search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 12 lakh fraud"

    • பணம் கொடுத்தால் கூட்டுறவுத் துறையில் தெரிந்த நபர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
    • இதையடுத்து கூட்டுறவுத் துறையில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை பாண்டியராஜன் கொடுத்ததின் பேரில் கூட்டுறவுத் துறையில் விசாரித்த போது அது போலி உத்தரவு என்பது தெரிய வந்தது.

    ள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசேனா (வயது 42).இவர் பட்டப்படிப்பு படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.அவருடைய தங்கை தீபலட்சுமி,தம்பி ராஜ்குமார் ஆகியோரும் படித்துவிட்டு அரசு வேலையில் சேர படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (50) அவருடைய மனைவி ஜான்சி ராணி (46) ஆகியோரின் அறிமுகம் தேவசேனாவுக்கு கிடைத்தது.

    தேவசேனா உள்பட 3 பேரை அரசு வேலையில் சேர ஆர்வமுடன் முயற்சி செய்து வருவதை பாண்டியராஜன்,ஜான்சிராணி தெரிந்து கொண்டனர்.இதையடுத்து பணம் கொடுத்தால் கூட்டுறவுத் துறையில் தெரிந்த நபர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.அதை உண்மை என நம்பிய தேவசேனா உள்ளிட்ட 3 பேரும் மொத்தம் ரூ.12 லட்சத்தி 45 ஆயிரம் பணத்தை கொடுத்தனர்.

    இதையடுத்து கூட்டுறவுத் துறையில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை பாண்டியராஜன் கொடுத்துள்ளார்.கூட்டுறவுத் துறையில் விசாரித்த போது அது போலி உத்தரவு என்பது தெரிய வந்தது.இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 3 பேரும் பாண்டியராஜன் ஜான்சிராணியிடம் தாங்கள் கொடுத்த பணத்தைக் தொடர்ந்து கேட்டு வந்தனர்.இந்த நிலையில் பணத்தை கொடுக்காமல் பாண்டியராஜன்,ஜான்சி ராணி காலதாமதம் செய்து வந்தனர்.

    ஆகவே இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தேவசேனா உள்ளிட்ட 3 பேர் புகார் அளித்தனர்.அதன் பேரில் மாவட்ட கூட்டுறவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா,சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் பாண்டியராஜன், ஜான்சி ராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் பாண்டியராஜன் மனைவி ஜான்சிராணியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ருது ஸ்ரீ தனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் ருது ஸ்ரீ(24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலமாக வும் பல்வேறு தொழில் முதலீடுகளை பார்த்து வருகிறார்.அப்போது ஒரு நிறுவனத்தின் தொழில் முதலீடு தொடர்பான ஒரு அறிவிப்பு வந்தது.

    இதில் பணத்தை முதலீடு செய்ய ருது ஸ்ரீ விருப்பம் தெரிவித்தார்.‌ அப்போது அந்த நிறுவனத்தினர் ஒரு லிங்க் அனுப்பி அதில் உள்ள விபரங்கள் அடிப்படையில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறினார்.‌

    இதனை உண்மை என நம்பிய ருது ஸ்ரீ ரூ.12.06 லட்சத்தை அந்த நிறுவனத்தினர் கூறிய வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார். சில நாட்களுக்கு பின்னர் அது போலி வெப்சைட் மூலம் தகவல் அனுப்பி பணம் பறிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ருது ஸ்ரீ புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×