என் மலர்
திண்டுக்கல்
- பணம் கொடுத்தால் கூட்டுறவுத் துறையில் தெரிந்த நபர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
- இதையடுத்து கூட்டுறவுத் துறையில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை பாண்டியராஜன் கொடுத்ததின் பேரில் கூட்டுறவுத் துறையில் விசாரித்த போது அது போலி உத்தரவு என்பது தெரிய வந்தது.
ள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசேனா (வயது 42).இவர் பட்டப்படிப்பு படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.அவருடைய தங்கை தீபலட்சுமி,தம்பி ராஜ்குமார் ஆகியோரும் படித்துவிட்டு அரசு வேலையில் சேர படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (50) அவருடைய மனைவி ஜான்சி ராணி (46) ஆகியோரின் அறிமுகம் தேவசேனாவுக்கு கிடைத்தது.
தேவசேனா உள்பட 3 பேரை அரசு வேலையில் சேர ஆர்வமுடன் முயற்சி செய்து வருவதை பாண்டியராஜன்,ஜான்சிராணி தெரிந்து கொண்டனர்.இதையடுத்து பணம் கொடுத்தால் கூட்டுறவுத் துறையில் தெரிந்த நபர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.அதை உண்மை என நம்பிய தேவசேனா உள்ளிட்ட 3 பேரும் மொத்தம் ரூ.12 லட்சத்தி 45 ஆயிரம் பணத்தை கொடுத்தனர்.
இதையடுத்து கூட்டுறவுத் துறையில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை பாண்டியராஜன் கொடுத்துள்ளார்.கூட்டுறவுத் துறையில் விசாரித்த போது அது போலி உத்தரவு என்பது தெரிய வந்தது.இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 3 பேரும் பாண்டியராஜன் ஜான்சிராணியிடம் தாங்கள் கொடுத்த பணத்தைக் தொடர்ந்து கேட்டு வந்தனர்.இந்த நிலையில் பணத்தை கொடுக்காமல் பாண்டியராஜன்,ஜான்சி ராணி காலதாமதம் செய்து வந்தனர்.
ஆகவே இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தேவசேனா உள்ளிட்ட 3 பேர் புகார் அளித்தனர்.அதன் பேரில் மாவட்ட கூட்டுறவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா,சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் பாண்டியராஜன், ஜான்சி ராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் பாண்டியராஜன் மனைவி ஜான்சிராணியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சமீபகாலமாக காட்டெருமைகள் குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
- மேலும் விவசாயிகள், கூலிதொழிலாளர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரைகளை முட்டி கொன்று விடுகின்றன
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, கானக்காடு, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுயானை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் வலம் வருகின்றன.
சமீபகாலமாக காட்டெருமைகள் குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் விவசாயிகள், கூலிதொழிலாளர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரைகளை முட்டி கொன்று விடுகின்றன. நேற்று தடியன்குடிசை- பெரும்பாறை இடையே பஸ்சை வழிமறித்து சாலையில் காட்டெருமை சாலையில் நின்றது.
அதை பஸ்சில் சென்ற பயணிகள் செல்போனில் படம்பிடித்தனர்.பின்னர் சிறிது நேரம் கழித்து அது வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பஸ் புறப்பட்டு சென்றது.
- மழைக்காலங்களில் மட்டுமே இதுபோன்ற சூழல் ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது மழை இல்லாத நேரத்திலும் கழிவுநீர் தேங்கியிருப்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களையும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.
- ஏற்கனவே பலருக்கு கொசுக்களால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் உருவாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட விவேகானந்தாநகர், அண்ணாநகர் சாலை சந்திக்கும் சுப்ரீம்நகரில் கடந்த பல ஆண்டுகளாக மேன்ஹோல் பிரச்சினை இருந்து வருகிறது. பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழியிலிருந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதற்காக மாநகராட்சி சார்பில் அடைப்பை சரிசெய்யும் பணி நடந்தது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதேபகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த சாலையை கடந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அவர்கள் தேங்கியுள்ள கழிவுநீரை மிதித்தபடியே செல்வதால் ேநாய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மட்டுமே இதுபோன்ற சூழல் ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது மழை இல்லாத நேரத்திலும் கழிவுநீர் தேங்கியிருப்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களையும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.
