என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
நிலக்கோட்ைட அருகே முதியவர் வீட்டை சூறையாடிய தம்பதி மீது வழக்கு
- ஏற்கனவே பாக்கியநாதனுக்கும் தங்கப்பாண்டிக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் வாய் தகராறு செய்து பின்னர் முற்றியது.
- தங்க பாண்டியனை அந்த தம்பதியினர் தாக்கியும் அவர் வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்ப ட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 75). விவசாயி. இவர் வீட்டின் அருகே உள்ள பாக்கியநாதன் மகன் விஷ்ணு அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்து தங்கபாண்டியன் பாக்கியநாதனை அழைத்து உனது மகன் வந்து விளையாடுவதால் எங்கள் வீடுகளில் கல் விழுகிறது.
ஆகையால் சற்று தள்ளி போய் விளையாடச் சொல் என்று கூறி உள்ளார். ஏற்கனவே பாக்கிய நாதனுக்கும் தங்கப்பா ண்டிக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் வாய் தகராறு செய்து பின்னர் முற்றியது. தங்க பாண்டியனை பாக்கிய நாதன் மற்றும் அவரது மனைவி முனீஸ்வரி இருவரும் தாக்கியும் கல்லெடுத்து தாக்கி உள்ளனர். மேலும் தங்க ப்பாண்டியன் வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தங்க பாண்டியன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் படி பாக்கியநாதன் முனீஸ்வரி ஆகிய 2 பேர் மீது விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






