search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல் அருகே கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

    • பணம் கொடுத்தால் கூட்டுறவுத் துறையில் தெரிந்த நபர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
    • இதையடுத்து கூட்டுறவுத் துறையில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை பாண்டியராஜன் கொடுத்ததின் பேரில் கூட்டுறவுத் துறையில் விசாரித்த போது அது போலி உத்தரவு என்பது தெரிய வந்தது.

    ள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசேனா (வயது 42).இவர் பட்டப்படிப்பு படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.அவருடைய தங்கை தீபலட்சுமி,தம்பி ராஜ்குமார் ஆகியோரும் படித்துவிட்டு அரசு வேலையில் சேர படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (50) அவருடைய மனைவி ஜான்சி ராணி (46) ஆகியோரின் அறிமுகம் தேவசேனாவுக்கு கிடைத்தது.

    தேவசேனா உள்பட 3 பேரை அரசு வேலையில் சேர ஆர்வமுடன் முயற்சி செய்து வருவதை பாண்டியராஜன்,ஜான்சிராணி தெரிந்து கொண்டனர்.இதையடுத்து பணம் கொடுத்தால் கூட்டுறவுத் துறையில் தெரிந்த நபர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.அதை உண்மை என நம்பிய தேவசேனா உள்ளிட்ட 3 பேரும் மொத்தம் ரூ.12 லட்சத்தி 45 ஆயிரம் பணத்தை கொடுத்தனர்.

    இதையடுத்து கூட்டுறவுத் துறையில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை பாண்டியராஜன் கொடுத்துள்ளார்.கூட்டுறவுத் துறையில் விசாரித்த போது அது போலி உத்தரவு என்பது தெரிய வந்தது.இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 3 பேரும் பாண்டியராஜன் ஜான்சிராணியிடம் தாங்கள் கொடுத்த பணத்தைக் தொடர்ந்து கேட்டு வந்தனர்.இந்த நிலையில் பணத்தை கொடுக்காமல் பாண்டியராஜன்,ஜான்சி ராணி காலதாமதம் செய்து வந்தனர்.

    ஆகவே இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தேவசேனா உள்ளிட்ட 3 பேர் புகார் அளித்தனர்.அதன் பேரில் மாவட்ட கூட்டுறவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா,சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் பாண்டியராஜன், ஜான்சி ராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் பாண்டியராஜன் மனைவி ஜான்சிராணியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×