ஏற்கனவே பராமரிப்பு பணிகள் அரைகுறையாக நடந்ததால் இதுபோன்ற அவலம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் நகரில் மழை பெய்யும்பட்சத்தில் இப்பகுதியில் மேலும் தண்ணீர் தேங்கிவிடும். ஏற்கனவே பலருக்கு கொசுக்களால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் உருவாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே போர்க்கால அடிப்படையில் இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி இந்த ஆண்டில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும், குடிநீர் வசதி முழுமையாக வழங்குவதற்கு ஒரு பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் மாநகராட்சியில் ஜி.டி.என் சாலை மிகவும் பிரதான சாலை மட்டுமின்றி அதிகளவிலான பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் மின் விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டு,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டுள்ளது
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜி.டி.என்.சாலையில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் அமைச்சர் இ.பெரியசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்
விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும், குடிநீர் வசதி முழுமையாக வழங்குவதற்கு ஒரு பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு முழு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.தமிழகம் முழுவதும் 10,000 கி.மீ அளவிற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவிலான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாநகராட்சியில் ஜி.டி.என் சாலை மிகவும் பிரதான சாலை மட்டுமின்றி கடந்த 25 ஆண்டுகளாக தினமும் அதிகளவிலான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 2009-10-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.தற்போது இந்த சாலையில் மின் விளக்கு வசதிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இந்த மின் விளக்கு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன்,திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, கோட்டாட்சியர் கமலக்கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கே.கே. ஆர்.வெங்கடேஷ்,எம். சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஏற்கனவே பாக்கியநாதனுக்கும் தங்கப்பாண்டிக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் வாய் தகராறு செய்து பின்னர் முற்றியது.
- தங்க பாண்டியனை அந்த தம்பதியினர் தாக்கியும் அவர் வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்ப ட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 75). விவசாயி. இவர் வீட்டின் அருகே உள்ள பாக்கியநாதன் மகன் விஷ்ணு அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்து தங்கபாண்டியன் பாக்கியநாதனை அழைத்து உனது மகன் வந்து விளையாடுவதால் எங்கள் வீடுகளில் கல் விழுகிறது.
ஆகையால் சற்று தள்ளி போய் விளையாடச் சொல் என்று கூறி உள்ளார். ஏற்கனவே பாக்கிய நாதனுக்கும் தங்கப்பா ண்டிக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் வாய் தகராறு செய்து பின்னர் முற்றியது. தங்க பாண்டியனை பாக்கிய நாதன் மற்றும் அவரது மனைவி முனீஸ்வரி இருவரும் தாக்கியும் கல்லெடுத்து தாக்கி உள்ளனர். மேலும் தங்க ப்பாண்டியன் வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தங்க பாண்டியன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் படி பாக்கியநாதன் முனீஸ்வரி ஆகிய 2 பேர் மீது விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இதுவரை சிப்காட் அமைக்கப்பட்ட திண்டுக்கல், பெருந்துறை, திருப்பூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் காற்று மற்றும் நீர் மாசுபட்டு அதிகளவில் தோல்நோய்கள், புற்று நோய்கள் மற்றும் குழந்தையின்மை ஏற்பட்டு தனிமனித ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.
- விளை நிலங்களையும், மக்களையும் பாதிக்கும் சிப்காட் அமைக்கப்படு வதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும், அதனையும் மீறி சிப்காட் அமைய நேர்ந்தால் விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய தாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூர், கள்ளிமந்தையம், சிக்கமநாயக்கன்பட்டி, கொத்தயம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சிப்காட் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம் என்றாலே விவசாயம் சார்ந்த பூமியாகும். இப்பகுதிகளில் இருந்துதான் அனைத்து வகையான காய்கறிகள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சிப்காட் அமைந்தால் நிலத்தடி நீர், காற்று மாசடைவதோடு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 5 முதல் 25 கிலோ மீட்டர் வரை நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும். இதுவரை சிப்காட் அமைக்கப்பட்ட திண்டுக்கல், பெருந்துறை, திருப்பூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் காற்று மற்றும் நீர் மாசுபட்டு அதிகளவில் தோல்நோய்கள், புற்று நோய்கள் மற்றும் குழந்தையின்மை ஏற்பட்டு தனிமனித ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒட்டன்சத்திரம் பகுதியில் சிப்காட் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமெனவும், எங்களுக்கு விவசாயம் தான் வேண்டும். சிப்காட் வேண்டாம் என கப்பல்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அமைச்சர் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்துவரும் வேளையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விளை நிலங்களையும், மக்களையும் பாதிக்கும் சிப்காட் அமைக்கப்படு வதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும், அதனையும் மீறி சிப்காட் அமைய நேர்ந்தால் விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய தாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிகள் மார்க்கெட் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்ட சிப்காட் எதிர்ப்பு விவசாயிகளுக்கு மார்க்கெட் சங்கம் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவாக இருந்தாலும் அதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதி அளித்துள்ளனர்.
- வீட்டில் மாரிமுத்து தகராறு செய்ததை மாமியார் பேசியம்மாள் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மாமியார் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார்
- பலத்த காயங்களுடன் அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
நிலக்கோட்ைட:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள அய்யங்கோ ட்டையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் பிரியாவுக்கும், நிலக்கோட்ைட பெரியார் நகரை சேர்ந்த மாரிமுத்து (32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வீட்டில் மாரிமுத்து தகராறு செய்ததை மாமி யார் பேசியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மாமியார் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார். பலத்த காயங்களுடன் அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாணவ மாணவிகளுக்கு சரியான நேரத்திற்கு நிலக்கோட்டை, திண்டுக்கல் அரசு பஸ் கடந்த 2 மாதங்களாக சரிவராததால் மாணவ -மாணவி கள் மற்றும் திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டுக்கு வரும விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர்.
