என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempt to set chipcode"

    • இதுவரை சிப்காட் அமைக்கப்பட்ட திண்டுக்கல், பெருந்துறை, திருப்பூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் காற்று மற்றும் நீர் மாசுபட்டு அதிகளவில் தோல்நோய்கள், புற்று நோய்கள் மற்றும் குழந்தையின்மை ஏற்பட்டு தனிமனித ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • விளை நிலங்களையும், மக்களையும் பாதிக்கும் சிப்காட் அமைக்கப்படு வதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும், அதனையும் மீறி சிப்காட் அமைய நேர்ந்தால் விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய தாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூர், கள்ளிமந்தையம், சிக்கமநாயக்கன்பட்டி, கொத்தயம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சிப்காட் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒட்டன்சத்திரம் என்றாலே விவசாயம் சார்ந்த பூமியாகும். இப்பகுதிகளில் இருந்துதான் அனைத்து வகையான காய்கறிகள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சிப்காட் அமைந்தால் நிலத்தடி நீர், காற்று மாசடைவதோடு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படும்.

    அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 5 முதல் 25 கிலோ மீட்டர் வரை நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும். இதுவரை சிப்காட் அமைக்கப்பட்ட திண்டுக்கல், பெருந்துறை, திருப்பூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் காற்று மற்றும் நீர் மாசுபட்டு அதிகளவில் தோல்நோய்கள், புற்று நோய்கள் மற்றும் குழந்தையின்மை ஏற்பட்டு தனிமனித ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஒட்டன்சத்திரம் பகுதியில் சிப்காட் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமெனவும், எங்களுக்கு விவசாயம் தான் வேண்டும். சிப்காட் வேண்டாம் என கப்பல்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அமைச்சர் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்துவரும் வேளையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விளை நிலங்களையும், மக்களையும் பாதிக்கும் சிப்காட் அமைக்கப்படு வதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும், அதனையும் மீறி சிப்காட் அமைய நேர்ந்தால் விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய தாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிகள் மார்க்கெட் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்ட சிப்காட் எதிர்ப்பு விவசாயிகளுக்கு மார்க்கெட் சங்கம் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவாக இருந்தாலும் அதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதி அளித்துள்ளனர்.

    ×