மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை

வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் சோனையன் அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத 33 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் சோனையன் (வயது 54). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத 33 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் சோனையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

அரசு தரப்பில் ஜோதி ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட சோனையனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com