- கடந்த ஆண்டுகளில் வந்த அந்த அத்தனை பஸ்களும் சரியான நேரத்திற்கும் வருவதற்கும், கூடுதலாக பஸ் இயக்கவும், மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வுக்கு உட்பட்ட அணை ப்பட்டி, விளாம்பட்டி, சிலுக்குவார் பட்டி, பள்ள ப்பட்டி, தோப்புப்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திண்டுக்கல்லில் படிப்ப தற்காக மாணவ மாணவிகள் கல்லூரிக்கும் பள்ளி களுக்கும் தினந்தோறும் சென்று வருகின்றனர்.
அவ்வாறு வரும் மாணவ மாணவிகளுக்கு சரியான நேரத்திற்கு நிலக்கோட்டை, திண்டுக்கல் அரசு பஸ் கடந்த 2 மாதங்களாக சரிவர வருவதில்லை. இதன் காரணமாக மாணவ மாணவி கள் பாதிக்கப்படு கின்றனர். அதேபோன்று நிலக்கோட்டையில் இருந்த திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டுக்கு தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பஸ்ஸில் சென்று வருவது வழக்கம்.
நிலக்கோட்டையை பொறுத்தவரை குறைந்த அளவே திண்டுக்கல் பஸ்கள் உள்ளன. இந்தக் குறைந்த அளவு பஸ்கள் கூட கடந்த 2 மாதங்களாக சரிவர வருவதில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காலை நேரத்தில் அரசு பஸ் வராத காரணத்தால் தனியார் பஸ்களில் ஏறு வதற்கு ஒருவருக்கொருவர் மல்லு கட்டி சண்டை போடுவது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாக மாறி வருகிறது. எனவே கடந்த ஆண்டுகளில் வந்த அந்த அத்தனை பஸ்களும் சரியான நேரத்திற்கும் வருவதற்கும், கூடுதலாக பஸ் இயக்கவும், மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மகளிருக்கு இலவச பஸ் இயக்கப்படுவதால்தான் இப்படி பஸ்களை குறைந்த அளவில் அனுப்புகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். மேலும் போக்குவரத்துக் கழகத்தில் ஏராளமான காலியிடங்கள் இருப்பதால் பல இடங்க ளுக்கு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து சிலுக்கு வார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜாராம் கூறிய தாவது:-
திண்டு க்கல்லுக்கு தினந்தோ றும் பஸ் இயக்கு வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. இதனை உரிய முறையில் ஆய்வு செய்து ஏற்கனவே விடப்பட்ட பஸ்கள் சரியான நேரத்தில் வருவதற்கும், அதே சமயம் தற்சமயம் மக்கள் தொகை கூடியுள்ள நிலையில் அதற்கு தகுந்தாற்போல் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
- காலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சமயங்களில் மின்னல் வேகத்தில் லாரிகள் செல்வதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
- லாரி டிரைவர்களிடம் காலை நேரத்தில் லாரிகள் உள்ளே வரக் கூடாது. பள்ளி சமயத்தில் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பழனி:
பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக அதிக அளவு லாரிகள் சென்று வருகின்றன. இந்த லாரிகள் ஊருக்குள் அதிக வேகத்தில் ெசல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக காலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சமயங்களில் மின்னல் வேகத்தில் லாரிகள் செல்வதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் லாரிகள் செல்லும் போது புழுதி பறக்க விட்டு செல்வதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி நேரத்தில் லாரிகள் ஊருக்குள் வருவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். லாரி டிரைவர்களிடம் காலை நேரத்தில் லாரிகள் உள்ளே வரக் கூடாது. பள்ளி சமயத்தில் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் சோனையன் அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத 33 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் சோனையன் (வயது 54). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத 33 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் சோனையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பில் ஜோதி ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட சோனையனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.
- பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து மேக மூட்டமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து குளிச்சியான காற்று மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ள போதிலும் அவர்கள் குளிர்ச்சியான சூழலை சைக்கிளில் சென்று ரசித்து வருகின்றனர். சாரல் மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியடைந்துள்ளனர்.
கொடைக்கானல், மேல்மலை, கீழ் மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை, பேத்துப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருவதால் அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கமாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ஆனால் தற்போது குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்ததாலும் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரம்யமான அழகை ரசித்து செல்கின்றனர்.
இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார்
- இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே குடகிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேனீ வளர்க்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
இதற்கு சீட்ஸ் டிரஸ்ட் நிறுவன இயக்குநர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி கலந்து கொண்டு தேனீக்கள் வளர்க்கும் 19 குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கி பேசினார். இதில் தேனீ வளர்ப்பு குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






