • போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. வெற்றி பெற்ற முதல் 4 அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 3-ம் இடம் பிடித்த விருவீடு வசந்த் அணிக்கு கனரா வங்கி மேலாளர் சுழற் கோப்பை வழங்கினார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீட்டில் நேதாஜி மக்கள் அறக்கட்டளை சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி 6 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. வெற்றி பெற்ற முதல் 4 அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    முதலிடம் பிடித்த உசிலம்பட்டி அணிக்கு சிவலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக குழு தலைவர் இளையராஜா சுழற்கோப்பையை வழங்கினார். 2-ம் இடம் பிடித்த விருவீடு நேதாஜி அணிக்கு தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சத்ரியன் கனிக்குமார் ஆகியோர் சுழற் கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கினர். 3-ம் இடம் பிடித்த விருவீடு வசந்த் அணிக்கு கனரா வங்கி மேலாளர் சுழற் கோப்பை வழங்கினார்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக விருவீடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவக்குமார், கவின் தங்கப்பாண்டி, மனோஜ் குமார், நேதாஜி மக்கள் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் நேதாஜி சிவா, அருண்பாண்டி, சின்னமாயன், பாண்டி, விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பலமாவட்டங்களிலிருந்து வருகை தந்து பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் 2.15 மணி நேரம் இடை நில்லாது மின்னொளி சிலம்பத்தை சுற்றி ஆஸ்கர் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினர்.
    • சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு ஆஸ்கர் புத்தக நிறுவனர் கதிரவன் சாதனைக்கான சான்றிதழ்க ளையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் பள்ளியில் ஆத்தூர் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சி அறக்கட்டளை மற்றும் மனோகரன் இலவச கல்வி மையம் சார்பாக "சாலை பாதுகாப்பை" வலியுறுத்தி, மாவட்டத்தில் முதல்முறை யாக மின்னொளி சிலம்ப உலக சாதனை விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் பெஞ்சமின் போஸ்கோ தலைமை வகி த்தார். ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடாசலம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் கண்ணன், விவசாய சங்க நிர்வாகி ஜேசுராஜ், சி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இச்சாதனை நிகழ்வில் மனோகரன் இலவச கல்வி அறக்கட்டளை நிர்வாகி சாந்தி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    அதன் பின் தற்காப்பு கலைகளான குத்து ச்சண்டை, கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை பயிற்சி கலைநிகழ்வுகள் பயிற்சி மாணவர்களின் வாயிலாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. பலமாவட்டங்களிலிருந்து வருகை தந்து பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் 2.15 மணி நேரம் இடை நில்லாது மின்னொளி சிலம்பத்தை சுற்றி ஆஸ்கர் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினர்.

    இந்த சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு ஆஸ்கர் புத்தக நிறுவனர் கதிரவன் சாதனைக்கான சான்றிதழ்க ளையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

    ஆசான் கருணாகரனுக்கு கலை வித்தகர் விருதும், மற்ற ஆசான்களுக்கு நினைவு பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டது. திருக்குறள் ஒப்புவித்தும், உலகநாடு களின் தேசிய கொடிகளை பார்த்து அந்த நாட்டின் பெயரை சொல்லியபடி சிலம்பம் சுற்றிய அதிரதனுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை செந்தில்குமார் செய்தி ருந்தார்.

    • லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
    • அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை, ஆடலூர், பெரியூர், பாச்சலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கே.சி.பட்டி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் லாரி, கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் அவர்களும் சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் கே.சி.பட்டி பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்களால் கட்டப்பட்ட பாலங்கள் ஆகும். தற்போது இந்த பாலம் இடிந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் மற்றும் ஓட்டை விழுந்து உள்ளது.
    • அரசு நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நூத்துலாபுரம் ஊராட்சியில் உள்ள குளத்துப்பட்டி பிரிவிலி ருந்து விராலிப்பட்டி வரை சுமார் 3 கி.மீ. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை அமைந்துள்ள பகுதிகளில் குளத்துப்பட்டி பிரிவை அடுத்துள்ள பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் 3 பாலங்கள் உள்ளது.

    இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்களால் கட்டப்பட்ட பாலங்கள் ஆகும். தற்போது இந்த பாலம் இடிந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் மற்றும் ஓட்டை விழுந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த சாலையை குளத்துப்பட்டி, சீத்தாபுரம், விராலிப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சேவுகம்பட்டி, தும்மலப்ப ட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க தற்போது அரசு நிதி ஒதுக்க ப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அரசு நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பணியை விரைந்து தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று இரவு திடீரென தீப்பற்றி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் எந்திரங்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நத்தம்:

    நத்தம் அருகே முளையூர்-நரசிம்மபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மட்டை மில் உள்ளது. இங்கு நேற்று இரவு திடீரென தீப்பற்றி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நிலைய அலுவலர் (பொறுப்பு) அம்சராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் எந்திரங்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    நத்தம்:

    நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, வ.புதூர், பெரியூர்பட்டி, மாமரத்துப்பட்டி, கோவில்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூர், களத்துப்பட்டி, கருத்த நாயக்கன்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டூர், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் புதூர், பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரை கவுண்டன்பட்டி, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, தட்டாமடைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ஒன்றிய பா.ஜ.க. சார்பாக பாச்சலூர், தாண்டிக்குடி பகுதியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பாச்சலூர் கிளை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் பசுபதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒன்றிய உறுப்பினர் அர்ஜுணன் நன்றி கூறினார்.

    • 22ம் தேதி காலை தேரடி திருவிழா, மாலையில் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு மின் ரத தேர் பவனி நடைபெற்றது.
    • திருவிழாவிற்கு வந்த அமைச்சர் இ.பெரியசாமிக்கு விழா கமிட்டி சார்பாக உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் புனித மரிய மதலேனால் ஆலய 168 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா நடைபெற்றது. 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 19, 20ம் தேதிகளில் திருப்பலியும், 21ம் தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. 22ம் தேதி காலை தேரடி திருவிழா, மாலையில் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு மின் ரத தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    திருவிழாவிற்கு வந்த அமைச்சர் இ.பெரியசாமிக்கு விழா கமிட்டி சார்பாக உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தேவாலயத்திற்கு சென்ற அமைச்சரை பங்குத்தந்தை சேவியர்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். அங்கு பேசிய அமைச்சர் தமிழகத்தில் தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது தி.மு.க. அரசு மட்டும் தான். தேவாலயம் முன்பு உள்ள மைதானத்திற்கு பேவர் பிளாக் கற்கள் சாலையும், ஹை மாஸ் விளக்கும் கேட்டுள்ளனர். உடனடியாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.

    விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • வாலிபரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வாசலில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டுள்ள எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க மர்ம நபர் முயன்றுள்ளார். அப்போது எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் அடித்துள்ளது. இருந்தபோதும் ஏ.டி.எம். மிஷினை உடைக்க முடியாததால் கொள்ளையன் வேகமாக வெளியேறினார். இதையடுத்து அலாரம் அடித்து வங்கி மேலாளருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனால் வங்கி மேலாளர் சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் கொள்ளையனை தேடும் பணியில் இறங்கினர். அப்போது வங்கி அருகில் இருந்த 2 செல்போன் கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த ரூ.16,000 பணம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் உடமைகளை சோதித்த போது செல்போன்கள் மற்றும் திருடு போன ரூ.16 ஆயிரம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதையும், செல்போன் கடையில் கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டார்.

    அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

    விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சூரியகாந்தி (வயது 21) என தெரிய வந்தது. அவரை கைது செய்து இவர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    ×