என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் விவேகானந்தா நகரில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை கடக்கும் மாணவர்கள்
    X

    கழிவுநீரை கடந்து செல்லும் மாணவர்கள்.

    திண்டுக்கல் விவேகானந்தா நகரில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை கடக்கும் மாணவர்கள்

    • மழைக்காலங்களில் மட்டுமே இதுபோன்ற சூழல் ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது மழை இல்லாத நேரத்திலும் கழிவுநீர் தேங்கியிருப்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களையும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.
    • ஏற்கனவே பலருக்கு கொசுக்களால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் உருவாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட விவேகானந்தாநகர், அண்ணாநகர் சாலை சந்திக்கும் சுப்ரீம்நகரில் கடந்த பல ஆண்டுகளாக மேன்ஹோல் பிரச்சினை இருந்து வருகிறது. பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழியிலிருந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    இதற்காக மாநகராட்சி சார்பில் அடைப்பை சரிசெய்யும் பணி நடந்தது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதேபகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த சாலையை கடந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    அவர்கள் தேங்கியுள்ள கழிவுநீரை மிதித்தபடியே செல்வதால் ேநாய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மட்டுமே இதுபோன்ற சூழல் ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது மழை இல்லாத நேரத்திலும் கழிவுநீர் தேங்கியிருப்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களையும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.

    ஏற்கனவே பராமரிப்பு பணிகள் அரைகுறையாக நடந்ததால் இதுபோன்ற அவலம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    திண்டுக்கல் நகரில் மழை பெய்யும்பட்சத்தில் இப்பகுதியில் மேலும் தண்ணீர் தேங்கிவிடும். ஏற்கனவே பலருக்கு கொசுக்களால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் உருவாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே போர்க்கால அடிப்படையில் இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×